உணவு சாப்பிடும் போது கை கழுவுவது வழக்கமான ஒன்று. ஆனால், சிலர் வெந்நீரில் மட்டுமே கைகளைக் கழுவுகின்றனர். இதன் மூலம், பாக்டீரியா கிருமிகள் அழிந்து விடும் என நம்புகின்றனர்.

அவ்வாறு அவர்கள் கருதுவது தவறு. குளிர்ந்த நீரில் கை கழுவினாலும் பாக்டீரியா கிருமிகள் அழியும். இதை அமெரிக்க விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.

கைகளில் உள்ள பாக்டீரியாக்களை நீக்க கைகளை 10 வினாடிகள் கழுவினாலே போதும், என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர். பாக்டீரியாக்களை அழிக்க வெப்பம் தேவையில்லை வெந்நீரை விட குளிர்ந்த தண்ணீரே அதிக சக்தி கொண்டது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

எலுமிச்சை அதிக அளவு நன்மை தரக்கூடிய, பக்க விளைவுகள் இல்லாத ஒன்று என்று தான் நாம் அறிந்திருக்கிறோம். ஆனால், அளவுக்கு மிஞ்சினால் அதுவும் சில பக்க விளைவுகளை ஏற்படுத்தி விடுகிறது.

சாதாரணமாக, எண்ணெய் பசையுள்ள சருமத்துக்கு எலுமிச்சை சாறு பயன்படுத்தும் போது அது சருமத்திலுள்ள எண்ணெய் பசையைப் போக்கும். ஆனால், வறட்சியான, அல்லது எண்ணெய்ப்பசை குறைவாக உள்ள சருமத்தில் எலுமிச்சை சாறு தடவும்போது, அது சருமத்தை மேலும் வறட்சியாக மாற்றிவிடும்.

பல் மற்றும் ஈறுகளில் உண்டாகும் வலியை குணப்படுத்த எலுமிச்சை சாறும் உப்பும் சேர்த்துப் பயன்படுத்துவது வழக்கம். ஆனால், உடனடியான பலன் வேண்டும் என நினைத்து, அதிக அளவில் எலுமிச்சைச் சாறினைப் பயன்படுத்தினால், அதுவே பல் கூச்சத்தை உண்டாக்கக் காரணமாகிவிடும்.

எலுமிச்சை சாறு வயிற்று உபாதைகளைத் தீர்க்கும். அதேசமயம், மிக அதிகமாக எலுமிச்சை சாறு குடிக்கும்போது, அதிலுள்ள சிட்ரிக் அமிலம் நெஞ்செரிச்சலை உண்டாக்கிவிடும்.

எலுமிச்சை மலச்சிக்கலைப் போக்கும். ஜீரண சக்தியையும் அதிகரிக்கும். ஆனால் அதிக அளவில் எலுமிச்சைச் சாறினைக் குடித்தால் அது வயிறை மந்தமாக்கும். வயிற்றில் எரிச்சலை உண்டாக்கிவிடும்.

ஆகவே, எதுவானாலும் அளவோடு உண்டு ஆரோக்கியமான வாழ்வை வாழ்வோம்.

 நியூயார்க், மே.22- 'தம்' அடிக்கிற பழக்கம் உள்ளவரா நீங்கள்? அப்படியானால், தினமும் மூன்று வேளை கொஞ்சம் பழங்களுடன் காய்கறிகளையும் உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள். கால் நரம்புகளில் இரத்த ஓட்டம் தடைபட்டு அவதிப்பட வேண்டிய அவசியம் இருக்காது என்று ஆய்வு கூறுகிறது.

லட்சக்கணக்கான மக்களின் உணவுப் பழக்கம் மற்றும் உணவுக் கட்டுப்பாடு தொடர்பாக நடத்தப்பட்ட ஆய்வுகளுக்குப் பின்னர் நமது இரத்த நாளங்களைப் பாதுகாக்க பழங்கள், காய்கறிகள் முக்கியம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக, புகைக்கும் பழக்கம் கொண்டவர்கள், மற்றும் அதனைக் கைவிட்டவர்கள் ஆகியோர் ஒவ்வொரு நாளும் மூன்றுவேளை பழங்கள் மற்றும் காய்கறிகளை உணவில் சேர்த்துக் கொண்டால் கால்களிலுள்ள இரத்த நாளங்களில் அடைப்பு ஏற்படுவதைத் தடுக்கமுடியும்.

சராசரியாக 60 வயதுடையவர்களிடம் நடத்தப்பட்ட ஆய்வில், கால்களில் இரத்த ஓட்டம் குன்றி, கடும் வலி, மற்றும் நடக்க முடியாமல் போகும்நிலை உருவாவதற்கு இதுதான் காரணம் என்று கண்டறியப்பட்டுள்ளது.

கால்களிலுள்ள நரம்புகளுக்குள் இரத்தம் இயல்பாக பாயவிடாமல், ஆங்காங்கே திட்டுத்திட்டாய் கட்டிக் கொள்ளும் கொழுப்புகளைக் கரைக்க, பழங்களும் காய்கறிகளும் அவசியமாகிறது என்று அந்த ஆய்வு குறிப்பிட்டது.

 

 

பெய்ஜிங் , மே.15- ஆண்கள் நேரங்காலமே தூங்கப் போனால், நேரங்காலமே நல்ல ஆரோக்கியமான பிள்ளை பிறக்கும் என்று மருத்துவ நிபுணர்கள் மேற்கொண்ட ஆய்விலிருந்து தெரிய வந்துள்ளது.

இரவு 8 மணிக்கும் 10 மணிக்கும் இடையே ஆண்கள் துங்குவதற்கு பழகிகொள்ள வேண்டும் இதனால் ஆணின் விந்து அணுக்கள் த்ரமான நிலையை எட்ட இந்தத் தூக்கம் அவசியமானது என்று சீனாவிலுள்ள ஹர்பின் மருத்துவ பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர்.

மேற்குறிப்பிட்ட நேரத்திற்குள் படுக்கைக்கு சென்று விடுபவர்கள் ஆரோக்கியமான விந்து அணுக்களை கொண்ட்டிருப்பர் என்றும் இதன் தன்மை எளிதில் பெண்களின் கருமுட்டை செறிவடையச் செய்யக் கூடியவையாக உள்ளன என்றும் நிபுணர்கள் கூறினர்.

அதேவேளையில் மிக காலதாமதமாக படுக்கைக்குச் செல்பவர்கள், குறிப்பாக, 12 மணிக்குப் பிறகு தூங்கச் செல்பவர்களின் விந்து அணுக்களின் எண்ணிக்கை மிகவும் குறைந்து காணப்படும். குறிப்பாக, 6 மணி நேரத்திற்கும் குறைவான தூக்கத்தைக் கொண்டிருப்பவர்களின் நிலைமை மோசமாக இருக்கும் என்று அவர்கள் தெரிவித்தனர்.

இரவு எட்டு மணிநேரம் ஆழ்ந்து தூங்குகிற ஆண்களின் விந்து அணுக்களின் எண்ணிக்கையைக் காட்டிலும் 6 மணிநேரத்திற்கும் குறைவாகத் தூங்குகிறவர்களின் விந்து அணுக்களின் எண்ணிக்கை 25 விழுக்காடு குறைவாகவே இருக்கும் என்று அவர்கள் குறிப்பிட்டனர்.

கிட்டத்தட்ட 981 ஆண்களிடம் நடத்தப்பட்ட ஆய்வுகளின் முடிவில் இது கண்டறியப்பட்டுள்ளது.

More Articles ...