Top Stories

 

புக்கிட் மெர்தாஜாம், ஜூலை.20- பினாங்கில் கடந்த 2015-ஆம் ஆண்டில் 'ரேபிஸ்' நோய் தாக்கிய போது முன்னெச்சரிக்கை இல்லாதால் ஏமாந்தது போலன்றி, இம்முறை வெறிநாய்க் நோய்க் கிருமி பரவாமல் தடுக்க கூடுதல் நடவடிக்கைகளில் பினாங்கு தீவிரமாக இறங்கியுள்ளது.   

குறிப்பாக, பினாங்கு மாநிலத்திற்குள் வரும் வாகனங்களில் நாய்கள் கொண்டு வரப்படுகின்றனவா? என்பதை உறுதி செய்ய சாலைத் தடுப்பு சோதனைகள் மேற்கொள்ளப்படுகின்றது. மேலும், தடுப்பூசிகள் போட கொண்டுவரப்படும் நாய்களுக்கு ‘மைக்ரோ-ஜிப்’ பொருத்தப்பட்டு வருகிறது. 

கால்நடை சேவைப் பிரிவு விழிப்பு நிலையில் இருப்பதாகவும் தடுப்பூசிகளுக்கு போதுமான அளவு மருந்து கையிருப்பு இருப்பதாகவும் மாநில சுகாதார பிரிவின் தலைவர் டாக்டர் அபிப் பகாருடின் கூறினார். இப்போதைக்குப் போதுமான அளவான 3,800 தடுப்பூசி மருந்துகள் போத்தல்கள் இருப்பதாக அவர் குறிப்பிட்டார்.

இதுவரை பினாங்கில் ரேபிஸ் நோய் சம்பவம் எதும் பதிவாகாத நிலையில், இனிமேல் வருவதற்கான வாய்ப்பை நாங்கள் ஏற்படுத்த மாட்டோம் என அவர் செய்தியாளர்களிடம் கூறினார்.

பினாங்கில் சுமார் 10 ஆயிரம் தெருநாய்கள் இருப்பதாக கணிக்கப்பட்டுள்ளதால் வெறிநாய்க் கடி நோய் கிருமி பரவாமல் பாதுகாக்கும் விஷயத்தில் சிரமத்தை எதிர்நோக்கியுள்ளதாகவும்  இருந்த போதிலும், சுமார் 7,000 நாய்களுக்கு நோய் தடுப்பூசி போட்டுவிட்டதாகவும் அவர் சுட்டிக் காட்டினார்.

கடந்த 2015-ஆம் ஆண்டில் பினாங்கில் இந்நோய் தாக்கிய போது தடுப்பூசிகளுக்குப் பற்றாக்குறைவு ஏற்பட்ட பட்சத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட நாய்கள் கொல்லப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

இதனைத் தொடர்ந்து, கெடா மற்றும் பெர்லீஸ் மாநிலங்களிலும் வெறிநாய்க் கடி நோய் வராமல் தடுக்க இரு மாநில அரசாங்கமும் தீவிர முயற்சியில் இறங்கியுள்ளன.

இந்த இரு மாநிலங்களும் இணைந்து செயல்பட்டால் ரேபிஸ் நோய் வராமல் தவிர்க்கலாம் என கெடா மாநில சுகாதாரப் பிரிவு தலைவர் டத்தோ டாக்டர் லீயோங் யோங் கோங் தெரிவித்தார். மாநில எல்லைப் பகுதிகளில் சாலைத் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக பெர்லிஸ் மாநில சுகாதாரப் பிரிவு தலைவர் நூருல்ஹிஷாம் கூறினார்.

 

 

புத்ராஜெயா, ஜூலை.20- காசநோய் மற்றும் இதர தொற்று நோய்களுக்கான பரிசோதனைகளை சுகாதாரத் துறை தீவிரப்படுத்தும் என அமைச்சர் டத்தோஸ்ரீ டாக்டர் சுப்பிரமணியம் தெரிவித்தார். 

நோய் தொற்றுக் கிருமிகள் பரவக்கூடிய பகுதிகளில் வசிக்கும் 3 லட்சம் மக்களை இலக்காகக் கொண்டு இந்தக் கண்காணிப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக சுகாதார அமைச்சர் கூறினார்.

இந்த நடவடிக்கை தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டு வரும் ஓர் இயக்கமாகும். இது போன்ற மருத்துவ பரிசோதனை செய்வதன் மூலம் மக்கள் நோயால் பாதிக்கப்பட்டிருப்பது கண்டறிந்து கொள்ளமுடியும். 

இந்தச் சோதனைகளின் வழி இத்தகைய தொற்றுக் கிருமிகளுக்கு இலக்கானோர் கூடுதலாக கண்டுபிடிக்கப்படலாம். எண்ணிக்கை ஏற்றம் கண்டாலும் நோய் பரவுவதற்கான தடுப்பு நடவடிக்கையை அரசாங்கம் உடனே மேற்கொண்டு வருவதால் பயப்படுவதற்கு அவசியம் இல்லை என்றார் அவர். 

முறையான சிகிச்சையால் காசநோய் சம்பவங்கள் குறைவதற்கான வாய்ப்பு அதிகமாக உள்ளதாக டாக்டர் சுப்ரமணியம் கூறினார். 

2015-ஆம் ஆண்டு 24,220 காசநோய் சம்பவங்களில் 1,696 மரணங்கள் பதிவாகியிருந்த வேளையில் கடந்தாண்டு 25,739 காசநோய் சம்பவங்களில் 1,945 மரணங்கள் பதிவாகியுள்ளது.

கடந்த 2011-ஆம் ஆண்டில் 2,268 ஆக பதிவாகிய ‘லெப்டோஸ்பிரோசிஸ்’ என்ற எலி சிறுநீர் நோய் எண்ணிக்கை  2015-ஆம் ஆண்டில் 8,291 ஆக உயர்ந்தது. இது கடந்தாண்டு 5,284 ஆக குறைந்துள்ளது. இது குறித்து, சிறு சிறு உணவுக் கடைகள், உணவகங்கள் ஆகியவற்றை நடத்துவோர் தூய்மையை பேணுவதில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். உணவுகள் சுத்தமாக இருப்பதை உறுதி செய்யவும் வேண்டும். 

மேலும், உணவுக் கடைகள், பூங்காக்கள் மற்றும் நீர்வீழ்ச்சிகளில் மிஞ்சிய உணவுகளை தூக்கியெறிவதால் அங்கு அதிகளவில் எலிகள் பெருகுகின்றன. இதனால் தொற்றுக்கிருமிகள் பரவும் வாய்ப்பு அதிகளவில் உள்ளது என டத்தோஶ்ரீ டாக்டர் சுப்பிரமணியம் குறிப்பிட்டார்.

 

பட்டர்வொர்த், ஜூலை.19- பினாங்கில் வெறிநாய்க் கடி நோய்க் கிருமி பரவாமல் தடுக்க பினாங்கு மாநிலத்திற்குள் பேராவிலிருந்து நாய்கள் மற்றும் பூனைகளைக் கொண்டுவர தடை விதிக்கப்பட்டுள்ளது. பேராவிலுள்ள கோலா செபெதாங்கில் வெறிநாய்க் கடி நோய் சம்பவம் ஒன்று பதிவாகியதை அடுத்து இந்த தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதனை தடுக்க மாநில எல்லைப் பகுதியான செபெராங் பெராயில் கால்நடை சேவைப் பிரிவு சாலை தடுப்பு சோதனைகளை மேற்கொண்டு வருகின்றது என்று மாநில விவசாயம் சார்ந்த தொழிற்துறை, கிராமப்புற மேம்பாடு மற்றும் சுகாதார பிரிவின் தலைவர் டாக்டர் அபிப் பஹாருடின் கூறினார். 

வெறிநாய்க் கிருமியால் பாதிக்கப்பட்ட நாய்களும் பூனைகளும் மாநிலத்தினுள் நுழையாமல் தடுக்க கூடுதல் விழிப்புணர்வுடன் இருக்கிறோம்.

கடந்த ஈராண்டுகளாக பினாங்கில் வெறிநாய்க் கடி நோய்ச் சம்பவம் எதுவும் பதிவாகவில்லை. இருப்பினும், நாய் வளர்ப்பவர்கள் அந்நாய்களுக்கு நோய்த் தடுப்பூசி போட்டுக் கொள்ளுமாறு கேட்டு கொள்ளப்படுகின்றனர். வளர்ப்புப் பிராணிகள் மற்ற விலங்குகளுடன் தொடர்புக் கொள்ளாமல் இருப்பதை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும் என அவர் எச்சரித்தார்.

விலங்குகள் அதிலும் குறிப்பாக நாய்கள் கடித்தாலோ, தாக்கினாலோ உடனே சிகிச்சைப் பெற்றுக் கொள்ளுமாறும் போலீஸில் தகவல் தெரிவிக்குமாறும் அவர் மக்களைக் கேட்டுக் கொண்டார். குடியிருப்பு பகுதிகளில் தெருநாய்கள் நடமாட்டம் இருந்தால் தெரிவிக்குமாறு அஃபிப் கூறினார். 

நாய்கள் அல்லது மற்ற விலங்குகள் வினோதமாக செயல்படுவதை கண்டால் வீஎஸ்டி ரேபிஸ் அமலாக்க பிரிவை 04-504-1047 என்ற எண்ணில் மக்கள் தொடர்புக் கொள்ளலாம்.

கர்ப்ப காலத்தில் காணப்படும் நித்திரையின்மை, ஒரு சங்கடமான பிரச்சனை என்றாலும், பொதுவாக இது எல்லா பெண்களிடமும் காணப்படுகின்றது. இந்த தூக்க குறைபாடு ஏற்பட பல்வேறு காரணங்கள் உள்ளன. ஒவ்வொரு காரணமும் மிகவும் தனித்தன்மை வாய்ந்தது. எனவே அந்த காரணங்கள் ஒவ்வொன்றையும் தனிப்பட்ட முறைகளைக் கையாண்டு தூக்கமின்மை நோயை குணப்படுத்த வேண்டும்.

கர்ப்ப காலத்தில் தூக்கமின்மை வருவதற்கு ஏகப்பட்ட காரணங்கள் உள்ளன. அவ்வாறு வருவதற்கு குழந்தையும் கூட ஒரு காரணமாக இருக்கலாம் அல்லது இல்லாமல் போகலாம். ஒரு கர்ப்பிணி தாய் கருவுற்ற பிந்தைய கால கட்டங்களில், கரு நன்கு வளர்ந்து விடுவதால் அவரது வயிற்றின் அளவு அதிகரிக்கும். அவ்வாறு ஏற்படும் சங்கடங்கள் கூட தூக்கமின்மை வர காரணமாக இருக்கலாம்.

ஒரு சில தாய்மார்களுக்கு குழந்தையின் அதிக எடை காரணமாக முதுகு வலி வரும். அவ்வாறு உண்டாகும் முதுகுவலியானது அந்த தாய்க்கு தூக்கமில்லாத இரவுகளை நிச்சயம் பரிசளிக்கும். குழந்தையின் அதிக எடையானது தாயின் சிறுநீர்ப்பை மீது ஒரு அழுத்தத்தை உருவாக்கும். அதன் காரணமாக அந்த தாய்க்கு இரவு முழுவதும் அடிக்கடி சிறுநீர் வரும். இதன் காரணமாக அந்தத் தாயால் கண்டிப்பாக இரவு முழுவதும் நிம்மதியாக தூங்க இயலாது.

கர்ப்ப காலத்தில் ஏற்படும் கவலைகள் கண்டிப்பாக தூக்கமின்மையை ஏற்படுத்துவதுடன், ஒரு தீய சுழற்சியையும் ஏற்படுத்துகின்றது. மேலும் கர்ப்ப கால ஹார்மோன் மாற்றங்கள் தூக்கமின்மையை ஏற்படுத்துவதால், ஒரு தாய் இயற்கையாகவே அடிக்கடி இரவில் விழித்து இருப்பாள்.

ஒரு தாய் தன் தூக்கமின்மைப் பற்றி கவலைப்பட்டால் அது அவளது குழந்தையையும் கண்டிப்பாக பாதிக்கக்கூடும். இந்தப் பதற்றம் தூக்கமின்மையை மேலும் அதிகரிக்கும். 

கர்ப்ப காலத்தில் தூக்கமின்மை எவ்வாறு சமாளிப்பது :

கருவின் எடை காரணமாக உங்களுடைய வயிற்றின் அளவு, வடிவம் மற்றும் எடை, உங்களை கட்டாயம் கஷ்டப்படுத்தும். எனவே நீங்கள் புதிய நிலைகளில் தூங்க முயற்சி செய்வீர்கள். அது உங்களுக்கு கட்டாய முதுகு வலியைத் தரும்.

கர்ப்பிணிகள் இடது பக்கமாக தூங்குவதோடு, ஒரு குஷன் அல்லது மென்மையான பொருள் எதையாவது உங்களுடைய வயிற்றுக்கு கீழ் வைத்துக் கொண்டு தூங்க முயற்சி செய்யலாம்.

தூங்க முயற்சிக்கும் முன் சூடான வெந்நீரில் குளியல் போடுவது உங்களுடைய அழுத்தத்தை குறைத்து, தூக்கத்தைப் பரிசளிக்கும்.

நல்ல மனதுக்கு பிடித்த இசை இங்கே சில நன்மைகளைத் தருகின்றது. இயற்கையான ஒலிகளான பறவைகளின் ரீங்காரங்கள் அல்லது கரையில் மோதும் கடலின் ஒலி போன்றவை உங்களுக்கு ஆழ்ந்த உறக்கத்தைத் தரும்.

இரவு நேரங்களில் கார்போஹைட்ரேட் அதிகம் உள்ள உணவுகளை குறைந்த அளவு எடுத்துக் கொள்வது, உங்கள் மூளை அதிக அளவில் செரோட்டினை உற்பத்தி செய்வதை ஊக்குவிக்கும். செரோட்டின் ஆனது நீங்கள் நன்றாக தூங்க உங்களுக்கு துணை புரியும்.

எனவே, கர்ப்ப காலத்தில் தூக்கமின்மையை குணப்படுத்த மேற்கூறிய இந்த தந்திரங்களை முயற்சி செய்து நன்கு தூங்குங்கள். 

 

கடும் வெயிலால் உங்கள் சருமம் வறண்டு காணப்படுகிறதா? சரியான தூக்கமின்றி கருவளையமா? கவலை வேண்டாம். இருக்கவே இருக்கிறது இயற்கை பொக்கிஷம், வெள்ளரிக்காய். வெள்ளரியில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட் மற்றும் சிலிக்கா இணைந்து சருமத்துக்குப் புத்துணர்வூட்டி கருவளையத்தை போக்குகின்றன. 

வெள்ளரிக்காயைக் கத்தரித்து, கண்கள் மேல் 20 நிமிடங்கள் வைத்திருப்பது அல்லது வெள்ளரிச் சாற்றைப் பருத்தியில் நனைத்து கண்களின் மீது 20 நிமிடங்களுக்கு வைத்திருப்பது நல்ல பலன் தரும். 

கண்வீங்கி போய் இருந்தால் வெள்ளரியைத் துண்டுகளாக நறுக்கி, கண்களைச் சுற்றி 20 நிமிடங்கள் வைத்தால் அதில் உள்ள அஸ்கார்பிக் அமிலம் கண்ணின் வீக்கத்தைப் போக்கும். 

வெள்ளரியை முகத்தில் தடவினால் முகம் பொலிவு பெறும். வெள்ளரிச் சாற்றுடன் சிறிது எலுமிச்சை சாறு கலந்து முகத்தில் தடவ வேண்டும். 20நிமிடங்கள் கழித்து முகத்தை கழுவினால் முகம் பொலிவு பெறும். கரும்புள்ளி போன்றவை நீங்கும். 

சூரியனில் இருந்து வரும் புறஊதாக் கதிர்வீச்சு, சருமத்தை பாதிக்கிறது. இதைத் தவிர்க்கும் ஆற்றல் வெள்ளரிக்கு உண்டு. மேலும் சருமத்துக்குக் குளிர்ச்சியூட்டி, மென்மையாக்குவதுடன் புற ஊதாக் கதிர்வீச்சால் ஏற்பட்ட பாதிப்பையும் போக்குகிறது. 

வெள்ளரியில் உள்ள சிலிகான் மற்றும் கந்தகம், முடி வளர்ச்சிக்குப் பெரிதும் உதவுகின்றன. வெள்ளரியைச் சாறு எடுத்து தலையில் பூசி, 15-20 நிமிடங்கள் கழித்து சீயக்காய் அல்லது ஷாம்பு போட்டு குளிக்க வேண்டும்.  

  

கண்களைச் சுண்டி இழுக்கும் வசிகரமான ஆரஞ்சு பழம், நம் தேகத்துக்கும் வசிகரத்தை அள்ளித் தரக்கூடியது.  அவற்றில் சில, உங்களுக்காக: 

1. கண்கள் "ப்ளிச்" ஆக :

ஆரஞ்சு ஜூஸை ஃபரீஸரில் வைத்து ஐஸ் கட்டியாக்குங்கள். இதை வெள்ளைத் துணியில் கட்டி, கண்ணுக்குமேல் ஒத்தி எடுங்கள்.

ஒரு நாள் விட்டு ஒரு நாள் இப்படி செய்து வர, கண்கள் "ப்ளிச்" ஆகிவிடும்.

தூக்கமின்மையால் கண்களில் ஏற்படும் சோர்வை நீக்கி பிரகாசமாக்கவும் ஆரஞ்சு பயன்படுகிறது.

2.  ஜொலி ஜொலிக்க...

தலையின் வறட்டுத் தன்மையைப் போக்கி, ஜொலி ஜொலிக்க வைக்கிறது ஆரஞ்சு தோல் சிகிச்சை.

உலர்ந்த ஆரஞ்சு தோல், துண்டுகளாக்கிய வெட்டிவேர், சம்பங்கி விதை, பூலான் கிழங்கு, கடலை பருப்பு, பயந்தம் பருப்பு, கசகசா - இவை ஒவ்வொன்றும் 100 கிராம் எடுத்து, மெஷினில் கொடுத்து அரைத்துக் கொள்ளுங்கள். இந்தப் பவுடரை வாரம் ஒரு முறை தலைக்குத் தேய்த்து குளியுங்கள்.

இப்படி செய்துவந்தால் முடி பளபளப்பாகவும், வாசனையாகவும் இருக்கும். இதையே உடம்புக்குத் தேய்த்துக் குளிக்கும் வாசனை பவுடராகவும் பயன்படுத்தலாம்.

3.  வடுக்கள் நீங்க...

முகத்தில் பருக்களால் ஏற்பட்ட வடுக்கள் மாறாத தழும்பாக இருந்து வாட்டுகிறதா? ஆரஞ்சு விழுது இருக்க கவலையேன்?

ஆரஞ்சு தோல் அரைத்த விழுது கால் டீஸ்பூன், கசகசா விழுது - 1 டீஸ்பூன்,

சந்தனப் பவுடர் - 2 சிட்டிகை... இவற்றை கெட்டியான விழுதாக்கிக் கொள்ளுங்கள். தினமும் இரவு தூங்கப் போகும்போது, பருக்கள் வந்த இடத்தில் மூடுவது போல் பூசுங்கள். காய்ந்ததும் முகத்தை கழுவி விடுங்கள்.

இந்த சிகிச்சையால் வடு மறைவதுடன், பருக்களும் இனி உங்கள் முகத்தை எட்டியே பார்க்காது.

4.  கருமையை விரட்டியடிக்க....

சிலருக்குக் கண்களுக்குக் கீழ், இரண்டு கன்னப் பகுதியிலும் கருமை படர்ந்து திட்டுத் திட்டாக இருக்கும் அந்தக் கருமையை விரட்டியடிக்க ஒரு டிப்ஸ்...

1 வேப்பங்கொழுந்துடன், ஆரஞ்சு தோல் விழுது - கால் டீஸ்பூன், கஸ்தூரி மஞ்சள் கால் டீஸ்பூன் கலந்து, எங்கெல்லாம் கருமை படர்ந்து இருக்கிறதோ, அங்கெல்லாம் பூசி 5 நிமிடம் கழித்து கழுவுங்கள்.

வாரம் இருமுறை செய்யுங்கள் கருமை ஓடிவிடும்.

5.  ஆரஞ்சு மசாஜ் சிகிச்சை...

தலை எப்போதும் சுத்தமாக இல்லாவிட்டால், அது குப்பைக் கூடையாகி அரிப்பு ஏற்படும். இந்த அரிப்பை அடியோடு அகற்றுகிறது. ஆரஞ்சு மசாஜ் சிகிச்சை.

உலர்ந்த ஆரஞ்சு தோல் - 100 கிராம், வெந்தயம் - 100 கிராம், பிஞ்சு கடுக்காய் - 10 கிராம், வால் மிளகு - 10 கிராம், பச்சை பயறு - கால் கிலோ... எல்லாவற்றையும் கலந்து அரைத்துக் கொள்ளுங்கள். இதை வாரம் இரு முறை தலையில் நன்றாகத் தேய்த்துக் குளியுங்கள்.அரிப்பு போவதுடன் சுத்தமும், வாசனையுமாகக் கூந்தல் பளபளக்கும்.

6.  ஆரஞ்சு ஃப்ருட் பேக்...வெளி தூசுகளால் முகம் சிலருக்கு களையிழந்து காணப்படும். அவர்களின் முகத்தில் ஒளியேற்ற இதோ ஆரஞ்சு ஃப்ருட் பேக்.

ஆரஞ்சு தோலை துண்டுகளாக்கி பவுடராக்கிக் கொள்ளுங்கள். இந்தப் பவுடர், முல்தானிமட்டி, சந்தனம் மூன்றும் ஒரே அளவு எடுத்து தயிருடன் கலந்து, முகத்துக்கு பேக் போட்டு 5 நிமிடம் கழித்து கழுவுங்கள் வாரம் ஒரு முறை இதை முகத்துக்கு போட்டு வர பேஷியல் செய்தது போல் முகம்பிரகாசமாக ஜொலிக்கும். தயிருக்குப் பதிலாக ஆரஞ்சு ஜூஸையும் பயன்படுத்தலாம்.

சிட்னி, ஜூன்.29- ஆஸ்திரேலியாவில் தற்போது மேற்கொள்ளப்பட்ட கணக்கெடுப்பின் படி, இந்து மதத்தை பின்பற்றுவோர்கள் 4ஆம் இடத்தைப் பிடித்ததோடு, வேகமாக வளர்த்துவரும் பட்டியலிலும் இடம்பிடித்துள்ளனர்.    

2017ஆம் ஆண்டின் கணக்காய்வின்படி, இந்தியாவை பூர்வீகமாக கொண்ட இந்து மதம், ஆஸ்திரேலியாவில் தற்போது வேகமாக வளர்ந்து வரும் மதங்களின் பட்டியலைலில் இடம்பிடித்துள்ளது.   

கடந்த 2006ஆம் ஆண்டு தொடங்கி 2017ஆம் ஆண்டு வரைக்குமான கணக்கெடுப்பின் படி பார்க்கும்போது, இந்து மதம் கிட்டத்தட்ட 500 விழுக்காடு வேகமாக வளர்ந்துள்ளது. 

ஆஸ்திரேலியாவின் மொத்த மக்கள் தொகையில் ஒரு லட்சத்து 29,900 பேர் இந்துக்களாக உள்ளனர். இவர்களில் தமிழர்களும் இங்கு கணிசமாக வாழ்கின்றனர்.  

ஆஸ்திரேலிய மக்களில் 52 விழுக்காட்டினர் கிறிஸ்தவ மதத்தை பின்பற்றி முதலிடத்தில் உள்ளனர். அதனைத் தொடர்ந்து 2.6 விழுக்காட்டுடன் இஸ்லாமிய சமயத்தினர் இரண்டாம் இடத்திலும், 2.5 விழுக்காடு மக்களைக் கொண்ட புத்த சமயத்தினர் மூன்றாம் இடத்திலும் உள்ளனர். அதனைத் தொடர்ந்து 1.9 விழுக்காட்டுடன் இந்து மதம் 4ஆவது இடத்தில் உள்ளது.  

தற்போதைய நிலவரப்படி இந்து மதம் 4 வது இடத்தில் இருந்தாலும் முன் எப்போதும் இல்லாத அளவிற்கு வேகமாக வளர்ந்து வருகின்றது என்பது குறிப்பிடத்தக்கது. ஆஸ்திரேலியாவில் கடந்த ஐந்து ஆண்டுகளில் மட்டும் இந்து மதத்தின் வளர்ச்சி 60 விழுக்காடு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.  

இந்தியாவில் இருந்து குடியேறிய இந்தியர்கள், அங்கு தங்களுக்கு வழிபாட்டு தலங்களையும் கட்டி, திருவிழாக்களையும் நடத்தி வருவதோடு இந்துகளின் பாரம்பரியத்தையும் கடைபிடித்து வருகின்றனர். 

 

 

ஜொகூர்பாரு, ஜூன். 29- கூலாய்யில் அமைந்துள்ள ஶ்ரீ ராகவேந்திர சுவாமி மடாலயத்தின் 346ஆம் குரு ஆராதனை மகா உற்சவம் மிக விமரிசையாக நடைபெறவுள்ளது. இதில் பொதுமக்கள் திரளாக வருகை தருமாறு ஆலய நிர்வாகம் கேட்டுக் கொண்டது.

ஆராதனை மகா உற்சவத்தை முன்னிட்டு வரும் ஜூலை முதலாம் தேதி தொடங்கி வரும் அக்டோபர் 12ஆம் தேதி வரை 101 நாள்களுக்கு சிறப்புப் பூஜைகள் நடைபெறவுள்ளன. இந்த உற்சவத்தின் முதல் நாளன்று அதிகாலை 6.00 மணியளவில் கொடியேற்ற விழாவும் அதனைத் தொடர்ந்து சிறப்புப் பூஜைகளும் அன்னதானமும் நடைபெறும்.

இந்த 101 நாள்களுக்கு பஞ்சமுகி ஆஞ்சநேய குரு பூஜை, குரு பூர்ணிமா, ஶ்ரீ பகவதி மாஞ்சாலி அம்மன் பூஜை, அமாவாசை தர்ப்பணம், ஶ்ரீ நாகம்மா பூஜை, ஶ்ரீ வரலட்சுமி விரதப் பூஜை, மகா பூர்வ ஆராதனை, மகா உற்சவ ஆராதனை, ஶ்ரீ கிருஷ்ண ஜெயந்தி, ரத ஊர்வலம், விநாயகர் சதுர்த்தி ஆகியவற்றுடன் இறுதி நாளான 12.10.2017இல் பாகவதர் நடனமும் பூர்த்தி பூஜையும் நடைபெறும் என மடாலயத்தின் நிர்வாகத்தினர் கூறினார். 

கூலாய், ஶ்ரீ ராகவேந்திரா மடாலயத்தில் நடைபெறவுள்ள 346ஆவது ஆராதனை மகா உற்சவம் தொடர்பாக சுவாமி பாலகுரு 016-7133153, மாதாஜி லதா 017-7681112 ஆகியோருடனும் 016-7325021 என்ற எண்ணில் மடாலயத்துடன் தொடர்பு கொள்ளலாம்.

மஞ்சோங் மாவட்டத்திலுள்ள செங்காட் கூரிங், சொகமனா தோட்ட ஶ்ரீமகா மாரியம்மன் ஆலயத்தின் 24ஆம் ஆண்டு தீமிதி திருவிழா எதிர்வரும் ஜூலை 1ஆம் தேதி சனிக்கிழமையன்று வெகு சிறப்பாக நடைபெறவிருக்கிறது.

அன்றைய தினம் காலை 6.30 மணிக்கு மேல் கும்ப பூஜை, சங்கு பூஜை, மூல மந்திர ஜெப ஹோமத்துடன் தொடங்கும் விழாவில் 9 மணிக்கு பால் அபிஷேகம் அடுத்து சங்காபிஷேகம் இடம்பெறும்.

காலை 9.30 மணியளவில் பூக்குழி திறக்கப்படும். நண்பகல் 12 மணிக்கு சிறப்பு பூஜையும் 1 மணிக்கு மேல் மகேஸ்வர பூஜையைத் தொடர்ந்து அன்னதானமும் இடம்பெறவிருக்கிறது.

மறுநாள் 2ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை ஶ்ரீசீத்தா – ராமர் திருக்கல்யாணத்துடன் மாலை 6 மணிக்கு மேல் இரதம் ஊர்வலம் புறப்பட்டு, பின்னர் இரவு இரதம் ஆலயம் வந்தடையும்.

மறுநாள் 3ஆம் தேதி திங்கட்கிழமை சக்தி கரகம் வீதி உலாவுதலுடன் மஞ்சள் நீர் விளையாட்டு, பின்னர் 7.30 மணியளவில் முனீஸ்வரருக்கு பால் பூஜையும் நடைபெறும்.

அண்மையில் வெகுசிறப்புடன் கும்பாபிஷேகம் கண்ட சொகமனா தோட்ட ஶ்ரீமகா மாரியம்மன் ஆலயத்தின் திருப்பணிக்கு கோலாலம்பூர், ஜொகூர்பாரு உள்பட மலேசியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் சிங்கப்பூரில் இருந்தும் நிதியுதவி உள்ளிட்ட பல்வேறு உதவிகளை வழங்கிய சொகமனா தோட்ட இளைஞர்கள் இந்தத் தீமிதித் திருவிழாவில் திரளாக கலந்து கொண்டு சிறப்பிக்கும்படி ஆலயப் பொறுப்பாளர்கள் வேண்டுகோள் விடுத்தனர்.

Advertisement