சென்னை, அக்.14- இயக்குனர் அட்லீ இயக்கத்தில் நடிகர் விஜய், நடிகைகள் சமந்தா, காஜல் அகர்வால் உள்ளிட்டோர் நடித்திருக்கும்  'மெர்சல்' படத்திற்கு தணிக்கைச் சான்றிதழ் கிடைத்து விட்டதாக அதன் இயக்குனர் கூறியுள்ள போதிலு தணிக்கை வாரியம் அதனை மறுத்திருக்கிறது. 

தேனாண்டாள் பிலிம்ஸ் சார்பில் சுமார் 130 கோடி ரூபாய் பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்டுள்ள மெர்சல் படத்திற்கான அனைத்து பணிகளும் முடிவடைந்து தீபாவளிக்கு திரையிடப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. 

இந்நிலையில், திரைப்படத்திற்கு தணிக்கைச் சான்றிதழ் வழங்கப்படவில்லை எனத் தணிக்கைக் குழு விளக்கம் அளித்துள்ளது. முன்னதாக மெர்சல் படத்திற்கு யு/ஏ சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளதாக இயக்குனர் அட்லீ தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்திருந்தார். 

இந்த நிலையில் படத்திற்கு விலங்கு நல வாரியத்திடம் அனுமதி பெறாததால் தணிக்கை சான்று வழங்கவில்லை எனத் தணிக்கைக் குழு விளக்கம் அளித்துள்ளது. இதனால் படம் வெளியாவதில் குழப்பம் ஏற்பட்டுள்ளது. 

முன்னதாக மெர்சல் படத்தில் புறா வரும் காட்சிகள் கிராபிக்ஸ் என்பதற்கான சான்று விலங்கு நல வாரியத்துடன் படக்குழு சமர்ப்பிக்காததாலும், படத்தில் பயன்படுத்தப்பட்டுள்ள பாம்பின் பெயரும் தவறாக அளிக்கப்பட்டதாலும் விலங்கு நல வாரியம் அனுமதி தரவில்லை. இதனால், திட்டமிட்டபடி தீபாவளியன்று மெர்சல் திரைப்படம் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.    

 

 

சென்னை, அக்.13- ‘மெர்சல்’ படத்திற்கு போட்டியாக நடிகர் வைபவ்-பிரியா பவானி ஷங்கர் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘மேயாத மான்’ படமும் தீபாவளிக்கு வெளியீடு காணவிடுப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

விஜய் நடிப்பில் ‘மெர்சல்’ பெரும் எதிர்பார்ப்புகளுக்கு இடையே தீபாவளியை முன்னிட்டு வெளியிடப்படுகிறது. உலகம் முழுவதும் ‘மெர்சல்’ சுமார் 3,292 திரையரங்கில் வெளியாக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அதுமட்டுமன்றி, நடிகர் சசிகுமாரின் 'கொடிவீரன்', நடிகர் பரத்தின் 'பொட்டு' உள்ளிட்ட படங்களும் தீபாவளியன்று வெளியிட இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளன. 

இந்நிலையில், கார்த்திக் சுப்புராஜ் தயாரிப்பில் உருவாகி இருக்கும் `மேயாத மான்' படமும் தீபாவளி  பந்தயத்தில் களமிறங்குகிறது. இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள சுரொட்டிகளில் 'மெர்சலான காளை வருதுங்க! கூடவே... மேயாத மானும் துள்ளி வருதுங்க!' என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

 

மும்பை, அக்.12- நானும், சூசனும் விவகாரத்துப் பெற நடிகை கங்கனா காரணமா? அப்படி எதுவும் இல்லை என்று பாலிவுட் நடிகர் ரித்திக் ரோஷன் திட்டவட்டமாக கூறினார். பாலிவுட் நடிகர் ரித்திக் ரோஷன் 7 ஆண்டுகளாக தன்னுடன் தொடர்பு வைத்திருந்ததாக நடிகை கங்கனா ராணவத் தெரிவித்துள்ளார். ஆனால் இதை ரித்திக் திட்டவட்டமாக மறுத்துள்ளார்.

இருவருக்கும் இடையே சண்டை தற்போது மீண்டும் சூடுபிடித்துள்ளது. கங்கனாவின் குற்றச்சாட்டு அபத்தமானது. இரண்டு பிரபலங்கள் 7 ஆண்டுகளாக தொடர்பு வைத்திருந்தால் அது மீடியாவுக்கு தெரியாமலா போய்விடும் என்று கேட்டுள்ளார் ரித்திக்.

ரித்திக் ரோஷன் கங்கனாவுடன் கள்ளத்தொடர்பு வைத்திருந்ததை அவரின் மனைவி சூசன் கண்டுபிடித்ததால்தான் விவகாரத்து வாங்கி சென்றுவிட்டார் என்று கூறப்பட்டது. இதை ரித்திக் மறுத்துள்ளார். 

"நானும், சூசனும் பிரிவதற்கு கங்கனா காரணம் இல்லை. ஒரு தம்பதி பிரிந்தால் கள்ளத்தொடர்புதான் காரணமாக இருக்க வேண்டுமா? நானும், சூசனும் தற்போதும் நல்ல நண்பர்களாக உள்ளோம்" என்று ரித்திக் தெரிவித்துள்ளார்.

"நாங்கள் விவகாரத்து பெற்றதற்கான காரணம் எனக்கும், சூசனுக்கும் தெரியும். அதை வெளியே சொல்ல விரும்பவில்லை. அதே போன்று கங்கனா விவகாரம் பற்றி இனி பேச விரும்பவில்லை" என்று ரித்திக் கூறியுள்ளார்.  

 

சென்னை, அக்.11- திருமணத்திற்கு பிறகு நடிக்கப் போவது இல்லை என்று திவ்யா தெரிவித்துள்ளார். கோலிவுட்டில் தயாரிப்பாளராக, நடிகராக வலம் வருபவர் ஆர்.கே.சுரேஷுக்கும். தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வரும் திவ்யாவுக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது. 

சரத்குமார் நடித்து வரும் “அடங்காதே” படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்துக் கொண்டிருக்கிறார் திவ்யா. கோலிவுட்டுக்கு வந்த வேகத்தில் சினிமா பயணத்தை முடித்துக் கொள்கிறார் அவர். 

'எங்களுடையது பெரியவர்களாக பார்த்து நிச்சயம் செய்த திருமணம். என் வருங்கால கணவரின் சொந்த ஊருக்கு அருகில் தான் என் ஊரும் உள்ளது' என்று திவ்யா தெரிவித்தார். 

'திருமணத்திற்கு பிறகு நடிக்க மாட்டேன். எங்கள் கல்யாணம் காதல் கல்யாணம் அல்ல' என்று திவ்யா தெளிவாகக் கூறியிருக்கிறார். இது காதல் கல்யாணம் இல்லை என்று சுரேஷும் தெரிவித்திருக்கிறார்.

'சுமங்கலி' தொலைக்காட்சி தொடர் மூலம் பிரபலமானவர் திவ்யா. ஆர்.கே. சுரேஷ் தற்போது 3 படங்களில் வில்லனாகவும், 3 படங்களில் ஹீரோவாகவும் நடிக்கிறார். 

More Articles ...