சளி, இருமல் போன்றவற்றை வீட்டிலிருந்தே சரி பண்ணுவது போன்று சில சரும பிரச்சினைகளையும் வீட்டிலிருந்தே சரி செய்யலாம் . தொடர்ந்து 10 நாட்கள் கரண்டி மசாஜ் செய்தால் இளமையாகக் காட்சியளிக்கலாம். இவ்வாறு மசாஜ் செய்வதால் ரத்த ஓட்டம் அதிகரித்து சுருக்கங்கள் வராமல் தடுக்கலாம். 

இதனால் எண்ணெய் எளிதில் சருமத்தால் உறிஞ்சப்படும். கரண்டியினால் கீழிருந்து மேல் நோக்கி முகத்தில் மசாஜ் செய்தால், தொங்கும் தசைகள் இறுகும். கண்களுக்கு அடியில் தங்கும் சதைப்பை மறையும். சருமத்திற்கு புத்துணர்ச்சி தரும். ரத்த ஓட்டம் அதிகரித்து இளமையை அதிகரிக்கச் செய்யும்.

முதலில் முகத்தை நன்றாக கழுவி, பருத்தி துணியால் ஒத்தி எடுக்க வேண்டும். பின்னர், வெதுவெதுப்பான ஆலிவ் அல்லது தேங்காய் எண்ணெயில் 1 நிமிடம் கரண்டியை வைத்து அதனை எடுத்து கரண்டியின் பின்பகுதியினால் நாடியிலிருந்து மேல் நோக்கி, கன்னம் வரை மெதுவாக மசாஜ் செய்ய வேண்டும். அதே போல், இரு கன்னப்பகுதியில் கீழிருந்து மேல் நோக்கி மசாஜ் செய்ய வேண்டும். இது போல் 10 நாட்கள் தொடர்ந்து செய்தால் நல்ல மாற்றத்தைக் காணலாம்.

கண்களுக்கு அடியில் உண்டாகும் சதைப்பையை போக்க சுத்தமான நீரில் சில ஐஸ் துண்டுகளைப் போட்டு அதில் கரண்டியை வைக்க வேண்டும். நன்றாக சில்லிட்டதும் அதனை கண்களுக்கு அடியில் வைத்து லேசாக அழுத்தி மசாஜ் செய்ய வேண்டும். இதுபோல் கண்களின் சதைப்பை போகும் வரை தினமும் செய்தால் நல்ல பலன் கிடைக்கும்.

ஒருநாளைக்கு ஒரு வேளையாவது இயற்கை உணவை உட்கொண்டு வருவது சாலச் சிறந்தது. அதன் பிறகு உங்கள் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்படுவதை நீங்களே கண்கூடாக உணர்வீர்கள்.

பச்சைப்பயிறு, கொண்டைக்கடலை, வெந்தயம், எள்ளு, வேர்க்கடலை, சூரியகாந்தி விதை, வெள்ளரி விதை, கொள்ளு மற்றும் கறுப்பு உளுந்து போன்ற

தானியங்களை வீட்டிலேயே முளைக்கச் செய்து சாப்பிடுவதுதான் முளைதானிய உணவு எனப்படும்.இந்த தானியங்களை நன்றாக கழுவி குறைந்தது 8 மணி நேரம் ஊற வைத்து பின் ஈரமான துணியில் சுற்றி வைத்து விட்டால் 8–10 மணிக்குள் தானியம் முளைவிட்டு இருக்கும். இந்த தானியஉணவானது ஆரோக்கியத்தையும் அளவற்ற சக்தியையும் அள்ளித்தரும் மலிவான இயற்கை உணவாகும்.

இந்த உணவின் மூலம் புரதம், கால்சியம், சோடியம், இரும்புத்தாது, பொட்டாசியம் மற்றும் பாஸ்பரஸ் போன்றவைகள் கூடுதலாக கிடைப்பதுடன் வைட்டமின் ஏ, பி1 மற்றும் பி2 போன்றவையும் நமக்குக் கிடைக்கிறது.

முளைவிட்ட பச்சைப்பயிறு சாப்பிட்டால் சர்க்கரை நோய் கட்டுப்பாட்டில் இருக்கும். முளைவிட்ட கோதுமை சாப்பிட்டால் புற்றுநோயை தடுக்கமுடியும். முளைவிட்ட எள்ளு சாப்பிட்டால் ஒல்லியானவர்களுக்கு உடல் போடும் கண்பார்வையும் மேம்படும். முளைவிட்ட கொள்ளு சாப்பிட்டால் உடல் பருமன்  குறையும்.

முளைவிட்ட கறுப்பு உளுந்தானது தாய்ப்பால் சுரப்பை அதிகரிக்கச் செய்யும்... மூட்டுவலி தீரும். எந்தவித நோய்களும் வராமல் தடுக்கும் சக்தியும் இந்த முளைவிட்ட தானியங்களுக்கு அதிகம்  உண்டு.

எனவே உடனே இயற்கை உணவுக்கு வாருங்கள் ஆரோக்கியமாக வாழுங்கள்.

சென்னை, ஜூலை 29- இனிப்பு சுவைமிகுந்த பொருள்கள் என்றாலே ஒதுக்கி வைத்து விடுபவர்கள் நம்மில் அதிகம். ஆனால் அதற்காக சர்க்கரை வள்ளிக் கிழங்கையும் சாப்பிடாமல் ஒதுக்கி வைத்து விடாதீர்கள்.

அதனால் கிடைக்கும் நன்மை என்ன என்பதை முதலில் தெரிந்து வைத்துக் கொள்ளுங்கள்.சர்க்கரை வள்ளிக்கிழங்கில் உள்ள சத்துக்கள்: நூறு கிராம் சர்க்கரை வள்ளிக்கிழங்கில் 70-90 விழுக்காடு கலோரி ஆற்றல், குறைந்த அளவிலான கொழுப்புச் சத்து, நார்ச்சத்து நோய் எதிர்ப்புத் தன்மைகள்,  விட்டமின்கள் மற்றும் தாது உப்புக்கள் போன்றவை அதிகம் நிறைந்துள்ளன.

சர்க்கரை வள்ளிக்கிழங்கு எடையை அதிகரிக்குமா?: சரக்கரை  வள்ளிக்கிழங்கில்   நார்ச்சத்து அதிகம் உள்ளது. எனவே இது வயிறு நிரம்புவது போன்ற உணர்வு, செரிமானப் பிரச்சினை ஆகியவற்றை தடுத்து உடலில் கொழுப்புச் சத்தை சேர்க்கத் தூண்டும். இன்சுலின் சுரப்பையும் தடுக்கிறது. அதனால் இந்த இந்தக் கிழங்கு உடல் எடையை அதிகரிக்கச் செய்யாது.

சர்க்கரை வள்ளிக் கிழங்கின் நன்மைகள்: இரத்த அழுத்தத்தை சீராக்கி இரத்த அழுத்தம் அதிகரிப்பதை தடுக்க உதவுகிறது. இந்த கிழங்கில் அதிகளவு பீட்டா கரோட்டின் உள்ளதால் இது நோய் எதிர்ப்பு சத்தையை அதிகரித்து சரும ஆரோக்கியம் தோல் மற்றும் நரம்பு மண்டல செயல்பாடு ஆகியவற்றிற்கு உதவுகிறது.

சர்க்கரை வள்ளிக்கிழங்கின் இலை விஷக்கடிக்கு மருந்தாகிறது. எனவே இதன் இலையை பச்சையாக அரைத்து பூச்சிக் கடிவாயில் வைத்து கட்டுவதால் விஷம் முறிந்து வலி வீக்கம் குறையும்.

தோலில் ஏற்படும் ஒவ்வாமை, அரிப்பு பிரச்சினைக்கு சர்க்கரை வள்ளிக்கிழங்கை நன்றாக வேக வைத்து மசித்து அதனோடு 3 மடங்கு தண்ணீர் சேர்த்து நன்றாக கொதிக்கவைத்து பசை போலச் செய்து அதை அரிப்பு உள்ள இடத்தில் தடவினால் குணமாகும்.

 

கூச்சிங். ஜூலை.28– சரவா மாநிலத்தில், புதிதாக 56 நாய்க் கடிச் சம்பவங்கள் சரவாக்கில் பதிவாகியுள்ளன. கடந்த ஏப்ரல் 1-ஆம் தேதி தொடங்கி, ஜூலை 27-ஆம் தேதி வரையில் சுமார் 1,016 நாய்க் கடிச் சம்பவங்கள் நடந்துள்ளன என்று சரவா சுகாதார துறை தெரிவித்தது.

செரியான் மாவட்டத்தில் 14 நாய்க் கடிச் சம்பவங்களும் கூச்சிங்கில் 38 நாய்க் கடிச் சம்பவங்களும் ஶ்ரீசமராஹானில் 2 நாய்க் கடிச் சம்பவங்களும் பதிவாகியுள்ளன. 

சுகாதாரத் துறையின் நோய் கண்டறிவு குழுவும் மற்றும் சரவா மாநிலத்தின் பேரிடர் நிர்வாக குழுவும் இணைந்து இந்த 'ரேபிஸ்' நோயைக் கட்டுப்படுத்த சுகாதார முகாம்களை தொடங்கியுள்ளனர். 

மேலும், 41 நாய்க் கடிச் சம்பவங்களில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நேற்று 'ரேபிஸ்' நோய் தடுப்பூசி போடப்பட்டது என்று பேரிடர் நிர்வாகக் குழு கூறியது. இந்த ரேபிஸ் நோயால் இதுவரை நான்கு சிறுவர்கள் மற்றும் ஒரு முதியவர் உயிரிழந்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

More Articles ...