Oppa Gangam Style பாடலை முந்திய பால் வால்கரின் ரேசிங் பாடல்..! (VIDEO)

உலகச் சினிமா
Typography

கோலாலம்பூர், ஜூலை.12- கடந்த 2012ஆம் ஆண்டு ஒரு பாடல் உலகையே கலக்கியது என்றால் அது ஓப்பா கங்காம் ஸ்டைல் பாடல் தான். யூடிப்பில் அதிகம் பேர் பார்த்த பாடல் என்ற பெருமையை ஐந்து ஆண்டுகளாக தக்க வைத்துக் கொண்டிருந்த இப்பாடலை முந்தி புதிய சாதனை படைத்துள்ளது 'சீ யூ அகெய்ன்' எனும் கார் பந்தய படத்தின் பாடல்.

2012ஆம் ஆண்டு பட்டி தொட்டி தொடங்கி ஏன் இந்தியர்களின் திருமண நிகழ்ச்சிகளிலும் கூட தவறாமல் ஒலித்த பாடல் கங்காம் ஸ்டைல். பாட்டின் இசைக்கும் அதன் காட்சியமைப்பிற்கும் கிரங்கி போன ரசிகர்கள் யூடியூப்பில் மட்டும் ஏறக்குறைய 289 கோடி மக்கள் பார்த்துள்ளனர். யூடிப்பில் அதிகம் பார்க்கப்பட்ட காணொளி என்ற அந்தஸ்த்தையும் இந்த பாடல் பெற்றது. 

ஆனால், இந்த பாடலை முந்தி அதிகம் பேர் பார்த்த பாடலாக தனி முத்திரை பதித்துள்ளது 2015ம் ஆண்டில் வெளியான பார்ஸ்ட் அண்ட் ஃப்யூரியஸ் 7 எனும் படத்தின் சீ யூ அகெய்ன் பாடல். இந்த பாடலை மறைந்த நடிகர் பால் வாக்கருக்கு இசை அஞ்சலியாக வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இதுவரை இப்பாடலை 290 கோடி பேர் யூடியூப்பில் பார்த்துள்ளனர்.

BLOG COMMENTS POWERED BY DISQUS