'அவதார்' திரைப்பட சாதனையைச் சமன் செய்தது ' பிளாக் பந்தர்'

உலகச் சினிமா
Typography

நியூயார்க், மார்ச்.19-  கடந்த   மாதம் வெளியான 'பிளாக் பந்தர்' ( Black panther) ஆங்கிலத் திரைப்படம்  உலக அளவில் பிரம்மாண்டமான  வசூல் சாதனைப் படைத்து வருகிறது. 

இதுவரை இந்த படம் 110 கோடி டாலருக்கு மேல்  மேல் வசூலை வாரிக் குவித்திருக்கிறது.  இதுவரையில் வசூல் சாதனையில் தொடக்க வாரங்களில் முந்திநின்ற 'அவதார்' (Avatar)படத்தின் சாதனைக்கு 'பிளாக் பந்தர்' இப்போது சவாலாக விளங்குகிறது.

2009ஆம் ஆண்டு வெளிவந்த 'அவதார்' படத்தின் ஒரு முக்கிய சாதனையை இந்தப் படம்  சமன் செய்துள்ளது. கடந்த வாரங்களாக தொடர்ந்து 'பிளாக் பந்தர்' வசூல் சாதனைப் பட்டியலில் முதலிடத்தில் இருந்து வருகிறது.

'அவதார்' படத்திற்கு முன் 1999 இல் வெளியான  'சிக்ஸ்த்   சென்ஸ்'   என்ற படம் தான் இந்த சாதனையைப் படைத்திருந்தது. கிட்டத்தட்ட 10 வருடங்களுக்கு ஒரு படம் மட்டுமே  இந்தச் சாதனையை நெருங்கியுள்ள து என்பது குறிப்பிடத்தக்கது.

BLOG COMMENTS POWERED BY DISQUS