சுமூகமான வாழ்க்கை, செல்வ செழிப்பு இருப்போரெல்லாம் இரவில் நிம்மதியாகத் தூங்கலாம் எனக் கூறிவிட முடியாது.  நல்ல தூக்கம் அனைவருக்கும் வசமாகிவிடுவதில்லை.  

பொதுவாக கனவுகள் இல்லாத தூக்கமே சிறந்த தூக்கமாகும். கனவுகள் இல்லாத தூக்கத்தைக் காண சுவாசம் சீராக இருக்க வேண்டும்.  சீரான சுவாசம் இருந்தால் தான் நல்ல தூக்கம் ஏற்படும்.

சுவாசத்தில் சிதைவு ஏற்பட்டால், தூக்கத்திலேயே மனம் அதிகம் வேலை செய்ய ஆரம்பித்து விடும். மனம் வேலை செய்வது தான் கனவுகளின் அடிப்படையாகும். உணவு முறையை மாற்றிக்கொண்டால், தூக்கத்தின் போது, சுவாசம் தடை படாது. 

 அதேநேரத்தில் தூக்கத்தைக் கொடுக்கும் உணவுகளைத் தேர்ந்தெடுத்து அளவோடு உண்பதுதான்  தேவைக்குச் சீரான சுவாசத்தை அளிக்கும். இரவில் சாப்பிடும் உணவானது அளவு குறைவாகவும்,  காரமில்லாத, வாயு சேர்க்காத உணவாகவும் இருப்பது மிகவும் முக்கியமாகும்.  

உடல் சுத்தமும், நல்ல காற்றோட்டமும் கூட தூக்கத்திற்கு அடிப்படையாகும். உறங்கப் போகும் முன் முகம், கை, கால்களைச் சுத்தப்படுத்திக் கொள்வதும், நாம் படுக்கும் இடம் சுத்தமாகவும், காற்றோட்டமாகவும் இருக்கும்படி  பார்த்துக்கொள்ள வேண்டும். 

 

குளிர்காலம், மழைக்காலம் வந்துவிட்டால் போதும், சிறு குழந்தைகள் பெரும்பாலோர் மூச்சுத் திணறலால் பாதிக்கப்படுவது வழக்கம். இதனால் குழந்தைகள் மற்றுமின்றி பெற்றோர்களும் பெரும்பாடு படுவார்கள். நிலைமை முற்றும் பட்சத்தில் இன்ஹேலர், நெபுலைசர் போன்றவற்றை தீர்வாக அமைகிறது. வீசிங் பிரச்சனைக்கு தற்காலிகத் தீர்வாக இது அமைந்தாலும், இதனால் பக்கவிளைவுகள் எதுவும் ஏற்படுமா என்பதே பல பெற்றோர்களின் சந்தேகமாக இருந்து வருகிறது. 

“தூசி, புகை போன்றவற்றால் ஏற்படும் அலர்ஜி காரணமாகவும் மழை, குளிர்காலங்களிலும் சிறு குழந்தைகளுக்கு அடிக்கடி சளி பிடிப்பதோடு, ஆஸ்துமாவாலும் வீசிங் பிரச்னை ஏற்பட்டு மூச்சுவிடுவதில் மிகவும் சிரமப்படுகிறார்கள். 

இதற்கு  மூக்கினால் உறிஞ்சக்கூடிய இன்ஹேலர் (Inhaler), வாயினால் உறிஞ்சக்கூடிய இன்ஹேலர் (Oral inhaler) மற்றும் நெபுலைசர் (Nebulizer) போன்றவற்றின் மூலம் மருந்துகள் கொடுக்கப்படுகின்றன. இவை நுரையீரலில் நேரடியாகச் செயல்பட்டு மூச்சுக்குழாயில் ஏற்படும் வீக்கத்தையும் எரிச்சலையும் கட்டுப்படுத்துவதால், குழந்தைகள் சிரமமின்றி மூச்சுவிட முடியும். மூக்கினால் உறிஞ்சக்கூடிய இன்ஹேலர், நெபுலைசர் போன்றவற்றால் எந்த பக்கவிளைவோ, பாதிப்போ ஏற்படாது. இவை குழந்தைகளுக்கு  மிகவும் பாதுகாப்பானவை. 

மாறாக வாயில் உறிஞ்சக்கூடிய இன்ஹேலர்களிலும் (Oral inhalers), உள்ளே கொடுக்கும் மாத்திரைகளிலும் கார்ட்டிகோ ஸ்டீராய்டுகள் உள்ளன. இந்த ஸ்டீராய்டு மருந்துகளை தொடர்ந்து 6 மாதங்களுக்கு மேல் எடுத்துக் கொள்ளும் பச்சிளம் குழந்தைகளுக்கும் (Infants), 2 முதல் 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கும் பக்கவிளைவுகள் ஏற்படக்கூடும். இந்த மருந்துகள் அப்போதைக்கு குழந்தைகளை மூச்சுவிடுவதில் உள்ள சிரமத்திலிருந்து விடுவித்தாலும், எலும்புகளின் வளர்ச்சியைக் குறைக்கிறது. 

அவர்களின் வளர்ச்சி விகிதத்தையும் பாதித்து உயரத்தைக் குறைக்கிறது. வளரும் பருவத்தில் ஆரோக்கியமான மற்ற குழந்தைகளைவிடவும் உயரம் குறைந்தவர்களாகவே இருப்பார்கள். ஸ்டீராய்டு மருந்துகளின் நீண்ட நாள் உபயோகத்தால் இக்குழந்தைகளின் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்து அடிக்கடி நோய்வாய்ப்படுவார்கள். அடிக்கடி தொற்று நோய் பாதிப்புக்குள்ளாவார்கள். எனவே,  மருத்துவரின் ஆலோசனையின்றி  ஓரல் இன்ஹேலர்ஸ், மாத்திரைகள் போன்றவற்றை குழந்தைகளுக்கு கொடுப்பதை தவிர்க்க வேண்டும்.

 

 

 

அமினோ அமிலம் அதிகம் உள்ள முட்டைகோஸ், ப்ரோகோலி, காலிஃப்ளவர் போன்ற காய்கறிகளை ஹைப்போ தைராய்டு  பிரச்னை உள்ளவர்கள் எடுத்துக் கொள்ளும்போது தைராய்டை சமநிலைப்படுத்தும் ஹார்மோன் சுரப்பை (Thyroid  Stimulating Hormone(TSH) தடுக்கும். எப்படி?

உணவிலிருந்து உடலுக்கு கிடைக்கும் அயோடின் அளவில் 80 சதவிகிதத்தை தைராய்டு ஹார்மோன் உற்பத்திக்கு எடுத்துக்  கொள்கிறது. க்ளூகோசினுலேட்ஸ் (Glucosinulates) என்று சொல்லக்கூடிய சல்பர் மற்றும் நைட்ரஜன் கொண்டசேர்மங்கள்,  இவ்வகைக் காய்கறிகளில் அதிகம் உள்ளது. இந்த சேர்மங்களினால் ஏற்படும் ரசாயன எதிர்வினையானது உணவிலிருந்து உடல்,  அயோடின் உள்வாங்குவதைத் தடுக்கிறது. அயோடின் குறைவதால் தைராய்டு சுரப்பு குறைந்து ஹைப்போதைராய்டிசம்  ஏற்படுகிறது. 

தைராய்டு பிரச்னை உள்ளவர்கள் முதல் நாள் இரவு இவ்வகைக் காய்கறிகளை எடுத்துக்கொள்ளும்போது, மறுநாள் காலையில்  கை, கால்கள் சற்று பருத்தாற்போல இருக்கும். சிலருக்கு கைவிரலில் உள்ள மோதிரத்தைக் கழற்ற முடியாமல் கூட போகும்.  அவர்கள் என்ன காரணம் என்று தெரியாமல் இருப்பார்கள். 


அதற்கு ரசாயன எதிர்வினையே காரணம்.தைராய்டு சிகிச்சைக்காக குறைந்த அளவு மாத்திரை எடுத்துக் கொள்பவர்கள், சமைத்த  கோஸை 100 கிராம் அளவு வரை தாராளமாக சாப்பிடலாம். அதுவும் இவ்வகைக் காய்களை பச்சையாக சாலட்டாகவோ,  ஜூஸாகவோ உணவில் சேர்த்துக் கொள்ளக்கூடாது. வேக வைத்து உண்பதே சிறந்தது. அதிக அளவு மாத்திரை எடுத்துக்  கொள்பவர்களானால் தைராய்டு சிகிச்சை முடியும் வரை கோஸ், காலிஃப்ளவர், ப்ரக்கோலி போன்ற காய்கறிகளை தவிர்ப்பதே  நல்லது.

பின்லாந்து, மார்ச் 9- அதிகமான கொழுப்பு நிறைந்த உணவும், முட்டைகளும் சாப்பிடு வதால் மாரடைப்பு ஏற்படுவதற்கான வாய்ப்பு இல்லை என புதிய ஆய்வில் தெரியவந்துள்ளது.

திடீரென ஏற்படும் மாரடைப் புக்கும், கொழுப்பு சத்து நிறைந்த உணவுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்றும் அந்த ஆய்வு முடிவு தெரிவிக்கிறது.

கிழக்கு பின்லாந்து பல்கலைக் கழகத்தில் உள்ள இதய நோய் பாதிப்புக்கான காரணங்கள் குறித்த ஆய்வு 1984 முதல் 1989ஆம் ஆண்டு வரை நடத்தப்பட்டது. இதய நோய் பாதிப்பு இல்லாத மிகுந்த ஆரோக் கியமான 42 முதல் 60 வயது நிரம்பிய 1,032 ஆண்களின் தினசரி உணவு பழக்க வழக்கத்தை வைத்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

அவர்கள் அனைவருக்கும் தினசரி கொழுப்பு சத்து நிறைந்த உணவுகளும், ஒரு முட்டையும் வழங்கப்பட்டது. 21 ஆண்டு காலங்களாக நடத்தப்பட்ட ஆய்வில் கொழுப்பு சத்து நிறைந்த உணவை சாப்பிடுவதால், நாளொன்று ஒரு முட் டையை சாப்பிடுவதாலோ மார டைப்பு ஏற்படுவதில்லை என்பது நிறுபணமானது.

230 ஆண்களுக்கு கொழுப்பு சத்தை பாதிக்கும் (APOE4 ஃபீனோடைப்) வளரும் சிதை மாற்றங்களால் மட்டுமே மாரடைப்பு ஏற்பட்டதை அறிந்து கொள்ள முடிந்தது. மேலும் கொழுப்பு உணவுக்கும், வளரும் சிதை மாற்றங்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்றும் ஆய்வில் தெரியவந்துள்ளது.