கபாலி போன்றே அடுத்த படத்திலும் வயதான தோற்றத்தில் ரஜினி!

இந்தியச் சினிமா
Typography

சென்னை, ஏப்ரல் 16- இருபது வயதில் கதாநாயகிகளுடன் ஆடிக் கொண்டிருந்த ரஜினி கபாலி படத்தில் வயதான வேடத்தில் நடித்த பிறகு அப்பாத்திரமே அவருக்கு சரியாக இருக்கும் என ரசிகர்கள் கருதும் நிலை ஏற்பட்டுவிட்டது. 

தற்போது ரஜினி நடித்துக் கொண்டிருக்கும் 2.0 படத்தில் ரஜினி நடித்துக் கொண்டிருக்கும் நிலையில் அப்படத்தில் அவரின் கதாபாத்திரம் என்னவென்று தெரியவில்லை. இந்நிலையில், அடுத்து மீண்டும் ரஜினியும் இயக்குனர் பா.ரஞ்சித்தும் இணையும் படத்தில் ரஜினி வயதான கதாபாத்திரத்தில் நடிக்கவிருப்பதாக கூறப்படுகிறது. 

கபாலி கதாபாத்திரத்தை விட இந்த படத்தில் ரஜினியின் கதாபாத்திரம் வலுவாக இருக்குமாம். இதற்காகவே ரஜினிக்கு ஸ்பெஷல் தோற்றம் தயார் செய்யப்பட்டுள்ளதாம்.

BLOG COMMENTS POWERED BY DISQUS