சென்னை, மார்ச் 30- இசைக்காகவே என் வாழ்க்கையை அர்ப்பணித்ததில் மகிழ்ச்சி. நல்ல வாய்ப்பு அமைந்தால் இப்போதும் பாடத் தயாராகவே இருக்கிறேன் என்று கின்னஸில் இடம்பிடித்த பாடகி பி.சுசிலா தெரிவித்துள்ளார்.

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் உட்படப் பல இந்திய மொழிகளில் சுசீலா நாற்பதாண்டுகளாக பாடிவருகிறார்.

பத்மபூஷன் , தேசிய விருது, கலைமாமணி விருது, ஆந்திர மாநில அரசினரின் விருது ரகுபதி பெங்கையா விருது, கம்பன் புகழ் விருது உள்ளிட்ட பல விருதுகளை பி.சுசீலா பெற்றுள்ளார்.

திரைப்படத் துறையில் முன்னணிப் பாடகியாக திகழும் பி.சுசிலா 17 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாடல்களைப் பாடியதால் அதிக பாடல்களைப் பாடியவர் என்ற அடிப்படையில் கின்னஸ் சாதனை புத்தக்கதில் இடம்பிடித்துள்ளார். இதைப் பகிரும் விதமாக இன்று பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது :

எனக்கு மிகவும் பெருமையாகவும், மகிழ்ச்சியாகவும் இருக்கிறது. எனக்கு முதல் தேசிய விருது எம்.எஸ்.வி இசையில் வெளியான 'நாளை இந்த வேளை பார்த்து' பாட்டுக்கு கிடைத்தது. பாடல் கம்போஸிங் போதே இந்தப் பாட்டுக்கு உனக்கு விருது கிடைக்கும்னு எம்.எஸ்.வி சொன்னார். அதேபோல கிடைத்தது. எம்.எஸ்.வி இசையமைப்பில் பாடி தேசிய விருது பெற்றது பெரிய மகிழ்ச்சி அளிக்கிறது.

இயக்குநர் கோபாலகிருஷ்ணன் என்னை நடிக்க வைக்க வேண்டும் என்று விரும்பினார். கோடி ரூபாய் கொடுத்தாலும் நடிக்க மாட்டேன் என்று கூறிவிட்டேன். எனக்கு எப்போதுமே நடிப்பில் பிரியம் இருந்ததில்லை. இசைக்காகவே என் வாழ்க்கையை அர்ப்பணித்ததில் மகிழ்ச்சி. நல்ல வாய்ப்பு அமைந்தால் இப்போதும் பாடத் தயாராகவே இருக்கிறேன் என்று பி.சுசிலா கூறினார்.

சென்னை, மார்ச் 29- தேன் குரலால் ரசிகர்களை காலம் காலமாக கட்டிப்போட்ட பின்னணி பாடகி பி.சுசீலாவுக்கு கின்னஸ் விருது வழங்கப்படுகிறது. 60ஆம் ஆண்டுகளில் துவங்கி இன்று வரை இசைவானில் கொடிகட்டி பரப்பவர் பி.சுசீலா. இவரது பாட்டு ஒலிக்காத வீடுகளே இல்லை.

அந்த கால நாயகிகளுக்கு, திரையில் சுசீலாவின் பாடல்கள் உயிர் கொடுத்தன. தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் என அனைத்து தென் இந்திய மொழிகளிலும் சுசீலாவின் பாடல்களுக்கு வாயசைக்காத நாயகிகளே இருக்க முடியாது. 

வாழும் வானம்பாடியான சுசீலா இதுவரை 17,695 பாடல்களை பாடி சாதனை செய்திருக்கிறார். இதை அங்கீகரித்து அவருக்கு கின்னஸ் சாதனை வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. 6 இந்திய மொழிகளில் அவர் பாடிய மொத்த பாடல்களின் எண்ணிக்கையை இனி யாராலும் நிரப்ப முடியுமா என்பதே இசை ரசிகர்களின் எதிர்பார்ப்பு.

மாநில மொழிப் படங்கள் வரிசையில், சிறந்த தமிழ்ப்படமாகவிசாரணை’ படம் தேசிய திரைப்படம் விருதினை பெற்றுள்ளது. ‘காஞ்சே’ சிறந்த தெலுங்குப் படத்துக்கான விருது பெற்றிருக்கிறது. 63ஆவது இந்திய தேசிய திரைப்பட விருது இன்று அறிவிக்கப்பட்டது.  

 

சிறந்த பின்னணி இசைக்கான விருதுதாரை தப்பட்டை’ படத்திற்காக இளையராஜாவிற்கு வழங்கப்பட்டுள்ளது

 

இந்திய அளவில் மிகப் பெரிய எதிர்பர்ப்பை ஏற்படுத்தி மிகப்பெரிய வரவேற்பையும் பெற்றபாகுபலி’, 2015ஆம் ஆண்டின் சிறந்த படமாக தேர்ந்தெடுக்கப் பட்டிருக்கிறது. சிறந்தநடிகர், நடிகை, இயக்குநர் ஆகிய விருதுகளை இந்திப்படங்கள் பெற்றுவிட்டாலும் சிறந்தபடமாக ஒரு தென்னிந்தியப்படம் வந்திருக்கிறது.  

 

 

சிறந்த எடிட்டருக்கான விருதினை மறைந்தகிஷோரும்’, சிறந்த துணை நடிகருக்கான விருதினை சமுத்திரகனிக்கும்விசாரணை’ படத்திற்காக அறிவிக்கப்பட்டிருக்கிறது.

 

மேலும், ஸ்பெஷல் ஜூரி விருதினை இறுதிச்சுற்று படத்திற்காகநாக் அவுட்’ நாயகி ரித்திகா சிங்’ பெறுகிறார்

 

தவிர, சிறந்த நடிகராக அமிதாப்பச்சன் தேர்வுசெய்யப்பட்டிருக்கிறார். கடந்த ஆண்டு வெளியானபிக்கு’ படத்தில் நடித்ததற்காக அவருக்கு இந்த விருது அளிக்கப்பட்டிருக்கிறது. தந்தைமகனள் பாசத்தை மையமாகக் கொண்ட அந்தப்படத்தில் தந்தையாக நடித்து இந்தவிருதைப் பெற்றிருக்கிறார்.

 

சிறந்த நடிகையாக கங்கனா ரணாவத் தேர்வு செய்யப்பட்டிருக்கிறார். ‘தனு வெட்ஸ் மனு ரிட்டர்ன்ஸ்’ ஹிந்தி படத்தில் நடித்தமைக்காக அவருக்கு விருது வழங்கப்பட்டிருக்கிறது

 

சிறந்த இயக்குநர் விருது சஞ்சய் லீலா பன்சாலிக்குச் சென்றிருக்கிறது. ‘பஜிரோவா மஸ்தானி’ படத்தை இயக்கியதற்காக அவருக்கு இந்தவிருது கொடுக்கப்பட்டிருக்கிறது.

 

 

 

சென்னை, மார்ச் 28- 'கடவுள் இருக்கான் குமாரு' படப்பிடிப்பில் ஏற்பட்ட விபத்தால் சிறுகாயத்துடன் உயிர் தப்பி இருக்கிறார் ஜி.வி.பிரகாஷ்.

இப்படத்தின் முக்கிய காட்சிகள் படப்பிடிப்பு பாண்டிச்சேரியைச் சுற்றியுள்ள பகுதிகளில் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இப்படத்தில் ஜி.வி.பிரகாஷ் மற்றும் ஆர்.ஜே.பாலாஜி இருவரும் காரில் செல்ல வில்லன்கள் துரத்துவது போன்ற காட்சியைப் படமாக்கி வந்தார்கள்.

அப்போது கண்டெய்னர் லாரி மோதியதில் ஜி.வி.பிரகாஷ் சென்ற கார் நிலை தடுமாறி சாலைகளுக்கு இடையே இருக்கும் தடுப்புச் சுவார் மீது மோதியது. இதில் ஆர்.ஜே.பாலாஜிக்கு மூக்கிலும், ஜி.வி.பிரகாஷிற்கு முகம் மற்றும் தோள்பட்டையிலும் அடிப்பட்டது. விபத்தைத் தொடர்ந்து படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது.

ஜி.வி.பிரகாஷ் மற்றும் ஆர்.ஜே.பாலாஜி இருவரும் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்கள். இருவரையும் பரிசோதித்த மருத்துவர்கள் பெரியளவிற்கு பாதிப்பு இல்லை என்றவுடன் மீண்டும் படப்பிடிப்புக்கு திரும்பினார்கள். அதனைத் தொடர்ந்து மீண்டும் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.

சக்தி சரவணன் ஒளிப்பதிவு செய்துவரும் இப்படத்துக்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்க இருக்கிறார். சென்னை, விசாகப்பட்டினம், கோவா உள்ளிட்ட பல படங்களில் படப்பிடிப்பு நடத்த படக்குழு திட்டமிட்டு இருக்கிறது.

More Articles ...