உடனடி கோப்பிக் கலவையால் பாதிப்பு: சுகாதாரத் துறை நடவடிக்கை

சுகாதாரம்
Typography

கோலசிலாங்கூர், ஜன.31- உடனடி கோப்பிக் கலவை (Instant coffee mixture) காரணமாக பினாங்கு மருத்துவமனையில்  சிலர் சேர்க்கப்பட்டு  சிகிச்சை அளிக்கப்பட்டது தொடர்பில் சம்பந்தப்பட்ட கோப்பிக் கலவையின் மாதிரிகளைப் பினாங்கு சுகாதாரத் துறை கைப்பற்றிய ஆய்வுக் கூடச் சோதனைக்கு அனுப்பியுள்ளது.

விரைவில் இந்த சோதனையின் முடிவுகள் வெளியிடப்பட்டு, அது குறித்த அறிவிப்புகள் செய்யப்படும் என்று சுகாதாரத் துறை அமைச்சர் டத்தோஶ்ரீ  டாக்டர் சுப்பிரமணியம் தெரிவித்தார்.

இந்தக் கோப்பிக் கலவையில் தடை செய்யப்பட்ட பொருள்கள் உள்ளடங்கி இருப்பதாக கண்டு பிடிக்கப்பட்டால், நாங்கள் அந்தக் கோப்பிக் கலவை ரகத்தின் பெயர் மற்றும் அதனை தயாரிக்கும் நிறுவனத்தின் பெயர் ஆகியவை பகிரங்கமாக அறிவிக்கப்பட்டு, அவை விற்பனைச் சந்தையில் இருந்து மீட்டுக் கொள்ளப்படும் என்று அவர் சொன்னார்.

இந்தக் கோப்பியைக் குடித்த ஐவர், இதுவரை மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்றுள்ளனர். இது 'டுரியான் வொய்ட் கோப்பி' எனக் கூறி அந்த கோப்பிக் கலவையை விற்பனை செய்துள்ளனர் என்று டத்தோஶ்ரீ சுப்பிரமணியம் தெரிவித்தார். 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

BLOG COMMENTS POWERED BY DISQUS