ஈப்போ, ஜூலை.17- பேரா அரசாங்கம் திங்கட்கிழமை தொடங்கி மாத்தாங் துணை மாவட்டத்தை வெறி நாய்க்கடி நோய்க் கிருமிகள்  பரவும் பகுதியாகப் பிரகடனப் படுத்தியுள்ளதாக மந்திரி புசார் டத்தோ ஸ்ரீ டாக்டர் ஜம்ரி அப்துல் காதிர் தெரிவித்தார்.

வெறி நாய்க்கடி நோய் பரவாமல் தடுக்க இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக பிரகடனத்த்தில் கையெழுத்திட்ட போது டாக்டர் ஜம்ரி கூறினார்.

பேரா மாநிலத்தில் இதுவரை ஒரு சம்பவம் மட்டுமே பதிவாகி உள்ளது. இருப்பினும் இந்த நோயைக் கட்டுப்படுத்த பல நடவடிக்கைகள் மேற்கொள்ளப் படவிருக்கின்றன. மாத்தாங் துணை மாவட்டத்தில் குடியிருப்பவர்கள் தங்கள் நாய்களை வெளியே அழைத்துச் செல்ல அனுமதிக்கப்பட மாட்டார்கள் என அவர் செய்தியாளர்களிடம் சொன்னார். 

அண்மையில் கோல செபாத்தாங்கில் வெறிநாய்க் கடிக் நோயால் பாதிக்கப்பட்ட நாய் ஒன்று, இரு சிறுமிகளை தாக்கியது. இந்தச் சம்பவம் நிகழ்ந்த இடத்திலிருந்து 1 கிலோமீட்டர் சுற்று வட்டாரத்தில் உள்ள அனைத்து வளர்ப்பு பிராணிகளுக்கும் நோய் தடுப்பூசி போடப்பட்டு வருவதாக அவர் கூறினார்.

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

லண்டன், ஜூலை.17- இரவு நேரத் தூக்கத்தில் பற்களை நறநறவென கடிக்கும் பழக்கம் உள்ளவர்களுக்குத் தலைவலி, பல் தேய்மானம், ஈறுகளில் புண் என பல்வேறு தொந்தரவுகள் ஏற்படும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை இரவில் தூங்கும் போது பல் கடித்தால் பழக்கம் உண்டு. ஆனால், நாம் பொதுவாக அதனை பெரிதாக கண்டு கொள்வதில்லை. ஆனால், அது உடலில் பல்வேறு வகையான நோய்களை உருவாக்கும் என்கிறார்கள் மருத்துவர்கள்.

குறிப்பாக, குழந்தைகள் இப்படி செய்வதை பெற்றோர்கள் உன்னிப்பாக கவனித்து சிகிச்சை அளிக்கவேண்டும் என்றும் பள்ளி ஆசிரியர்கள் இது குறித்த விழிப்புணர்வை குழந்தைகளுக்கு ஏற்படுத்த வேண்டும் என்று தெரிவிக்கப் பட்டுள்ளது.

இது தொடர்பாக பிரசித்திபெற்ற மருத்துவ இதழ் ஒன்று ஆய்வு கட்டுரை வெளியிட்டுள்ளது. அதில், 13 வயது முதல் 15 வயது வரை உள்ள மாணவ, மாணவியர்தான் 4 மடங்கு அதிகமாக இரவில் பற்களை கடிக்கும் பழக்கம் உள்ளவர்களாக இருக்கின்றனர் என்ற தகவலை வெளியிட்டுள்ளது.

தூக்கத்தில் பல் கடிப்பதால், தலைவலி, பல் தேய்மானம், தூக்கமின்மை, ஈறுகளில் புண் உள்ளிட்ட பல்வேறு நோய்கள் ஏற்படும் என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். மேல் மற்றும் கீழ் தாடைகளில் உள்ள பற்களை ஒன்றாக அழுத்துவதால், பல் கூச்சம், பற்கள் உடைதல், பற்கள் விழுதல், முகம் மற்றும் தாடையில் வலி ஏற்படுதல் போன்ற பிரச்சனைகளை அதிகரிக்கும்.

ஆனால், பயப்பட ஒன்றுமில்லை என்றும் சிறப்பான சிகிச்சைகள் உள்ளன என்றும் மருத்துவர்கள் கூறுகின்றனர். கார்டு அல்லது ஸ்ப்ளிண்ட் ஆகிய கடினமான பிளாஸ்டிக் உபகரணத்தைப் பற்களில் பொருத்துவதன் மூலம் பற்கள் கடிப்பதைத் தடுக்கமுடியும். 

தூக்கத்தின் போது, மூச்சுத் திணறல், குறட்டை விடுதல் உள்ளிட்ட பிரச்சனைகளும் பற்களை கடிக்கும் பழக்கத்தை உண்டாக்குமாம். புகைப் பழக்கம், மது உட்கொள்ளுதல், மன அழுத்தம் போன்றவையும் பற்களைக் கடிக்கும் பிரச்சனை உருவாக்கும்  என்கிறார்கள் மருத்துவர்கள்.

 

லண்டன், ஜூலை 7- அதிக மன அழுத்தம் காரணமாக ஒருவித படபடப்பு மற்றும் திடீரென இதயத்தில் வலி ஏற்பட்டு, அந்த வலி, கை முதல் தோள்பட்டை வரை பரவ ஆரம்பிக்கும். இதுதான் மாரடைப்புக்கான முன் அறிகுறிகளில் ஒன்றாகும்.

இத்தகைய சூழ்நிலையில் உதவிக்கு என்று யாரும் இல்லாத போது தன்னைக் காப்பாற்றிக் கொள்ள என்ன செய்ய வேண்டும்? அதாவது திடீரென ஏற்படும் மாரடைப்பின் போது என்ன செய்யலாம்?

இருதயத்தில் ஏற்படும் வலியினால் சுயநினைவை இழக்க வெறும் 10 வினாடிகள்தான் உள்ளன என்ற போதிலும் கூட பாதிக்கப்பட்டவர் தனது உயிரைக் காப்பாற்றிக் கொள்ள முடியும்.

இந்த நிலையில் இருமல் உங்களைக் காப்பாற்றும் தொடர்ச்சியாக, மிக ஆக்ரோஷமாக இரும வேண்டும். ஒவ்வொறு முறையும் இருமுவதற்கு முன் மூச்சை நன்றாக இழுத்து விட வேண்டும். இருமல் ஆழமானதாக இருக்க வேண்டும்.

இருதயம் இயல்பு நிலை திரும்பும் வரை, ஒவ்வொரு இரண்டு வினாடிக்கும் மூச்சை இழுத்து விட்டு இருமிக் கொண்டே இருக்க வேண்டும்.

இருமல் மற்றும் மாரடைப்பிற்குத் தொடர்பு இருக்கிறது. இருதயத்தில் வலி ஏற்படும் போது நாம் மூச்சை இழுத்து விடுவதால் நுரயீரலுக்கு ஆக்ஸிஜன் சீராக செல்லும். தொடர்ச்சியாக இருமிக் கொண்டே இருப்பதால் இருதயம் நிற்காமல் துடித்து கொண்டே இருக்கும்.

மேலும், அவ்வாறு இருமிக் கொண்டே இருக்கும் பொழுது ஏற்படும் அதிர்வு இருதய துடிப்பை சீராக்கி இரத்த ஓட்டத்தையும் சீராக்கும்.

தானிய வகைகளில் ஒன்றான கோதுமை உலகில் மற்றப் பயிர்களைக் காட்டிலும் அதிகமாக பயிரிடப்படுகிறது. பஞ்சாபிகளின் முதன்மை உணவாகவும் கோதுமை இருக்கிறது. கோதுமை ஊட்டச்சத்துகள் நிறைந்தது; நோய்களைக் குணப்படுத்தும் தன்மை வாய்ந்தது.

சர்க்கரை நோய் இன்று பெரும்பாலானவரைத் தாக்கி வருகிறது. கோதுமை அதற்கு சிறந்த மருந்தாக விளங்குகிறது. அதிலும் குறிப்பாக சம்பா கோதுமை சர்க்கரையின் அளவைக் கணிசமாகக் குறைப்பதுடன் மொத்தக் கொழுப்புச்சத்து மற்றும் டிரைகிளைசிரைட் (Triglyceride) அளவையும் குறைக்கிறது. ஆகவேதான் நம் வைத்தியர்கள் இதை ஒரு மருந்தாகக் கருதுகிறார்கள். சம்பா கோதுமையில் அதிக நார்ச்சத்தும் உயிர்ச்சத்தும் நிறைந்திருக்கின்றன.

முதுகுவலியும் மூட்டுவலியும் பலரைப் பாடாய்ப்படுத்தி வருகிறது. இந்த பிரச்சனைக்குக் கோதுமையை வறுத்து, பொடியாக்கி அதனுடன் தேன் சேர்த்துச் சாப்பிட்டால் விரைவில் பலன் கிடைக்கும். கோதுமை, உளுந்து, கஸ்தூரி மஞ்சளைப் பொடியாக்கி வெந்நீர்விட்டுக் கலந்து, மூட்டுவலி உள்ள இடங்களில் பூசி வந்தாலும் நிவாரணம் கிடைக்கும்.

மேலும், குறைந்த கலோரி இருப்பது இதன் கூடுதல் சிறப்பு. இதனால் கோதுமை ரவையைத் தொடர்ந்து சாப்பிட்டு வருபவர்களின் உடல் எடை கணிசமாகக் குறையும். அதேநேரத்தில் உடல் ஆரோக்கியம் மேம்படும்.  

கோதுமை மாவில் செய்த உணவுகளை உண்டு வந்தால், உடல் பலம் பெறும்; ஆண்மை அதிகரிக்கும். தீப்பட்ட இடங்கள், தோல் உரிந்த இடங்கள் போன்றவற்றில் இதன் மாவை நேரடியாகவோ, வெண்ணெய் சேர்த்தோ பூசினால் எரிச்சல் தணியும்.

More Articles ...