திருவனந்தபுரம், 21 மார்ச்-   பிரபல நடிகர் கலாபவன் மணி  கடந்த  மார்ச் 6-ஆம் தேதி திடீரென மரணமடைந்தார்.  அவர் மீது மேற்கொள்ளப்பட்ட பிரேத பரிசோதனையில்   அவரது உடலில் அளவுக்கு அதிகமான மெத்தனால் இருந்ததுதான் காரணம் என  அவரைப் பரிசோதனை செய்த மருத்துவமனை மருத்துவர்கள் தெரிவித்தனர். 

 அவரது உடல் உள்ளுறுப்புகள்   இரசாயன ஆய்வுக்கூடத்திற்கு அனுப்பி ஆய்வு செய்ததில், "குளோர்பைரிபோஸ்" எனும் பூச்சுக்கொல்லி மருந்து இருந்தது தான் மரணத்திற்குக் காரணம் என ஆய்வாளர்கள் கண்டுபிடித்தனர்.  இதனால் கலாபவன் மணி அருந்திய மதுவில்  யாரோ விஷம் கலந்திருக்கலாம் என அவரது குடும்பத்தினர் சந்தேகிக்கின்றனர்.  

 இந்நிலையில் கலாபவன் மணியின் மரணம் குறித்து  விசாரணை செய்து வரும், சிறப்பு விசாரணைக் குழு தலைவர் பி.என் உன்னி ராஜன்,  கலாபவன் மணி கடைசியாக இருந்த  வீட்டில் சோதனை நடத்தினார். 

 கலாபவன் மணி மரணம் தொடர்பில் இதுவரை போலீசார் யாரையும் கைது செய்யவில்லை.  அவரது மரணத்தில் நீடிக்கும் மர்மத்தை  முடிவுக்குக் கொண்டு வர, அவசியம் ஏற்பட்டால்,   சி.பி.ஐ விசாரணை நடத்த வேண்டும் என்று   மாநில பாரதீய ஜனதா தலைவர் கும்மணம் ராஜசேகரன் தெரிவித்தார். 

சென்னை, மார்ச் 21- அண்மையில் சின்னத்திரை நடிகர் சாய் பிரசாந்த்  தற்கொலை செய்துகொண்ட சம்பவம்  திரையுலகில் பெரும் அதிர்ச்சியலயை ஏற்படுத்தியுள்ளது. இதனையடுத்து,    மன அழுத்தத்தால்    திரையுலகினர் சட்டென்று தற்கொலை முடிவுக்கு வருவதைத் தடுக்க அவர்களுக்கு மனநல பயிற்சி அளிக்க வேண்டும், கவுன்சலிங்கிற்கு  ஏற்பாடு செய்ய வேண்டும் என தென்னிந்திய நடிகர் சங்கத் தலைவர் நாசர் கோரிக்கை விடுத்துள்ளார். 

 "நடிகர் சாய் பிரசாந்தின்  துர்மரணம், மிகுந்த மன வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. மருத்துவத்தை விட மேலானது மனோத்துவ முறையிலான சிகிச்சை. நமது தென்னிந்திய நடிகர் சங்கத்தில் மனோதத்துவ முறையிலான சிகிச்சை மையம் அமையும் என்பதை இங்கே கூறிக்கொள்கிறேன். நடிகர் சங்கத்திலும், இதற்கு முழுமனதாக முடிவெடுக்கப்பட்டது" என  நடிகர் நாசர் சென்னையில் தென்னிந்திய நடிகர் சங்க உறுப்பினர்களுக்கு ஏசிஎஸ் மருத்துவமனையின் இலவச மருத்துவ அட்டை வழங்கும் நிகழ்வில் பேசிய போது நடிகர் நாசர் இவ்வாறு பேசினார். 

திருவனந்தபுரம், மார்ச் 21- பிறருடைய நிர்வாண உடலில் தம்முடைய முகத்தை, போட்டோஷாப் தொழில்நுட்பத்தில் போலியாகப் பதிவுசெய்து, வெளியிட்டுள்ள செயலைப் பிரபல மலையாள நடிகை ஜோதி கிருஷ்ணா கடுமையாகக் கண்டித்திருக்கிறார்.

தம்மைப் போலவே பல நடிகைகளின் முகங்கள் இத்தகைய வழிமுறைகளில் ஆபாசப் படங்களில் பயன்படுத்தப் பட்டியிருப்பது குறித்து தாம் பெரி தும் எரிச்சல் அடைவதாக அவர் சொன்னார்.

ஆண்டுக்கு 200 திரைப்படங்கள் கேரளாவில் இருந்து வெளியாகின்றன. கேரளத் திரையுலகில் பிரபலமாக விளங்கும்  நடிகைகளில் ஜோதி கிருஷ் ணாவும் ஒருவர் என்பதால் ஆபாசப் படத்தில் அவரது முகம்  என்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

போட்டோஷாப் தொழில்நுட்பத்தில்  மற்றொருவரின் நிர்வாண உடலுடன் நடிகைகளின் முகத்தை இணைத்து வெளியிடுவதில் அதிகமான கேரள ரசிகர்கள் ஈடுபட்டுள்ளனர். இது குறித்து தம்முடைய பேஷ்புக் பதிவில் ஜோதி கிருஷ்ணா கடுமையாக சாடியிருக்கிறார்.

இவ்விகாரம் குறித்து  பேஷ்புக்கில்  தமது கருத்தை வெளியிட்டதற்குக் காரணம்,  இதர சமூக வலைத் தளங்களில், இத்தகையோரின் செயல்களால், பாதிக்கப்பட்டவர்களின் மனவலிமையை கூட்டுவதற்காகத் தான் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்தப் பிரச்சனை கேரளாவில் மட்டுமே இருப்பதாகக் கருத முடியாது. இந்தப் பிராந்தியம் முழுவதும் இத்தகைய ஆபாசப்படங்களில் முகம் ஒட்டும் செயல் நடந்து வருகிறது. உண்மையில் இது மோசமான அளவுக்கு வளர்ந்து கொண்டே இருக்கிறது என்றார் அவர். இது குறித்து ஜோதி கிருஷ்ணா போலீசில் புகார் செய்துள்ளார்.

அண்மையில், மற்றொரு மலையாள நடிகையான ஆஷாசரத் என்பவர் தொடர்பாகப் போலி வீடியோவை பதிவேற்றம் செய்ததற்காக 2 இளைஞர்கள் மீது இணையக் குற்றத் தடுப்புச் சட்டத்தின் கீழ் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

 

சென்னை, மார்ச் 19- பாலிவுட்டில் வெளியாகி   மாபெரும் வெற்றி பெற்ற குயின் படத்தின் தமிழ் ரீமேக்கில் நயன் தாரா நடிக்கவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இந்தியில் கங்கனா ரணாவட்  நடிப்பில் வெளியான குயின்  திரைப்படம் வசூலில் மட்டுமல்லாமல் 2 தேசிய விருதுகளையும் குவித்தது.  கதாநாயகியை அடிப்படையாகக் கொண்ட இத்திரைப்படத்தின் தமிழ் ரீமேக்கில் நயன்தாரா நடிக்கவுள்ளதாகக் கூறப்படுகிறது. இப்படத்தை ரேவதி இயக்க சுஹாசினி கதை எழுதப்போவதாக நம்பப்படுகிறது. 

More Articles ...