சென்னை, அக்.3- தமிழில் கமல்ஹாசன் நடத்திய பிக்பாஸ் நிகழ்ச்சியில் 100 நாட்கள் பிக்பாஸ் வீட்டுக்குள்ளேயே இருந்து இறுதிச்சுற்று வரை சென்று வெற்றியை தவறவிட்டவர் நடிகர் கணேஷ் வெங்கட்ராம். 

பிக்பாஸ் வீட்டுக்குள் யாரைப் பற்றியும் யாரிடமும் குறை சொல்லாமல் உண்மையாக இருந்ததாக சமூக வலைதளங்களில் கணேஷ் வெங்கட்ராமுக்கு ஆதரவு குவிந்தது. ஆனாலும், இவரால் பிக்பாஸ் இறுதிப்போட்டியில் நான்காமிடமே பிடிக்க முடிந்தது.

100 நாட்கள் பிக்பாஸ் வீட்டில் இருந்த இவர் தற்போது மனைவியுடன் ஒன்றாக ஹோட்டலுக்குச் சென்ற புகைப்படத்தை ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். 'தியாகம் தான் உண்மையான காதலின் தேர்வு. என்னைப் புரிந்துகொண்டு ஆதரவாக இருந்ததற்கு நன்றி பேபி... நீதான் எனது ஊக்கம்' என்றும் குறிப்பிட்டுள்ளார்.

கணேஷை அவரது மனைவி நிஷா பிக்பாஸ் வீட்டுக்குள் இருக்கும்போதே ஒருமுறை சந்தித்துப் பேசினார். பிக்பாஸ் ஃபைனல் நடந்தபோது நான்காம் இடம் பெற்ற கணேஷை நிஷாதான் விட்டுக்குள் சென்று அழைத்து வந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

 

மும்பை, செப்.30- 'ஜூட்வா 2' படத்தில் நடிக்கும்போது தனக்கும், நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸுக்கும் இடையே மோதல் என்று வெளியான தகவல் குறித்து விளக்கம் அளித்துள்ளார் டாப்ஸி.

டேவிட் தவான் இயக்கத்தில் வருண் தவான் ஜோடியாக டாப்ஸி, ஜாக்குலின் பெர்ணான்டஸ் ஆகியோர் நடித்துள்ள பாலிவுட் படம் ஜுட்வா 2. இந்த படத்தில் வருண் தவான் இரண்டு வேடங்களில் நடித்துள்ளார். 

இந்தப் படத்தில் நடித்த போது டாப்ஸி-ஜாக்குலின் இடையே மோதல் ஏற்பட்டதாக செய்திகள் வெளியாகின. இது குறித்து ஊடகங்கள் பரவலாக செய்திகளை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி வந்தன. 

இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் நோக்கில் டாப்ஸி அறிக்கை ஒன்றை வெளியிட்டார். 

அதில், 'நானும் ஜாக்குலினும் சண்டை போட்டுகொள்ளவில்லை. அது தவறான செய்தி. ஜாக்குலின் எப்பொழுதும்  எப்பொழுதும் சிரித்த முகத்துடன் இருப்பார். அவரால் மட்டும் எப்படி முடிகிறது என்று தெரியவில்லை' என டாப்ஸி சொன்னார். 

'எனக்கும், ஜாக்குலினுக்கும் இடையே சண்டை வராது. நாங்கள் இருவரும் நெருங்கிய தோழிகளாகி விட்டோம். என் தோழிகளுடன் நான் சண்டை போடுவது கிடையாது' என்று அவர் கூறினார்.

சென்னை, செப்.30- கடந்த 98 நாட்கள் பிக் பாஸ் வீட்டில் வெளி தொடர்பு இல்லாமல் வாழ்ந்தவர்களில் யார் வெற்றியாளர் என்பது இன்று தெரிந்து விடும். இரு தினங்களுக்கு முன் ஐவரில் பிந்து வெளியேற்றப்பட இப்போது உள்ள நால்வரில் யார் அந்த அதிஷ்டசாலி என்பதே மக்களின் எதிர்ப்பார்ப்பு.

இதுவரை 19 பேரை பிக் பாஸ் வீடு பார்த்து விட்டது. அதில் கடந்த வாரம் ஐவர் மட்டுமே இறுதி போட்டியாளராக அறிவிக்கப்பட அதிலிருந்து பிந்து நேற்று முன்தினம் நடு இரவில் வெளியேற்றப்பட்டார். 

இதுவரை எத்தனையோ பேர் வெளியேற்றப்பட்டபோதும் பிந்து வெளியேறியபோது கணேஷ், ஹாரீஸ், ஆரவ் மற்றும் சினேகன் என அனைவருமே மிக வருத்தத்துடன் காணப்பட்டனர். இதில் சினேகன் வழக்கம் போல அழ ஆரம்பிக்க, மற்ற நால்வரும் தொடர்ந்து பலமுறை பிந்துவைக் கட்டியணைத்து ஆறுதல் கூறினர்.

அதிலும் ஆரவ்வைக் கட்டி அணைத்த பிந்து வெகுநேரம் அப்படியே நின்று கொண்டிருந்தார். ஒவ்வொரு வாரமும் தான் காப்பாற்றப்பட வேண்டும் என நினைத்த தருணம் மாறி, தாங்கள் 100 நாட்கள் வெல்லப்போகிறோம் என்பதை நினைத்து மகிழ்ச்சி பட முடியாமல் பிந்துக்காக வருந்தினர் நால்வரும்.

ஒருவழியாக நால்வரில் ஒருவர் மட்டுமே பிக் பாஸ் வெற்றியாளர் என்பது உறுதியாகி விட்டது. அதில் யார்? சினேகனா? கணேஷா? ஆரவ்வா? இல்லை ஹாரீஸா?

 

 திருவனந்தபுரம், செப்.29- அண்மைய காலமாக தமிழ் சினிமாவை விட்டு விலகி இருந்த லட்சுமி மேனன் மீண்டும் விட்ட இடத்தை பிடிப்பேன் என்ற சூளுரையுடன் பிரவேசித்திருக்கிறார். 

நடிகை லட்சுமி மேனன் தமிழில் 'சுந்தரபாண்டியன்' படத்தின் மூலம் அறிமுகமாகி 'கும்கி', 'குட்டிப்புலி', 'பாண்டியநாடு' எனத் தொடர்ச்சியாகப் படங்களில் நடித்து வந்தார். சில பாடல்களையும் பாடியிருக்கிறார். 

லட்சுமி மேனன் நடித்தாலே படம் வெற்றி எனக் கூறப்பட்ட காலமெல்லாம் உண்டு. தொடர்ச்சியாக வெற்றிப் படங்களில் நடித்து வந்த அவர், ஒரு கட்டத்தில் ஒரே மாதிரியான கிராமப்புற அம்சம் கொண்ட படங்களில் நடிப்பது அலுப்பு தட்டுகிறது என்று விலகி இருந்தார்.

இனி படங்களில் நடிக்கப்போவது இல்லை என அவர் கூறிவிட்டதாகத் தகவல்கள் வெளியாயின. ஆனால், அதற்குப் பின் மனம் மாறி, மீண்டும் நடிக்க வந்தாலும், ஏற்கனவே இருந்தது போல் அவருக்குப் போதிய வரவேற்பு இல்லை.

அவர் நடித்த 'மிருதன்', 'றெக்க' படங்கள் பெரிதாக வெற்றி பெறவில்லை. அதில் அவரது நடிப்பும் அவ்வளவாகப் பேசப்படவில்லை. வாய்ப்பின்றி வீட்டில் முடங்கிக் கிடந்த லட்சுமி மேனன், தற்போது பிரபு தேவா ஜோடியாக 'யங் மங் சங்' என்ற படத்தில் நடித்து வருகிறார்.

'இந்தப் படம் வெளியானதும், மீண்டும் முன்னணி நடிகைகள் பட்டியலில் இடம்பிடித்து விடுவேன்' எனத் திட்டவட்டமாகக் கூறி வருகிறார் லட்சுமி மேனன். புதிய நடிகைகளைத் தொடர்ந்து வரவேற்றுக் கொண்டிருக்கும் தமிழ் ரசிகர்கள் மீண்டும் லட்சுமி மேனனைக் கொண்டாடுவார்களா என்பதைப் பொறுத்திருந்து பார்க்கலாம்.

More Articles ...