சென்னை, மார்ச் 20- அண்மையில் மறைந்த கமலஹாசனின் அண்ணன் சந்திரஹாசன் நடித்த படம் தான் அப்பத்தாவ ஆட்டய போட்டுட்டாங்க படம். இப்படம் இன்னும் வெளிவரவில்லை. இதில் சந்திரஹாசன் தான் கதாநாயகனாக நடித்திருந்தார்.

முதியோர் இல்லத்தில், முதிய வயதில், இருவர் காதலிக்க நினைக்கையில் அவர்களைத் தடுக்கும் உறவுகளும் அவர்களுக்கு ஆதரவாக இருக்கும் நண்பர்கள் பற்றிய கதை தான் இது.

இறுதியில் காதல் ஜோடிகள் ஒன்று சேர்ந்தார்களா என்பது தான் படத்தின் கதையாம். இது முழுக்க முழுக்க நகைச்சுவை படமாக உருவாகியுள்ளதாம். தற்போது பின் ஆக்கப்பணி வேலையில் இருக்கும் இப்படம் இவ்வருட பாதிக்குள் வெளிவந்து விடும் என எதிர்ப்பார்க்கப்பட்ட நிலையில் சந்திரஹாசன் மறைந்தது அவரின் குடும்பத்தை மட்டுமல்ல படக்குழுவினரையும் தான்.

இப்படத்தில் சந்திரஹாசனுக்கு ஜோடியாக நடிகர் விக்ராந்தின் அம்மா ஷீலா நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

சென்னை, மார்ச்.20- இளையராஜா இசையமைத்த பாடல்களை மேடைகளில் பாடுவதற்கு எதிராக பாடகர் எஸ்.பி. பாலசுப்பிரமணியத்திற்கு அனுப்பட்டுள்ள நோட்டீஸ் குறித்து கடும் சர்ச்சை நிலவிவரும் நிலையில் இளையராஜாவின் தரப்பில் அதற்கு விளக்கம் தரப்பட்டுள்ளது.

பாடல்கள் விவகாரம் குறித்து பாடகர் எஸ்.பி பாலாவுக்கு இளையராஜா, அனுப்பிய நோட்டீஸ் பெறும் பரபரப்பை உருவாக்கி இருக்கிறது.

இதன் காரணமாக சமூக வலைத் தளங்களில் இளையராஜாவுக்கு எதிராக கடுமையான விமர்சங்கள இடம்பெற்று வருகின்றன. இந்நிலையில் இப்பிரச்சனை குறித்து இளையராஜா தரப்பில் இருந்து அவரது காப்புரிமை ஆலோசகர் பிரதீப் குமார் விளக்கம் அளித்துள்ளார்.

"எங்களது கேள்வி எஸ்.பி.பாலாவுத்துக்கான கேள்வியாக பார்த்து யாரும் தவறாக விமர்சனம் செய்யவேண்டாம் என்று பிரதீப் கேட்டுக்கொண்டார்..

கடந்த இரண்டு மூன்று வருடங்களாக, காப்புரிமை பணியைத் தொடர்கிறோம். இது எஸ்.பி.பாலாவுக்காக மட்டும் அனுப்பிய நோட்டீஸ் அல்ல, அதற்குரிய அனுமதியைப் பெற்றுப் பாடுங்கள் என்றுதான் கூறுகிறோம்.

கிராமங்களில் கச்சேரி நடத்துபவர்களுக்கு இது பொருந்தாது. கிராம கச்சேரி கலைஞர்கள் பிழைப்புக்காக பாடுகின்றனர். ஆனால், சிலர் வருமான நோக்கோடு கச்சேரி செய்கின்றனர். வருமானம் ஈட்டுபவர்களிடம் உரிமையை கேட்கிறோம் என்று பிரதீப்  குறிப்பிட்டார்.

சென்னை, மார்ச் 20- 'என்ன தான் ஒரு காலத்துல காதலன் காதலியாக இருந்தாலும், பிரிந்த பிறகு எப்படி ஒன்றாக சேர்ந்து நடிப்பது?' என்ற கேள்வி தான் நயன்தாராவின் தற்போதைய நிலை என்கிறது சினிமா வட்டாரம். ஏன் இப்படி?

நயன்தாராவின் டோரா எனும் திகில் படம் இம்மாதம் இறுதியில் திரைக்காணும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அடுத்து நயன் நடிக்கும் படமும் திகில் படம் தான். இதற்கு 'கொலையுதிர் காலம்' எனவும் பெயர் வைத்தாகிவிட்டது.

இப்படத்தினை இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா தயாரித்துள்ள நிலையில், சக்ரி டோலாட்டி இயக்குகிறார். கதாநாயகிக்கு முக்கியத்துவம் வழங்கும் படமான இதில் நயன்தாரா முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

இதில் மற்றொரு முக்கியமான பாத்திரம் வில்லன் பாத்திரமாம். இதற்காக பெரிய நடிகர்கள் வேண்டும் என்ற நிலையில் முதலில் பிரபுதேவாவைத் தான் தேர்ந்தெடுத்தார்களாம். ஆரம்பத்தில் இதற்கு ஓகே சொன்ன நயன் பின்னர் எதோ காரணத்தினால் முடியாது என கூறியிருக்கிறார்.

இயக்குனர் சற்று வலியுறுத்தவே, பிரபுதேவா இப்படத்தில் நடித்தால் நான் நடிக்க மாட்டேன் என பிடிவாதமாக கூறிவிட்டாராம் நயன். வேறு வழியின்றி வேறு நடிகரைத் தேடிவரும் இயக்குனர், இப்படத்தின் இந்தி பதிப்பில் பிரபுதேவாவை வில்லனாக ஆக்கிவிட்டாராம். தமிழில் நயன் நடித்த பாத்திரத்தில் இந்தியில் தமன்னா நடிக்கிறார். 

 

சென்னை, மார்ச்.19- நடிகர் கமல்ஹாசனின் சகோதரரும் நடிகரும் படத்தயாரிப்பாளருமான சந்திரஹசான் நேற்று காலமானார்.

சந்திரஹாசன் லண்டனில் உள்ள அவரது மகள் அனுஹாசன் வீட்டில் சிறிது காலமாக இருந்து வந்தார். அங்குதான் அவர் காலமானார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அவருக்கு இப்போது 82 வயதாகிறது. சந்திரஹாசன் ராஜ்கமல் இண்டர்நேஷ்னல் தயாரிப்பு நிறுவனத்தின் நிர்வாகியாக அவர் இருந்து வந்தார்..வீட்டில் இருந்த போது அவருக்குத் திடிரென மாரடைப்பு ஏற்பட்டு  அதனைத் தொடர்ந்து அவரது உயிர் பிரிந்துள்ளது.

More Articles ...