சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானத்தில் தீ 

World
Typography

சிங்கப்பூர், 27  ஜூன் -  சாங்கி விமான நிலையத்தில், சிங்கப்பூர்  ஏர்லைன்ஸ் விமானம் ஒன்று தீ  பற்றி எரிந்தது.   விமானத்தில்   எரிசக்தி   கசிவு காரணமாக, விமானம் மீண்டும் அவசரமாகத் தரையிறக்கப்பட்டதையடுத்து இச்சம்பவம் நிகழ்ந்தது. 

எஸ்.கியு 368 என்ற அந்த விமானம்   பிற்பகல் 2.05 மணி வாக்கில் சிங்கப்பூரிலிருந்து மிலான் நோக்கிப் புறப்பட்டது. விமானத்தில்  எரிவாயு கசிவு   ஏற்பட்டதையடுத்து , பயணிகளுக்கு இது குறித்து  தெரிவித்தார் விமானி. இதனையடுத்து விமானம் சாங்கி விமான நிலையத்திலேயே திரும்பவும் தரையிறங்கியது. 

தரையிறங்கிய அடுத்த நொடி விமானம்  தீப்பற்றியது. எனினும் இச்சம்பவத்தால் பயணிகள் யாரும் பதற்றமடையாதது, அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது. 

BLOG COMMENTS POWERED BY DISQUS