சென்னை, மார்ச் 24- பெரிதும் ஏதிர்பார்க்கப்படும் பாகுபலி 2 படத்தின் இசையை ரஜினி வெளியிடுவார். இதற்காக பிரமாண்டமான இசை விழா ஒன்றை சென்னையில் நடத்த திட்டமிட்டுள்ளனர்.

ராஜமௌளி இயக்கத்தில் பிரபாஸ், ராணா, அனுஷ்கா, தமன்னா, சத்யராஜ் நடிப்பில் வெளிவரவிருக்கும் படம் பாகுபலி. அண்மையில் வெளிவந்த இப்படத்தின் டிரைலர் உலகளவில் அதிகம் பார்க்கப்பட்ட யூடியூப் காணொளிகளில் 7வது இடத்தைப் பிடித்தது குறிப்பிடத்தக்கது.

டிரைலர் போலவே படத்தின் இசை வெளியீட்டையும் மிக பிரமாண்டமாக காட்டிட சென்னையில் இதன் இசை வெளியீட்டு விழாவை நடத்த படக்குழு திட்டமிட்டுள்ளது. 

அதில் இசையை வெளியிட சூப்பர் ஸ்டார் ரஜினியை அழைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் வெளியீட்டு விழா ஏப்ரல் 8ம் தேதி நேரு ஸ்டேடியத்தில் நடைபெறுகிறது.  

சென்னை, மார்ச் 23- தனுஷ் முதல்முறையாக இயக்குனராகி இருக்கும் படம் பவர் பாண்டி. ராஜ்கிரண் நடிப்பில் வெளிவந்துள்ள இப்படத்தின் பெயரில் இருக்கும் 'பவரை' வரிவிலக்குக்காக மாற்றியுள்ளார் தனுஷ்.

ராஜ்கிரண், ரேவதி, பிரசன்னா, சாயா சிங் என பலர் நடித்துள்ள படம் பவர் பாண்டி. நேற்று வெளியான இப்படத்தின் டிரைலரை ஒரே நாளில் மட்டும் 1 மில்லியன் ரசிகர்கள் பார்த்துள்ளனர். இப்படி ஏகப்பட்ட எதிர்ப்பார்ப்புகளுக்கிடையில் திரைக்கு வர இருக்கும் படத்தின் பெயரை மாற்றியுள்ளார் தனுஷ். 

தமிழகத்தில் தமிழ் அல்லாத ஆங்கில மொழி வார்த்தைகள் படத்தலைப்பாக வைத்தால் வரி விலக்குக்கு விண்ணப்பிக்கவே முடியாது என்ற நிலை உண்டு. இதனால், முன்னதாக பவர் பாண்டியாக இருந்த தலைப்பை ப.பாண்டியாக மாற்றியுள்ளார் தனுஷ்.

விளம்பரங்களில் பவர் பாண்டியாக இருக்கும் படத்தலைப்பை படத்தில் மட்டும் ப.பாண்டி என மாற்றியுள்ளனர். 

வரிவிலக்கு பிரச்சனை வரும் என்று முன்கூட்டியே தனுஷ்க்கு தெரியும் தானே, பின் ஏன் இவ்வாறு செய்தார்? அல்லது இதற்கு பின்னால் ஏதாவது விசயம் இருக்குமா என்று கேள்வி எழுப்பியுள்ளனர் நெட்டிசன்கள்.

சான்ஜோஸ், மார்ச்.22-  தாம் இசையத்த பாடல்கலை மேடைகளில் பாடக்கூடாது என்று இசையமைப்பாளர் இளையராஜா நோட்டீஸ் அனுப்பியது தொடர்பில் வேதனை அடைந்திருக்கும் பாடகர் எஸ்.பி.பாலா, அந்த வேதனை இங்கு நடந்த இசைக்கச்சேரியில் வெளிப்படுத்தினார்.

இசையமைப்பாளர் இளையராஜாவினால் ஏற்படுத்தப்பட்ட சர்ச்சைக்குப் பின்னர், அமெரிக்காவின் சான்ஜோஸ் நகரில் நடைபெற்ற இசைக் கச்சேரியில் பாலசுப்ரமணியம் மனம் திறந்துள்ளார்.

கடந்த 19-ஆம் தேதி 3 மணி நேரம் நடந்த இந்த கச்சேரியில் இளையராஜா பாடல்கள் தவிர்த்து மற்ற தமிழ்த் திரைப்பட பாடல்களைத் தாம் பாடியதாகவும், தமது ரசிகர்கள் எத்தகைய ஏமாற்றமும் இல்லாமல் அதனை ரசித்ததாகவும் எஸ்.பி.பாலா தெரிவித்தார்.‌

கமலஹசான் நடித்த 'சிம்லா ஸ்பெஷல்' படத்தில் இடம்பெற்றிருக்கும் 'உனக்கென்ன மேலே நின்றாய் ஓ நந்தலாலா...' அவர் மனம் கலங்கினார். குறிப்பாக, பாடலில் இடம்பெற்ற வரிகளான 'யாராரோ நண்பர் என்று... ஏமாந்த நெஞ்சம் உண்டு... என்ற வரிகளை எஸ்.பி. பாலா மீண்டும் மீண்டும் பாடி உணர்ச்சி வயப்பட்டார்.

இதனிடையே, நடிகர் கமல் தொலைபேசி வழி தொடர்பு கொண்டு பலமணி நேரம் பேசி  தமக்கு ஆறுதல் தெரிவித்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

மும்பை, மார்ச்.21- அண்மையில் வெளிவந்த இந்திப் படமான 'டங்கால்' திரைப்படம் அபார வெற்றியைப் பெற்ற நிலையில் அதில் நடித்த சன்யா மல்கோத்ரா என்ற இளம் நடிகை சமூக வலைத்தளங்களில் மிகப்பெரிய பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறார்.

மிகப்பெரிய வசூல் சாதனையை ஏற்படுத்திய 'டங்கால்' படத்தில் பிபிதா குமாரி என்ற பாத்திரத்தில் ஒரு மல்யுத்த வீராங்கனையாக நடித்த சன்யா ரசிகர்களையும் விமர்சகர்களையும் கவரும் விதமான நடிப்பை வழங்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

சன்யா தம்முடைய 'இன்ஸ்டாகிராம்' சமூக ஊடகத்தில் சொந்தமாக ஒரு புதிய நடன வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அவரது நடன நளினம் ரசிகர்களைத் தெறிக்க வைத்திருக்கிறது. அவரது மெல்லிய நடன நகர்வுகளைக் காட்டும் காணொளி அசுர வேகத்தில் சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.

More Articles ...