மகாராஷ்டிர, ஏப்ரல் 13- மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் இந்த விருது வழங்கும் நிகழ்ச்சி நேற்று முன்தினம் நடந்தது. இதில் பாலிவுட் நடிகை ஐஸ்வர்யா ராய்க்கு (42) இந்த ஆண்டுக்கான குளோபல் இந்தியன் விருது வழங்கப்பட்டது. 

 

தனது மகள் ஆராத்யாவுக்கு விருதை அர்ப்பணித்த ஐஸ்வர்யா ராய், ‘‘அனைத்துலக மேடையில் இந்திய பெண்மணியாக பிரதி நிதித்துவம் பெறும் வாய்ப்பு எனக்கு கிடைத்திருப்பதை எண்ணி மகிழ்ச்சி அடைகிறேன்.

 

நடிகையாகவும், சிறந்த பெண் மணியாகவும் எனக்கு இந்த விருது வழங்கப்பட்டிருப்பது மிகுந்த உற்சாகத்தை அளிக்கிறது. தொழில் ரீதியாகவும், சமூக ரீதியாகவும், தனிப்பட்ட முறையிலும் எனக்கு ஏராளமான வாய்ப்புகள் கிடைத்தன. அதை நான் தவற விடவில்லை’’ என்றார்.

 

இந்த விருது வழங்கும் விழாவில் சிறந்த தொழில் முனைவோர், கலை மற்றும் கலாச்சாரம், சிறப்பு நடுவர், அன்மையில் பிரபலம், இந்திய பிரபலம் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் 17 பேருக்கு விருதுகள் வழங்கப்பட்டன. டென்னிஸ் நட்சத்திரம் சானியா மிர்சாவும் கவுரவிக்கப்பட்டார்.

 

சென்னை, ஏப்ரல் 11- '24' படத்தை ஒப்புக் கொண்டு எங்களை அடுத்த கட்டத்திற்கு நகர்த்தியவர் ஏ.ஆர்.ரஹ்மான் என சூர்யா இசை வெளியீட்டு விழாவில் தெரிவித்தார்.

விக்ரம் குமார் இயக்கத்தில் சூர்யா, சமந்தா, நித்யா மேனன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் படம் '24'. ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருக்கும் இப்படத்தை சூர்யா தனது 2டி நிறுவனம் மூலமாக தயாரித்திருக்கிறார். ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் இப்படத்தை வெளியிட இருக்கிறது.

இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் இன்று நடைபெற்றது. படத்தின் இசையை ஏ.ஆர்.ரஹ்மான் வெளியிட சிவகுமார் பெற்றுக் கொண்டார்.

சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள ‘24’ படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் சூர்யா, ஏ.ஆர்.ரகுமானுக்கு குட்டிக் கதை ஒன்றை சொல்லி அசத்தினார்.

‘24’ ஆடியோ விழாவில் சூர்யா பேசும்போது, இந்த படத்திற்காக விக்ரம் குமார் என்னிடம் 4 மணி நேரம் கதை சொன்னார். நான் எந்தவொரு கதை கேட்டும் எழுந்து நின்று கைதட்டியது இல்லை. ஆனால், விக்ரம் குமாரிடம் கதையை கேட்டதும் எழுந்து நின்று கைதட்டினேன். இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்க வேண்டும் என்று ஆசைப்பட்டு, அவருக்கு ஒரு எஸ்.எம்.எஸ். மட்டும் அனுப்பினேன். அவர் எங்களுக்காக அரை மணி நேரம் ஒதுக்கி, நேரில் வந்து கதை சொல்லச் சொன்னார்.

என்னிடம் 4 மணி நேரம் சொன்ன கதையை ஏ.ஆர்.ரகுமானிடம் எப்படி அரை மணி நேரத்திற்குள் சொல்லி முடிக்க போகிறார் விக்ரம் குமார் என்ற சந்தேகம் வந்தது. ஆனால், ஏ.ஆர்.ரகுமான் இந்த கதையை பொறுமையாக 6 மணி நேரம் கேட்டு முடித்தார். முடிவில் இந்த படத்திற்கு இசையமைக்க ஒப்புக்கொண்டார்.

அவருக்கு நான் கண்டிப்பாக ஒரு கதை சொல்லியே ஆகவேண்டும். ஒரு குழந்தை ஒரு சாக்லெட் கடைக்குள் நுழைந்து அங்கிருந்த சாக்லெட் பாட்டில்களை எல்லாம் பார்த்துக் கொண்டே இருந்தது. பின்னாலேயே வந்த அவளது அம்மா, உனக்கு வேண்டிய சாக்லெட்டை எடுத்துக் கொள் என்று அந்த குழந்தையிடம் சொன்னார். 

ஆனால், அந்த குழந்தையோ எந்த சாக்லெட்டும் வேண்டாம் என்று சொல்லிவிட்டு, சாக்லெட்டுகளையே பார்த்துக் கொண்டிருந்தது. கடைக்காரரும் ஆச்சர்யத்துடன், என்னம்மா ஒரு குழந்தை சாக்லெட் கடைக்குள் நுழைந்துவிட்டு சாக்லெட் வேண்டாம் என்று சொன்னால் எப்படி, என்று ஜாடி மூடியை திறந்து, சாக்லெட்டை எடுத்துக் கொள்ளச் சொல்லி சொன்னார். 

ஆனால், அந்த குழந்தை திரும்பவும் சாக்லேட் வேண்டாம் என்று சொல்லிக்கொண்டு சாக்லெட்டையே பார்த்துக் கொண்டிருந்தது. ஒருகட்டத்தில் பொறுமையிழந்த அந்த கடைக்காரர் தனது கையில் ஒரு கொத்து சாக்லெட்டை எடுத்து அந்த குழந்தையின் கையில் திணித்தார். அந்த குழந்தையும் சிரித்த முகத்துடன் அதை பெற்றுக் கொண்டு கடையை விட்டு வெளியே வந்தது.

அப்போது, அந்த குழந்தையின் அம்மா, அவளைப் பார்த்து ஏன் சாக்லேட் வேண்டாம் என்று அடம்பிடித்தாய் என்று கேட்டதற்கு, அந்த குழந்தை என்னுடைய கை மிகவும் சிறிய கை, அந்த கையால் சாக்லெட்டுக்களை எடுத்தால் கொஞ்சம்தான் கிடைக்கும். ஆனால், அந்த கடைக்காரரின் கையோ மிகப்பெரிய கை, அவரது கையால் எடுத்து கொடுத்தால் நிறைய சாக்லெட்டுக்கள் கிடைக்கும் என்று சொன்னது. 

நாம் கடவுளிடம் எது கேட்டாலும் குறைவாகத்தான் கேட்போம். ஆனால், கடவுள் நமக்கு தரும்போது நாம் எதிர்பார்த்ததைவிட அதிகமாகவே தருவார். அதுபோலத்தான் ஏ.ஆர்.ரகுமானும். நாம் அவரிடம் எதையும் எதிர்பார்த்து கேட்க முடியாது. ஆனால், அவர் நாம் எதிர்பார்த்ததைவிட நிறையவே தருவார் என்று கூறினார். 

 

விஜய் நடிக்கும் புதியபடத்தின் படப்பிடிப்பு  இன்று தொடங்கியது. இந்தப்படத்துக்கு இப்போதைக்கு தளபதி 60 என்று பெயர் வைத்திருக்கிறார்கள். 

இந்தப்படத்தை, எங்கள் வீட்டு பிள்ளை , உழைப்பாளி , நம்மவர் , தாமிரபரணி , படிக்காதவன் , வேங்கை ,வீரம் உட்பட அறுபதுக்கும் மேற்பட்ட படங்களை தயாரித்த  பிரபல நிறுவனமான விஜயா புரொடக்க்ஷன்ஸ் தயாரிக்கிறது.

அழகியதமிழ்மகன் பட இயக்குநர் பரதன் இயக்கத்தில், உருவாகவிருக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு இன்று(11-04-2016) பூந்தமல்லி ஈவிபி ஸ்டுடியோவில் பூஜையுடன்  தொடங்கியது.

இப்படத்தில் நாயகியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார். 'கத்தி' திரைப்படத்தில் விஜய்யுடன் இணைந்து நடித்த நகைச்சுவை நடிகர் சதிஷ் இந்தப் படத்திலும் விஜய்யுடன் இணைகிறார்.. மற்றும் ஜெகபதிபாபு, டேனியல் பாலாஜி, தம்பிராமைய்யா, ஸ்ரீமன் ஆகியோர் நடிக்கிறார்கள் .

முதன்முறையாக இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் விஜய்யுடன் கைகோர்க்கிறார்.சுகுமார் ஒளிப்பதிவு செய்ய,  கவிப்பேரரசு வைரமுத்து பாடல்கள் எழுதுகிறார்.

இன்று தொடங்கும் படப்பிடிப்பு இரண்டு நாட்கள்  நடைபெறுகின்றது. இரண்டாம்கட்ட படப்பிடிப்பு அடுத்தமாதம் தொடர்ந்து நடைபெற உள்ளது என்று படக்குழுவினர் தெரிவித்திருக்கிறார்கள். 

 

 

சர்ச்சைக்குரிய குற்றப்பரம்பரை திரைப்படத்தை யார் இயக்குவது என்பதில் பாலாவுக்கும் பாரதிராஜாவுக்கும் மோதல் வலுத்து வருகிறது. சில தினங்களுக்கு முன்புதான் குற்றப்பரம்பரை திரைப்படத்தைப் பூஜையுடன் தொடங்கினார் பாரதிராஜா. இத்திரைப்படம் தொடர்பில் பாலா குறித்த கேள்விக்கு "நான் மேலே பார்த்து பேசுகிறவன், கீழே பார்த்து பேசி பழக்கமில்லை" என பாரதிராஜா பதிலளித்திருந்தார். 

  இந்நிலையில் தற்போது, பாலா முதல்முறையாகப் பத்திரிகையாளர்களைச் சந்தித்துப் பேசினார். இச்சந்திப்பின் போது,  பாரதிராஜாவுக்கும் ரத்தினக்குமாருக்கும் கடும் எச்சரிக்கை விடுத்தார். 

 வேல ராமமூர்த்தி எழுதிய குற்றப்பரம்பரை நாவலை நான் படித்தேன். எனக்குப் பிடித்தது. பாரதிராஜா இதை படமாக்க இருப்பதால் நாவலில் உள்ள சிறு பகுதியை வைத்து அந்த காலகட்டத்தில் வேறு படம் எடுக்க திட்டமிட்டேன். இதையறிந்த பாரதிராஜா என்னிடம் போன் செய்து குற்றப்பரம்பரை படத்தை இயக்க வேண்டாம். அது என்னுடைய கனவு படம். நான் எடுக்க போகிறேன் என்று கூறினார். 

மேலும், பத்திரிக்கைகளில் என்னைப்பற்றி தவறாக விமர்சித்திருக்கிறார் பாரதிராஜா. இதைக்கேட்டு நான் மிகவும் வருந்தினேன். குற்றப்பரம்பரை என்பது ஒரு வரலாற்று சம்பவம். இதை யார் வேண்டுமானாலும் இயக்கலாம். அவர்மட்டும் தான் இயக்குவேன் என்று கூறுவது குழந்தைத்தனமாக இருக்கிறது. பாரதிராஜா வரலாற்றை படமாக எடுக்கிறார். நான் கதையை படமாக எடுக்க இருக்கிறேன். என் படத்திற்கும் பாரதிராஜா இயக்கும் படத்திற்கும் எந்த சம்மந்தமும் இல்லை. 

ரத்தினகுமார் கூறிய கதையை மையமாக வைத்து பாரதிராஜாவும் இயக்க இருக்கிறார். ரத்தினகுமார் என்னை கதை திருடன் என்று கூறி இருக்கிறார். மேலும் அறிவு இல்லை என்றும் கூறியிருக்கிறார். பிதாமகன் படப்பிடிப்பின் போது பாரதிராஜாவை தரக்குறைவாக பேசியவர் ரத்தினகுமார். இன்று பாரதிராஜா பின்னாடி நின்று கொண்டு என்னை தவறாக பேசி வருகிறார். பொறுமையை இழந்துதான் தற்போது பேச வந்திருக்கிறேன்.

 நான் பாரதிராஜா, ரத்தினகுமார் இருவரையும் எச்சரிக்கிறேன். என்னைப்பற்றி இருவரும் தவறாக பேசினால் உங்களுக்கு நல்லது இல்லை." என பாலா பேசினார். 

More Articles ...