இயற்கை உணவு: ஒருநாளைக்கு ஒருவேளை.. ஓ..ஓ.. வாழ்க்கை!

சுகாதாரம்
Typography

ஒருநாளைக்கு ஒரு வேளையாவது இயற்கை உணவை உட்கொண்டு வருவது சாலச் சிறந்தது. அதன் பிறகு உங்கள் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்படுவதை நீங்களே கண்கூடாக உணர்வீர்கள்.

பச்சைப்பயிறு, கொண்டைக்கடலை, வெந்தயம், எள்ளு, வேர்க்கடலை, சூரியகாந்தி விதை, வெள்ளரி விதை, கொள்ளு மற்றும் கறுப்பு உளுந்து போன்ற

தானியங்களை வீட்டிலேயே முளைக்கச் செய்து சாப்பிடுவதுதான் முளைதானிய உணவு எனப்படும்.இந்த தானியங்களை நன்றாக கழுவி குறைந்தது 8 மணி நேரம் ஊற வைத்து பின் ஈரமான துணியில் சுற்றி வைத்து விட்டால் 8–10 மணிக்குள் தானியம் முளைவிட்டு இருக்கும். இந்த தானியஉணவானது ஆரோக்கியத்தையும் அளவற்ற சக்தியையும் அள்ளித்தரும் மலிவான இயற்கை உணவாகும்.

இந்த உணவின் மூலம் புரதம், கால்சியம், சோடியம், இரும்புத்தாது, பொட்டாசியம் மற்றும் பாஸ்பரஸ் போன்றவைகள் கூடுதலாக கிடைப்பதுடன் வைட்டமின் ஏ, பி1 மற்றும் பி2 போன்றவையும் நமக்குக் கிடைக்கிறது.

முளைவிட்ட பச்சைப்பயிறு சாப்பிட்டால் சர்க்கரை நோய் கட்டுப்பாட்டில் இருக்கும். முளைவிட்ட கோதுமை சாப்பிட்டால் புற்றுநோயை தடுக்கமுடியும். முளைவிட்ட எள்ளு சாப்பிட்டால் ஒல்லியானவர்களுக்கு உடல் போடும் கண்பார்வையும் மேம்படும். முளைவிட்ட கொள்ளு சாப்பிட்டால் உடல் பருமன்  குறையும்.

முளைவிட்ட கறுப்பு உளுந்தானது தாய்ப்பால் சுரப்பை அதிகரிக்கச் செய்யும்... மூட்டுவலி தீரும். எந்தவித நோய்களும் வராமல் தடுக்கும் சக்தியும் இந்த முளைவிட்ட தானியங்களுக்கு அதிகம்  உண்டு.

எனவே உடனே இயற்கை உணவுக்கு வாருங்கள் ஆரோக்கியமாக வாழுங்கள்.

BLOG COMMENTS POWERED BY DISQUS