'போலி பல் டாக்டருக்கு ஆதரவா? இல்லவே இல்லை!' சுகாதார அமைச்சு மறுப்பு!

சுகாதாரம்
Typography

 

கோலாலம்பூர், அக்.9-  பல் மருத்துவச் சேவை வழங்கிய போலி பல் மருத்துவருக்கும் சுகாதார அமைச்சுக்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை என்று துணை அமைச்சரின் அலுவலகம் நேற்றுச் செய்தி அறிக்கையை வெளியிட்டது. 

சட்டத்திற்கு எதிராக செயல்படும் யாருக்கும் சுகாதார அமைச்சு எவ்வித ஆதரவையும் வழங்காது என அதில் தெரிவிக்கப்பட்டது. இப்படிப்பட்ட ஒருவருக்கு எவ்வித ஆதரவையும் வழங்கவில்லை என்பதை இங்கு தெரிவிக்கின்றோம்" என துணையமைச்சர் டாக்டர் ஹில்மி யாஹ்யாவின் செயலாளர் அசியான் அரிப்பின் கூறினார். 

உரிமம் பெறாத பல் மருத்துவ கிளினிக்கை நடத்தி வந்த போலி பல் மருத்துவர் நூர் ஃபராஹனிஸ் எசாத்தி என்ற இளம்பெண்ணுக்கு எதிரான வழக்கில் அவர் குற்றவாளி என்று தீர்ப்பளிக்கப்பட்ட வேளையில், அவருக்கு ஆதரவாக சுகாதார அமைச்சும் அதன் துணை அமைச்சரும் செயல்படுகின்றனர் என சமூக வலைத்தளங்களில் பேசப்பட்டு வரும் புரளிக்கு முற்றுப்புள்ளி வைப்பதற்காக இந்த அறிக்கை விடப்பட்டுள்ளது. 

தனது 'இன்ஸ்டாகிராம்' வலைத்தளத்தில் தனக்கு ஆதரவு அளித்தமைக்கு சுகாதார அமைச்சு மற்றும் டாக்டர் ஹில்மிக்கு ஃபராஹனிஸ் நன்றித் தெரிவித்துள்ளார். 

கடந்த செப்டம்பர் 29-ஆம் தேதியன்று, தனியார் சுகாதார வசதிகள் மற்றும் சேவைகள் சட்டம் 1998-யின் கீழ், ஃபராஹனிஸ் குற்றவாளி என்று தீர்ப்பு வழங்கிய மலாக்கா நீதிமன்றம், அவருக்கு ரிம.70,000 அபராதமும் அதைக் கட்டத் தவறினால் 6 மாதச் சிறைத் தண்டனையும் விதித்தது.

அபராதத் தொகையைக் கட்ட முடியாமல் 6 நாட்கள் சிறையில் இருந்த ஃபராஹனிஸ்க்கு அபராதத் தொகையைப் பொது மக்களிடமிருந்து நிதி திரட்டித் தந்து, அவரை சிறையிலிருந்து சில அரசுசாரா இயக்கங்கள் விடுவித்தன என்பது குறிப்பிடத்தக்கது. 

)

BLOG COMMENTS POWERED BY DISQUS