கோலாலம்பூர், பிப்.24- தூக்கத்தில் குறட்டை விடுவது உயிருக்கே ஆபத்தாக அமையும் என மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர். குறிப்பாக, மலேசியர்கள் இதில் அதிக கவனம் செலுத்தவேண்டும் என அவர்கள் கோடிக் காட்டியுள்ளனர்.

தூக்கத்தில் குறட்டை விடும் பழக்கம் மலேசியாவில் அதிகரித்து வருகிறது. தற்போதைய வாழ்க்கை சூழ்நிலையால் அதிகரித்து வரும் இந்த பிரச்சனையை மலேசியர்கள் பொருட்டாக கருதுவதில்லை என மருத்துவர்கள் கூறியுள்ளனர். காது, மூக்கு, தொண்டை மருத்துவ நிபுணரான டாக்டர் முகமட் நோர்ஹிஷாம் சாலே கூறுகையில், நீரிழிவு நோயைப் பற்றி பரிசோதிக்கும் மலேசியர்கள் குறட்டை பற்றி அலட்சியம் செய்கின்றனர் என்றார்.

பொதுவாகவே மலேசியர்கள் நீரிழவு நோய், ரத்த கொதிப்பு மற்றும் வழக்கமான பரிசோதனைகளை மட்டுமே மேற்கொள்ள முனைகின்றனரே தவிர குறட்டை பற்றி பரிசோதிக்க தயங்குகின்றனர் என்று அவர் கூறினார். ஆனால், குறட்டை விடும் பழக்கம் சரி செய்யாவிட்டால் அது மரணத்தில் கொண்டு போய் சேர்க்கும் என அவர் எச்சரித்தார். 

குறிப்பாக, குறட்டை பிரச்சனையால் நோய் இல்லாதவர்களுக்கும் நீரிழிவு நோய், ரத்த கொதிப்பு வருவதோடு புற்றுநோயும் உண்டாகுவதற்கு வாய்ப்பு உள்ளது என அவர் எச்சரித்தார். 

நாம் தூங்கும் சமயத்தில், மூச்சுக் குழாய் பாதி அல்லது முழுமையாக அடைத்துக் கொள்ளும் போது குறட்டை ஏற்படுகிறது. அடைப்பினால் உடலுக்கு தேவையான பிராணவாயு குறைவதோடு, கரிமிலவாயு அளவு உடலில் அதிகரிக்கிறது. இதனால் தூக்கத்திலேயே உயிர் பிரியும் அபாயம் அதிகம். 

ஆண் பெண் என பேதம் இல்லாமல் இரு பாலரும் குறட்டையால் பாதிக்கப்படும் நிலையில், மருத்துவர்களின் ஆலோசனை பெறுவது மிக அவசியம் என டாக்டர் நோர்ஹிஷாம் கூறினார். குறட்டையை தவிர்ப்பது குறித்து மருத்துவ நிபுணர்கள் மட்டுமே வழிக் கூறமுடியும் என்பதோடு, சில வேளை 'தொடர் மூச்சுக் காற்று' கொடுக்கும் இயந்திரத்தைப் பயன்படுத்தக்கூடிய வசதியும் தற்போது மருத்துவத்தில் உள்ளது என அவர் மேலும் கூறினார்.

மதிய உணவு சாப்பிட்டப் பின்,  வாய்க்கு ருசியாக ஏதாவது இனிப்பாக ஏதாவது  சாப்பிட்டால் நன்றாக இருக்குமே என்று தோன்றுவது வழக்கம். அதனால் தான், அலுவலக இடைவேளைகளின் போது, மதிய உணவுக்குப் பின் அருகிலுள்ள திண்பண்டம் அல்லது மிட்டாய் கடைகள் பக்கம் கூட்டத்தைக் காணலாம். சாப்பிட்டவுடன் இனிப்பாக சாப்பிடத் தோன்றுவது ஏன் தெரியுமா? தொடர்ந்து படியுங்கள்: 

பெரும்பாலும் 40 முதல் 50 வயது வரைஉள்ளவர்கள்தான் சாப்பிட்டவுடன் ஏதாவதொரு இனிப்பு சாப்பிடும் பழக்கம் உடையவர்களாக இருக்கிறார்கள். பெண்களின் உடலில் ஏற்படும் ஹார்மோன் மாற்றங்கள், அவர்களுக்கு இந்தப் பழக்கம் ஏற்பட காரணமாகிறது. 

மேலும் ஆண்கள் அதிகமாக வெளியிடங்கள், உணவகங்களில் சாப்பிடுவதால் இந்தப் பழக்கம் அவர்களுக்கு ஏற்படுகிறது. இதற்குக் காரணம், நமது நாக்கைச் சுற்றிலும் உள்ள சுவை அரும்புகள் தான். இந்த சுவை அரும்புகளின் சுரப்பி கள் மூலமாகவே இனிப்பு, கசப்பு, கார்ப்பு, புளிப்பு, உவர்ப்பு, துவர்ப்பு போன்ற அறுசுவைகளையும் நம்மால் வேறுபடுத்தி உணர முடிகிறது. வயது அதிகமாக அதிகமாக உடலில் சுரக்கும் எல்லா ஹார்மோன்களின் அளவும் குறைவதால் சுவை அரும்புகளின் செயல்பாடுகளும் குறைகிறது. 

இதனால்தான் வயதானவர்கள் சாப்பிட்ட பிறகு டீ, காபி குடிக்கும் பழக்கம் உள்ளவர்களாக இருக்கிறார்கள். இதனால்தான் அவர்களால் சுவைகளையும் சரியாக பிரித்து உணர முடிவதில்லை. ‘சாப்பிட்ட உடனேயே இனிப்பு சாப்பிடலாமா’ என்று கேட்டால், ‘கூடாது’ என்பதுதான் பதில். நாம் உட்கொள்ளும் உணவு செரிப்பதற்கு சில என்சைம்கள் சுரக்க வேண்டும். உணவுக்குப் பிறகு இடைவெளி கிடைக்கும்போதுதான் செரிமானத்திற்கான என்சைம்கள் சுரப்பதற்கும் வாய்ப்பு கிடைக்கும். 

சாப்பிட்ட உடனே ஸ்வீட் சாப்பிடும்போது உணவின் முழுச்சத்துக்களையும் உடல் உள்ளுறுப்புகள் கிரகிப்பதில் தடை ஏற்படும். இனிப்புகளில் அதிக கலோரிகள் இருப்பதால் உடல் எடை அதிகரிக்கும் வாய்ப்பும் உண்டு. அதனால் உணவு சாப்பிட்டவுடன் இனிப்புகள் சாப்பிடுவதைத் தவிர்ப்பதே நல்லது. தவிர்க்க முடியாத பட்சத்தில் எள், கடலை மிட்டாய் போன்றவற்றை அரை மணி நேரத்துக்குப் பிறகு சாப்பிடலாம். எள், வெல்லம் போன்றவை உடலின் கொழுப்பைக் கரைக்கவும், ரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்கவும் உதவும்.

கோலாலம்பூர், 21 டிசம்பர்- தென்கிழக்காசியாவிலேயே அதிகமான இனிப்பு நீர் நோயாளிகளைக் கொண்ட நாடாக மலேசியா திகழ்கிறது. கடந்த 2014-ஆம் ஆண்டு,நாட்டில்  2.6 மில்லியன் மக்கள் இனிப்பு நீர் எனும்  நீரிழிவு நோய்க்கு ஆளாகியுள்ளனர்.   இந்த எண்ணிக்கை, 2015-ஆம் ஆண்டு 17.5 விழுக்காடு அதிகரித்து,  3.5 மில்லியனாக அதிகரித்துள்ளது கவலையளிக்கும் விஷயமாகும். 

நீரிழிவு நோய்  வந்தாலே பல்வேறு நோய்களும் தொற்றிக்கொள்வது குறித்து அறிந்திருப்போம்.  ஆனால்,  இந்த இனிப்பு நீர் வியாதி   பார்வையையும் பாதிக்கும் என்ற விழிப்புணர்வு இன்னமும் மக்களிடையே குறைவாகவே இருப்பதாக அறியப்படுகிறது. 

நீரிழிவு நோயினால் ஏற்படும்  " டயபடிக் ரெட்டினோபதி" எனும் கண் பாதிப்பு நிரந்தர பார்வையிழப்பை ஏற்படுத்தி விடக் கூடிய அபாயத்தைக் கொண்டதாகும்.   

நாளுக்கு நாள்  இளையோரிடையே நீரிழிவு நோய்  பாதிப்பு நோய் அதிகரித்து வருவதைத் தொடர்ந்து, கண்பார்வை பரிசோதனை செய்துகொள்வது, நல்லது.  இல்லையேல், கண்பார்வை இழப்பு அவர்களின் வாழ்க்கையையே கேள்விக்குறியாக்கிவிடும் என எச்சரிக்கிறார், கிள்ளான் மணிப்பால் மருத்துவமனையின், கண் சிகிச்சை நிபுணரான டாக்டர் நரேந்திரன். 

 

கிரானாடியா, நவ.21- பொதி சுமக்கத்தான் கழுதைகள் என்கிற நிலை மாறுகிறது. இப்போது அவற்றின் அந்தஸ்து  கூடுகிறது  கழுதைக்கும் ஒருகாலம் வந்ததற்குக் காரணம் அதன் பாலுக்கு ஏற்பட்டுள்ள கிராக்கிதான்.

மோண்டெநெக்ரோ நாட்டில் இப்போது கழுதைப் பால், ஒரு ஊட்டச் சத்து உணவு. கழுதைகளுக்கு இங்கு ஏகப்பட்ட மதிப்பு. நாளுக்கு நாள் கழுதைப் பால் விலை ஏற ஏற கழுதைக்கான மரியாதையும் ஏறிக்கொண்டே இருக்கிறது.

ஒரு லிட்டர் கழுதைப் பால் 54 அமெரிக்க டாலருக்கு விற்கப்படுகிறது. இது மருத்துவக் குணம் கொண்டது என்று கருதப்படுவதால் அதன் விலை உச்சாணிக் கொம்பில் உட்கார்ந்திருக்கிறது.

கழுதையின் பால், மிக ஆரோக்கியமானது. அது தோல் சம்பந்தப்பட்ட நோய்களைத் தீர்க்கக்கூடியது. இதர சில நோய்களையும் இது குணப்ப டுத்துகிறது என்று கழுதைப் பால் அருந்திக்கொண்டே கூறுகிறார் பண்ணை விவசாயி சவெல்ஜிக்.

இவர் தம்முடைய பராமரிப்பில் 30 கழுதைகளை வளர்த்து வருகிறார் பால் விற்பனையும் செய்து வருகிறார். தினமும் கொஞ்சம் கொஞ்சம் கழுதைப் பால் அருந்தினாலும் ஆஸ்துமா, நீடித்த சளி இருமல் ஆகியவை நீங்கும் என்கிறார் இவர்.

கழுதைகள் குட்டிப் போட்ட பின்னர் இரண்டு முதல் மூன்று மாதங்களுக்கு மட்டுமே பால்தரும். ஒரு நாளைக்கு 400 மில்லி லிட்டர் பால் மட்டுமே அது தரும். பசுவோடு ஒப்பிட்டால் இது பல மடங்கு குறைவாகப் பால் தரக்கூடியது.

கழுதை பால் விலை அதிகம் என்பதால் எனது பண்ணையில் இருந்து கிடைக்கும் பாலில் ஒரு பகுதியை நோய்வாய்ப்பட்ட வசதி குறைந்த வர்களுக்குத் தந்து உதவுகிறேன் என்று சவெல்ஜிக் சொன்னார். 

தாய்ப் பாலில் இருக்கும் அளவுக்கான 'புரோட்டின்' சத்து,  கழுதைப் பாலிலும் இருக்கிறது. நோய் எதிர்ப்புத்தன்மை இதில் அதிகம் என்று கால்நடை த்துறை விஞ்ஞானியும் சைப்ரஸ் பல்கலைக்கழக பேராசிரியருமான போடிஸ் பபாடுமாஸ் கூறுகிறார். மேலும் இது குறித்து கூடுதல் ஆராய்ச்சிகள் அவசியம் என்றும் அவர் வலியுறுத்தினார். 

இதனிடையே 'பால்கன்' இனக் கழுதைகளின் இனம் கணிசமாகச் சரிந்து வருவதால் அதனை பாதுகாக்கப்பட்ட இனமாக அந்நாட்டு அரசாங்கம் அறிவிக்கத் திட்டமிட்டுள்ளது.

 

 

More Articles ...