'என் ஆளோட செருப்பக் காணோம்' - சத்தியமா இது படத் தலைப்புங்க..!

இந்தியச் சினிமா
Typography

சென்னை, ஏப்ரல் 19- வித்தியாசம் வேண்டும் என கூறி கூறியே எது வித்தியாசம் என்பதே தெரியாமல் போய்விட்டது தமிழ்ப்பட தலைப்புகளில். விஜய் நடித்த புதிய கீதை படத்தின் இயக்குனரின் புதிய படத்தின் தலைப்பு என்ன தெரியுமா? என் ஆளோட செருப்பக் காணோம்..!

அண்மைய காலமாக தமிழ்ப்படங்களின் தலைப்புகளுக்கு பஞ்சம் ஏற்பட்டு விட்டதோ என தோன்றுகிறது. அல்லது வித்தியாசம் என்ற பெயரில் எதையாவது வைத்தால் அதை ரசிகர்கள் ரசிப்பார்கள் என்று நினைத்தார்களோ என்னவோ.

கயல் படத்தில் நடித்த ஆனந்தி புதுமுக நடிகருடன் நடிக்கும் புதுப்படத்திற்கு தான் இந்த தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. 

ரசிகர்களைக் கவர வேண்டும் என்ற எண்ணத்தில் பெயர் வைத்தாலும், ரசிகர்கள் என்னவோ படத்தின் தலைப்பினை வஞ்சகமே இல்லாமல் திட்டி தீர்த்துள்ளனர் தனது சமூக வலைத்தளங்களில். படத்தின் போஸ்டரை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்துள்ள ரசிகர்கள் அதில், 'நல்லா வைக்கிறாய்ங்கய்யா டைட்டிலை' எனவும் 'தமிழ் சினிமாவுக்கு வந்த சோதனை' எனவும் குறிப்பிட்டுள்ளனர்.

இன்னும் என்ன என்ன தலைப்புகள் வைக்கப்படுமோ..! அந்த ஆண்டவனுக்கே வெளிச்சம்!

BLOG COMMENTS POWERED BY DISQUS