சென்னை, அக்.25- நடிகர் ரஜினிகாந்த், 2.0 படத்தின் பிரமாண்ட இசை விழாவில் கலந்து கொள்ள இன்று துபாய் புறப்படுகிறார் ஷங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த், அக்‌ஷாய் குமார், எமி ஜாக்சன் நடித்துள்ள படம் 2.0. ஆகும்.

'லைகா' நிறுவனம் ரூ.400 கோடி செலவில் தயாரித்துள்ள இந்தப் படத்துக்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்து உள்ளார். இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா துபாயில் உள்ள 'பர்ஜ் பார்க்' ஆடம்பர தங்கும் விடுதியில் அக்டோபர் 27 வெள்ளிக்கிழமை நடக்கிறது. ஏ.ஆர். ரஹ்மான் தன் குழுவினருடன் படத்தின் பாடல்களை நேரடியாக வழங்கவிருக்கிறார். 

இதில் படக் குழுவினர் மற்றும் திரையுலக முக்கியப் பிரமுகர்கள் கலந்து கொள்கிறார்கள். அக்‌ஷாய் குமார், எமி ஜாக்சன், இயக்குநர் ஷங்கர் உள்பட பலரும் துபாய்க்குப் போய்விட்டார்கள்.

இன்று படத்தின் நாயகன் ரஜினிகாந்த் விமானம் மூலம் துபாய் செல்கிறார். இந்த நிகழ்ச்சியைக் காண 10,000 ரசிகர்கள் கட்டணம் செலுத்தியுள்ளனர். 12,000 ரசிகர்கள் இலவசமாக அனுமதிக்கப் படுகிறார்கள்.

 

 சென்னை, அக்.23- 'மேயாத மான்' படத்தின் மூலம் தமிழ்ச் சினிமாவில் களமிறங்கியிருக்கிறார் பிரியா பவானி ஷங்கர். செய்தி வாசிப்பாளராக இருந்தவருக்கு, 'கல்யாணம் முதல் காதல் வரை' தொலைக்காட்சி நாடகத்தில் சிறப்பான அங்கீகாரம் கிடைத்தது. முதல் படமான 'மேயாத மான்' படத்திலேயே நல்ல வரவேற்பைப் பெற்றுவிட்டார். 

சினிமா ரசிகர்கள் சிலர் இவரை அடுத்த திரிஷா எனவும் சொல்லி வருகிறார்கள். தற்போது இவரது ரசிகர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி கிடைத்திருக்கிறது. நடிகர் கார்த்தியுடன் அடுத்ததாக ஜோடி சேர்ந்து கலக்கப்போகிறாராம் பிரியா.

'பசங்க' படத்தின் இயக்குனர் பாண்டிராஜ் இப்படத்தை இயக்குகிறார்.. தற்போது 'தீரன் அதிகாரம் ஒன்று' படத்தில் நடித்து வருகிறார் நடிகர் கார்த்தி. அதன் பிறகு இவர் பாண்டிராஜ் படத்தில் இணையவிருக்கிறார். 

 

 

 சென்னை, அக்.14- இயக்குனர் அட்லீ இயக்கத்தில் நடிகர் விஜய், நடிகைகள் சமந்தா, காஜல் அகர்வால் உள்ளிட்டோர் நடித்திருக்கும்  'மெர்சல்' படத்திற்கு தணிக்கைச் சான்றிதழ் கிடைத்து விட்டதாக அதன் இயக்குனர் கூறியுள்ள போதிலு தணிக்கை வாரியம் அதனை மறுத்திருக்கிறது. 

தேனாண்டாள் பிலிம்ஸ் சார்பில் சுமார் 130 கோடி ரூபாய் பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்டுள்ள மெர்சல் படத்திற்கான அனைத்து பணிகளும் முடிவடைந்து தீபாவளிக்கு திரையிடப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. 

இந்நிலையில், திரைப்படத்திற்கு தணிக்கைச் சான்றிதழ் வழங்கப்படவில்லை எனத் தணிக்கைக் குழு விளக்கம் அளித்துள்ளது. முன்னதாக மெர்சல் படத்திற்கு யு/ஏ சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளதாக இயக்குனர் அட்லீ தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்திருந்தார். 

இந்த நிலையில் படத்திற்கு விலங்கு நல வாரியத்திடம் அனுமதி பெறாததால் தணிக்கை சான்று வழங்கவில்லை எனத் தணிக்கைக் குழு விளக்கம் அளித்துள்ளது. இதனால் படம் வெளியாவதில் குழப்பம் ஏற்பட்டுள்ளது. 

முன்னதாக மெர்சல் படத்தில் புறா வரும் காட்சிகள் கிராபிக்ஸ் என்பதற்கான சான்று விலங்கு நல வாரியத்துடன் படக்குழு சமர்ப்பிக்காததாலும், படத்தில் பயன்படுத்தப்பட்டுள்ள பாம்பின் பெயரும் தவறாக அளிக்கப்பட்டதாலும் விலங்கு நல வாரியம் அனுமதி தரவில்லை. இதனால், திட்டமிட்டபடி தீபாவளியன்று மெர்சல் திரைப்படம் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.    

 

 

சென்னை, அக்.13- ‘மெர்சல்’ படத்திற்கு போட்டியாக நடிகர் வைபவ்-பிரியா பவானி ஷங்கர் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘மேயாத மான்’ படமும் தீபாவளிக்கு வெளியீடு காணவிடுப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

விஜய் நடிப்பில் ‘மெர்சல்’ பெரும் எதிர்பார்ப்புகளுக்கு இடையே தீபாவளியை முன்னிட்டு வெளியிடப்படுகிறது. உலகம் முழுவதும் ‘மெர்சல்’ சுமார் 3,292 திரையரங்கில் வெளியாக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அதுமட்டுமன்றி, நடிகர் சசிகுமாரின் 'கொடிவீரன்', நடிகர் பரத்தின் 'பொட்டு' உள்ளிட்ட படங்களும் தீபாவளியன்று வெளியிட இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளன. 

இந்நிலையில், கார்த்திக் சுப்புராஜ் தயாரிப்பில் உருவாகி இருக்கும் `மேயாத மான்' படமும் தீபாவளி  பந்தயத்தில் களமிறங்குகிறது. இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள சுரொட்டிகளில் 'மெர்சலான காளை வருதுங்க! கூடவே... மேயாத மானும் துள்ளி வருதுங்க!' என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

 

More Articles ...