சென்னை, பிப்.16- அதிஷ்டம் யாருக்கு எப்படி எந்த வகையில் வரும் என்று யாருக்கும் தெரியாது. அப்படி தான் புருவ அழகி பிரியா வாரியாருக்கும். இந்த புருவ அழகி மலையாள உலகின் இளம் நட்சத்திரம் துல்கர் சல்மானை கூட ஓரங்கட்டி விட்டது.

ஒரு ஆதார் லவ் என்ற படத்தின் பாடல் மூலம் பிரபலமான பிரியா தான் தற்போது சமூக வலைத்தளங்களில் டிரண்டிங்கில் முதல் நிலையில் இருக்கிறார். இவரின் கண்ணசைவில் மயங்கிய ரசிகர்கள் இவரை இன்ஸ்டாகிராமில் அதிகம் தேடி வருகின்றனர்.

எப்படி தெரியுமா? கடந்த ஒரு வாரத்தில் அதிகம் தேடப்பட்டவர் பட்டியலில் முதலிடத்தில் இருக்கும் பிரியாவை 30 லட்சத்திற்கும் மேற்பட்டோர் இன்ஸ்டாகிராமில் அவரின் ரசிகர்கள் ஆகியிருக்கின்றனர்.

இதில் என்ன? இதற்கு முன்னர் மலையாள திரையுலகை பொருத்தவரை இன்ஸ்டாகிராமில் அதிக பின்தொடர்பவர்களை வைத்திருந்தவர் துல்கர் தான். அதாவது 19 லட்சம் பேர். ஆனால் அவரின் சாதனை பிரியா தூக்கி சாப்பிட்டுவிட்டார். 

சென்னை, பிப்.15- பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு ஓவியா 'வேற மாதிரி' மாறி பல மாதங்கள் ஆகிவிட்டன. கைவசம் நிறைய படங்கள் இருக்க, அடுத்ததாக சிம்புவுடன் ஓவியா இணைந்துள்ளார்.

தற்போது ராகவா லாரன்ஸ் உடன் காஞ்சனா 3 படத்தில் நடித்து வரும் ஓவியா, சீனி, சிலுக்குவார்பட்டி சிங்கம், ஓவியா விட்டா யாரு, களவாணி 2 ஆகிய படங்களில் ஒப்பந்தம் ஆகி நடித்து வருகிறார். 

இந்நிலையில், அவர் அடுத்ததாக நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ள படம் '90 மில்லி'. படத்தலைப்பு ஒரு மாதிரியாக இருக்கிறது என்று நினைக்கிறீர்களா? இதனை உறுதி செய்ய காதலர் தினமான நேற்று முதல் பார்வை போஸ்டர் வெளியிடப்பட்டது. 

முதல் பார்வை போஸ்டரில் ஓவியா தேநீர் கடை ஒன்றில் ஒய்யாரமாக உட்கார்ந்து தேநீரும் ரொட்டியும் சாப்பிடுவது போலவும் அருகே ஒருவர் தேநீர் கலக்குவது போலவும் காட்சியமைக்கப்பட்டுள்ளது.இப்படத்தை 'குளிர் 100 டிகிரி' படத்தை இயக்கிய அனிதா உதீப் தயாரித்து இயக்கவிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

படத்தின் பெயர் 90 மில்லி என்றும் இப்படத்திற்கு சிம்பு இசையமைக்கவிருப்பதாகவும் செய்தி வெளியாகியுள்ளது. அண்மையில் சிம்பு இசையமைத்த பாடலில் ஓவியா பாடியது நல்ல வரவேற்பைப் பெற்றதை அடுத்து இருவரும் மீண்டும் இணைந்துள்ளனர்.

இப்படம் கதாநாயகிக்கு முக்கியத்துவம் தரும் படம் என்பதால் நயன்தாரா போல ஓவியாவும் பெரிய அளவில் பேசப்படுவார் என ஓவியா ஆர்மியினர் முதல் பார்வை போஸ்டரைப் பகிர்ந்து வருகின்றனர்.

சென்னை, பிப்.9- கட்டப்பட்டு வரும் நடிகர் சங்க கட்டடத்தின் திருமண மண்டபத்தில் அடுத்த ஜனவரி மாதம் தனது திருமணம் தான் முதல் திருமணமாக நடக்கும் என நடிகர் விஷால் கூறியுள்ளார்.

தென்னிந்திய நடிகர் சங்க செயலாளரும் தயாரிப்பாளர் சங்கத் தலைவருமான விஷால் சென்னை விமான நிலையத்தில் நிருபர்களுக்குப் பேட்டி அளித்தார். அப்போது நடிகர் சங்க கட்டட பணி குறித்து நிருபர்கள் கேட்ட கேள்விக்கு விஷால் மேற்கண்டவாறு பதிலளித்தார்.

"நடிகர் சங்க கட்டட பணிகள் இந்த ஆண்டு டிசம்பர் மாதத்திற்குள் முடிந்து விடும். அடுத்தாண்டு ஜனவரி மாதம் கட்டட திறப்பு விழா கண்டிப்பாக நடக்கும். புதிய கட்டத்தில் அமைய இருக்கும் திருமண மண்டபத்தில் முதல் திருமணமாக எனது திருமணம் தான் முதல் திருமணமாக நடக்கும். அதற்காக இப்போதே முன்பதிவு செய்துவிட்டேன்" என்று கூறினார்.

திருமணம் ஜனவரி என்றாகி விட்டது அப்போது விஷாலுக்கு ஜோடி யார் என்று என்ற கேள்வியை ரசிகர்கள் எழுப்பியுள்ளனர்.

சென்னை, பிப்.6-இயக்குனர் சிவா இயக்கத்தில் அஜித்  நடிக்கவிருக்கும் ‘விஸ்வாசம்’ படத்தில் அவருக்கு  ஜோடியாக நயந்தாரா ஒப்பந்தமானது எப்படி என்பது குறித்த  தகவல் வெளியாகி இருக்கிறது.

அஜித்துடன் இயக்குனர் சிவா 4-ஆவது முறையாக இணையும் படம் ‘விஸ்வாசம்’. இதன் படப்பிடிப்பு மார்ச் 15-ந்  தேதி  தொடங்கும் என்று படக்குழு  அறிவித்துள்ளது.

‘விவேகம்’ படத்தை  தயாரித்த சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் இந்த படத்தையும்  தயாரிக்கிறது. இதில் அஜித் ஜோடி யார் என்பது குறித்து குழப்பம் நீடித்தது.

இந்நிலையில் ‘விஸ்வாசம்’ படத்தில் அஜித் ஜோடி நயன்தாரா என்று படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.ஏற்கனவே, ‘பில்லா’, ‘ஏகன்’,   ‘ஆரம்பம்’ ஆகிய படங்களில் அஜித் ஜோடியாக நடித்துள்ள நயன்தாரா இதன் மூலம் இயக்குனர்  சிவா போலவே 4-ஆவது முறையாக அஜித் படத்தில் இணைத்துள்ளார்.

தற்போது, நயன்தாரா படங்களுக்கு தனி  மவுசு இருக்கிறது. எனவே, அஜித்துடன் அவர் ஜோடி சேர்ந்தால் ரசிகர்களிடம் படம் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தும். ஆகவே, நயன்தாராவை நடிக்க வைப்பதில்  தீவிரம் காட்டினார்கள். 

அதற்காக, தொடர்ந்து பேச்சு வார்த்தை நடத்தி வந்தனர். ஏற்கனவே, அவர் பல படங்களில்  நடித்து வருகிறார். எனவே அவர் தயக்கம் காட்டினார். என்றாலும், நல்ல கதையம்சம் கொண்ட அஜித் படம் என்பதால் நடிக்க ஒப்புக்கொண்டார்.

நயன்தாரா சமீப காலமாக  நாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் நடிப்பதில் அதிக கவனம் செலுத்தி வருகிறார். இந்த படத்திலும் அவருக்கு முக்கியமான பாத்திரம். இதுவும், அவர் இதில் நடிப்பதற்கு முக்கிய காரணம் என்று கூறப்படுகிறது. நயன்தாரா, அஜித் ஜோடியாகி இருப்பதால் அவரது ரசிகர்கள்  உற்சாகம் அடைந்துள்ளனர்.

More Articles ...