மணிரத்னம் இயக்கும் ஒரு படத்தில்  கார்த்தி நடிக்கவுள்ளார்இப்பட்த்திற்காக அவர் உடல் எடையை வெகுவாகக் குறைக்கவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது

 

முதலில் கார்த்தி, துல்கர் சல்மான் பட்த்தைத் தான் மணிரத்னம் இயக்கவிருந்தார். எனினும், படப்பிடிப்பு தள்ளிக்கொண்டே போனதால், துல்கர் சல்மான்  விலகிக் கொண்டார்அவருக்குப் பதிலாக நானி ஒப்பந்தம் செய்யப்பட்டார். ஆனால், அந்த படம் நிறுத்தப்பட்டது. அதே கதையில் இன்னொரு படம் வருவதுதான் இதற்குக் காரணம் எனக் கூறபட்டது.   

 

இந்நிலையில் தான், கார்த்தி, சாய் பல்லவி நடிக்கும் புதிய படத்தை மணிரத்னம் இயக்குவதாகத் தகவல் வெளியாகியுள்ளது

 

 

 

சென்னை, பிப்.19-  கலைஞர் கருணாநிதி மீண்டும் நடிகர் சங்க உறுப்பினர் ஆகவிருக்கிறார். திமுகவின் தலைவர் மு.கருணாநிதி திரையுலகிலிருந்தே அரசியலுக்கு வந்தவர். இவர் 1989ம் ஆண்டு முதல் தென்னிந்திய நடிகர் சங்கத்தில் உறுப்பினராக இருக்கிறார். அதோடு, ஓட்டுப் போடும் உரிமம் உள்ள ஆயுட்கால உறுப்பினருமாவார்.

 

ஆனால், சில காலத்திற்கு முன் அவரை ஓட்டு போடும் உரிமை இல்லாத, தொழிற்முறை அற்ற கௌரவ ஆயுட்கால உறுப்பினராக பதிந்திருந்தார்கள். இதனை விஷால் அணியினர் கடந்த நடிகர் சங்கத் தேர்தலின் போது கேள்வி எழுப்பினர்.

 

அதனைத் தொடர்ந்து, அண்மையில் நடந்த சங்கத்தின் செயற்குழு கூட்டத்தில் இது விவாதிக்கப்பட்டது. விவாதத்தைத் தொடர்ந்து கருணாநிதியை ஓட்டுப்போடும் உரிமை உள்ள ஆயுட்கால உறுப்பினராக ஆக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதனைப் பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் விரைவில் வெளிவரும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது

 

கலைஞர் கருணாநிதி, படத்தில் நடித்ததில்லை என்றாலும் நாடகத்தில் நடித்துள்ளதால் அதன் அடிப்படையிலேயே நடிகர் சங்க உறுப்பினராக இருக்கிறார்.

கோலாலம்பூர், பிப்.19- சூப்பர் ஸ்டார் ரஜினியின் அடுத்த படமான கபாலி மலாய் மொழியில் மொழி மாற்றம் செய்யப்படவிருக்கிறது. ஏறக்குறைய 60 மில்லியன் ரிங்கிட் செலவில் தயாராகி கொண்டிருக்கும் கபாலி திரைப்படத்தின் 80 விழுக்காடு படப்பிடிப்பு மலேசியாவில் நடந்தது அனைவரும் அறிந்ததே.

 

இப்படம் மலாய் மொழியிலும் மொழி மாற்றம் செய்ய ரஜினி ஒப்புக் கொண்டதாக செய்தி வெளியாகியுள்ளது. மலேசியாவில் படப்பிடிப்பை முடித்த படக்குழுவினர் தற்போது குரல் பதிவிற்காக வேலைக்காக இந்தியாவில் திரும்பியுள்ளனர். தமிழில் குரல் பதிவு வேலைகள் முடிந்த பின் மலாய் மொழியில் குரல் பதிவு செய்யும் வேலைகள் ஆரம்பமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது

 

கபாலி படத்தில் மலேசிய கலைஞர்களான டத்தோ ரோஸ்யாம் நோர், நோர்மான் ஹகிம் மற்றும் ஷேக் தைபன் ஆகியோர் நடித்துள்ளனர்.

சென்னை, பிப்-19 'பாஸ்கர் தி ராஸ்கல்' படத்தின் தமிழ் ரீமேக்கில் ரஜினி நடிப்பது உறுதியாகிவிட்டது என்று இயக்குநர் சித்திக் தெரிவித்திருக்கிறார்.

 

மம்முட்டி, நயன்தாரா, ஜே.டி. சக்ரவர்த்தி உள்ளிட்ட பலர் நடிப்பில் சித்திக் இயக்கத்தில் வெளியான மலையாள படம் 'பாஸ்கர் தி ராஸ்கல்'. கடந்தாண்டு ஏப்ரல் 15ம் தேதி வெளியான இப்படம் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது.

 

இப்படத்தின் தமிழ் ரீமேக் உரிமையை தயாரிப்பாளர் எஸ்.எஸ்.துரைராஜ் வாங்கியிருக்கிறார். தமிழ் ரீமேக்கில் ரஜினி மற்றும் அஜித் நடிக்கவிருக்கின்றனர் என்று செய்திகள் வெளியான வண்ணம் இருந்தன.

 

இந்நிலையில் மலையாள நாளிதழ் ஒன்றுக்கு 'பாஸ்கர் தி ராஸ்கல்' தமிழ் ரீமேக் குறித்து பேசியிருக்கிறார் இயக்குநர் சித்திக். அதில், "ரஜினி மற்றும் அஜித் இருவரும் ரீமேக்கில் நடிக்கவிருப்பதாக செய்திகள் வெளியான வண்ணம் இருக்கிறது.

 

'பாஸ்கர் தி ராஸ்கல்' படத்தைப் பார்த்த ரஜினி சார், மம்மூட்டி பாத்திரத்தில் நடிக்க ஆர்வமாக இருப்பதாக தெரிவித்தார். தயாரிப்பாளரும் முடிவாகிவிட்டது. ரஜினி நடிப்பது உறுதி.

 

தற்போது 'கபாலி' மற்றும் '2.0' ஆகிய படங்களில் நடித்து வரும் ரஜினி, அடுத்தாண்டு இப்படத்தின் ரீமேக்கில் நடிக்க தேதிகள் ஒதுக்குவார்" என்று தெரிவித்திருக்கிறார் இயக்குநர் சித்திக்.