எலுமிச்சை சாறு அதிகம் குடிக்காதீங்க…

சுகாதாரம்
Typography

எலுமிச்சை அதிக அளவு நன்மை தரக்கூடிய, பக்க விளைவுகள் இல்லாத ஒன்று என்று தான் நாம் அறிந்திருக்கிறோம். ஆனால், அளவுக்கு மிஞ்சினால் அதுவும் சில பக்க விளைவுகளை ஏற்படுத்தி விடுகிறது.

சாதாரணமாக, எண்ணெய் பசையுள்ள சருமத்துக்கு எலுமிச்சை சாறு பயன்படுத்தும் போது அது சருமத்திலுள்ள எண்ணெய் பசையைப் போக்கும். ஆனால், வறட்சியான, அல்லது எண்ணெய்ப்பசை குறைவாக உள்ள சருமத்தில் எலுமிச்சை சாறு தடவும்போது, அது சருமத்தை மேலும் வறட்சியாக மாற்றிவிடும்.

பல் மற்றும் ஈறுகளில் உண்டாகும் வலியை குணப்படுத்த எலுமிச்சை சாறும் உப்பும் சேர்த்துப் பயன்படுத்துவது வழக்கம். ஆனால், உடனடியான பலன் வேண்டும் என நினைத்து, அதிக அளவில் எலுமிச்சைச் சாறினைப் பயன்படுத்தினால், அதுவே பல் கூச்சத்தை உண்டாக்கக் காரணமாகிவிடும்.

எலுமிச்சை சாறு வயிற்று உபாதைகளைத் தீர்க்கும். அதேசமயம், மிக அதிகமாக எலுமிச்சை சாறு குடிக்கும்போது, அதிலுள்ள சிட்ரிக் அமிலம் நெஞ்செரிச்சலை உண்டாக்கிவிடும்.

எலுமிச்சை மலச்சிக்கலைப் போக்கும். ஜீரண சக்தியையும் அதிகரிக்கும். ஆனால் அதிக அளவில் எலுமிச்சைச் சாறினைக் குடித்தால் அது வயிறை மந்தமாக்கும். வயிற்றில் எரிச்சலை உண்டாக்கிவிடும்.

ஆகவே, எதுவானாலும் அளவோடு உண்டு ஆரோக்கியமான வாழ்வை வாழ்வோம்.

BLOG COMMENTS POWERED BY DISQUS