சென்னை, அக்.5- புகழின் உச்சத்தில் இருக்கும் நடிகை அனுஷ்காவின் 'பாகுபலி காதல்' பலித்து விட்டது என்ற தகவல் ரசிகர்கள் மத்தியில் இப்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

பாகுபலி மற்றும் பாகுபலி-2 ஆகிய படங்களில் ஜோடியாக நடித்தபோது பிரபாஸ்-அனுஷ்கா இடையே காதல் ஏற்பட்டது. ஆனால், காதல் குறித்து இருவரும் வாய் திறக்கவில்லை. அனுஷ்கா வீட்டில் அவருக்கு மாப்பிள்ளை தேடினார்கள். நிஜத்திலும் பிரபாஸ்- அனுஷ்கா ஜோடி சேர வேண்டும் என்று அவர்களின் ரசிகர்கள் ஆசைப்படுகிறார்கள்.

பிரபாஸும், அனுஷ்காவும் காதலிப்பதாகவும், அவர்கள் தங்கள் உறவை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்ல தயாராகி விட்டதாகவும் அவர்களின் நெருங்கிய நண்பர் தெரிவித்ததாக எழுத்தாளர் ஒருவர் 'டுவீட்' செய்துள்ளார். 

பிரபாஸுக்கும், அனுஷ்காவுக்கும் வரும் டிசம்பர் மாதம் நிச்சயதார்த்தம் என்றும் அந்த எழுத்தாளர் டுவிட்டரில் தெரிவித்துள்ளார். அதை பார்த்த ரசிகர்கள் உற்சாகத்தில் விட்டனர்.

திருமணத்திற்காக தான் அனுஷ்கா உடல் எடையை குறைத்து வருகிறாராம். அவர் ஊடல் பயிற்சி மையத்தில் தவமாய் தவமிருப்பது படத்திற்காக அல்ல, பிரபாஸுக்காக என்பது குறிப்பிடத்தக்கது.

 

சென்னை, அக்,5- நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவதற்கான ஆயுத்த பணிகளைச் செய்து கொண்டே '2.0' மற்றும் 'காலா' ஆகிய படப்பிடிப்புகளிலும் கலந்து கொண்டு வருகிறார். இந்நிலையில் அவர், தனது கடைசிப் படமாக 'முதல்வன்'-2' என்ற படத்தில் நடிக்கவுள்ளார் என்று தகவல்கள் கசிந்துள்ளன.

'காலா' படம்தான் ரஜினியின் கடைசிப் படமாக இருக்கும் என்றும், அதற்குப் பிறகு முழு நேர அரசியல்வாதியாகி விடுவார் ரஜினி என்றும் கூறப்பட்டது. ஆனால், 'காலாவு'க்குப் பிறகு ஒரு படம் மட்டும் நடிப்பார் என்று இப்போது தகவல்கள் வெளியாகியுள்ளன.

அரசியல் கட்சியை அறிவித்த பிறகு, கடைசியாக ஒரு படத்தில் நடிக்க திட்டமிட்டுள்ளாராம் ரஜினி. அது ஏ.ஆர்.முருகதாஸ் படம் என்று முதலில் கூறப்பட்டது. 

ஆனால், 'முதல்வன் 2' என்ற படத்தில் நடிக்க ரஜினி விருப்பமாக இருப்பதாகவும் அதற்கான கதையை ராஜமௌலியின் தந்தை உருவாக்கி வைத்திருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்தப் படத்தை ராஜமௌலி இயக்குவார் என்றும் கூறப்படுகிறது.

'முதல்வன்' முதல் பாகம் 1999- ஆம் ஆண்டு ஷங்கர் இயக்கத்தில் வெளியாகி ஆபார வெற்றியைப் பெற்றது. அவரே இரண்டாம் பாகத்தை இயக்குவார் என்றும் கூறப்பட்டது. ஆனால், அவர் அந்த நேரத்தில் இந்தியன் 2- படத்தில் முமுரமாக இருப்பார் என்பதால் ராஜமௌலி இயக்குவார் என்கிறார்கள்.

ராஜமௌலியும் ரஜினியும் இணைய வேண்டும் என்பது ரசிகர்களின் ஏகோபித்த வேண்டுதலாக இருந்த நிலையில், முதல்வன் 2- படத்தில் இருவரும் இணைந்தால் ரசிகர்களின் மகிழ்ச்சிக்குலளவே இருக்காது என்று கூறப்பட்டது.

  சென்னை, அக்.5– சினிமா தியேட்டர்களுக்கு விதிக்கப்பட்ட உள்ளாட்சி வரிக்கு எதிராக 6 மாவட்டங்களில் உள்ள தியேட்டர்களில் மற்றும் சென்னையில் உள்ள பேரங்காடி திரையரங்குகள் மூடப்பட்டுள்ளன. 

இதனால் தீபாவளிக்கு வரவிருக்கும் விஜய்யின் மெர்சல் உள்ளிட்ட படங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. ஜிஎஸ்டி மற்றும் உள்ளாட்சி வரி என இரட்டை வரி முறைக்கு எதிர்ப்புத் தெரிவித்து சென்னையில் ஐநாக்ஸ், பி.வி.ஆர். மல்டிபிளக்ஸ் தியேட்டர்கள் மூடப்பட்டன.

இந்த நிலையில் மதுரை, ராமனாதபுரம் திரையரங்கு உரிமையாளர்கள் கூட்டம் நேற்று மாலை நடந்தது. அதில் உள்ளாட்சி வரி விதிப்பை நீக்காவிட்டால் 6 மாவட்டங்களில் தியேட்டர்களை மூடுவது என்று அறிவித்துள்ளனர்.

இதுகுறித்து அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில், "ஏற்கனவே ஜி.எஸ்.டி. வரி விதிப்பின்படி 18 விழுக்காடு மற்றும் 28 விழுக்காடு வரிச் செலுத்தி வருகிறோம். இந்நிலையில் உள்ளாட்சி கேளிக்கை வரியாக 10 விழுக்காடு, 20 விழுக்காடு விதிப்பது சரியல்ல. இதை முழுவதுமாக நீக்க வேண்டும். 

இல்லையென்றால் வருகிற 18- ஆம் தேதி (புதன்கிழமை) தீபாவளி திருவிழா முதல் மதுரை, திண்டுக்கல், தேனி, ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர் மாவட்டங்களிலும் உள்ள திரையரங்குகள் காலவரையின்றி இயங்காது. எங்கள் கோரிக்கை குறித்து அரசு வெகு விரைவாக முடிவு எடுக்க கேட்டுக் கொள்கிறோம்," என்று கூறியுள்ளனர். 

சென்னை உள்பட மற்ற மாவட்டங்களிலும் தியேட்டர்கள் மூடப்படும் என்று தெரிகிறது. உள்ளாட்சி வரி விதிப்பை அரசு மறுபரிசீலனை செய்யாவிட்டால் தீபாவளி தினம் முதல் தமிழகத்தில் உள்ள அனைத்து தியேட்டர்களும் மூடப்படும் என்று கூறப்படுகிறது.

சென்னை, அக்.3 - பிக் பாஸ் வீட்டில் இருந்தபோது நடிகை ஓவியா ஆரவ்வை காதலித்தார். ஆனால் ஆரவ் அவரின் காதலை ஏற்கவில்லை. இதையடுத்து ஓவியா பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறினார். ஓவியா ஆர்மிக்காரர்களுக்கு ஆரவ் எதிரியானார். 

ஆனால், 100 நாள் அன்று ஆரவ் பிக் பாஸ் டைட்டிலை வென்றுள்ளார். ஆனாலும் பலர் அவரைத் திட்டி தீர்த்ததோடு, கடுமையாக விமர்சித்தும் வந்தனர். பெண்ணின் மனதைக் காயப்படுத்தியவர்கள் எப்படி வெற்றியாளர் ஆக முடியும் என்றும் கேட்டனர்.

இந்நிலையில், சமூக வலைத்தளத்தில் நேரடியாக சாட் செய்த ஆரவ்விடம் பலர் வாழ்த்து சொல்லியும் கேள்விகள் கேட்டும் உரையாடினர். ஓவியாவுடன் சேர்ந்து படத்தில் நடிப்பீர்களா என்று ஆரவ்விடம் கேட்கப்பட்டது. 

அதற்கு அவர் கூறியதாவது, ரசிகர்களின் விருப்பம் அதுவாக இருந்தால் நிச்சயம் ஓவியாவுடன் இணைந்து நடிப்பேன் என்றார். பிக் பாஸ் நிகழ்ச்சியால் பிரபலமான ஆரவ்வை ஹீரோவாக பார்க்க அவரது ரசிகர்கள் விரும்புகிறார்கள். ஓவியா, ஆரவ் ஜோடியாக நடிக்கும் படம் வந்தாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை என்கிறார்கள் நெட்டிசன்கள்.

More Articles ...