அமினோ அமிலம் அதிகம் உள்ள முட்டைகோஸ், ப்ரோகோலி, காலிஃப்ளவர் போன்ற காய்கறிகளை ஹைப்போ தைராய்டு  பிரச்னை உள்ளவர்கள் எடுத்துக் கொள்ளும்போது தைராய்டை சமநிலைப்படுத்தும் ஹார்மோன் சுரப்பை (Thyroid  Stimulating Hormone(TSH) தடுக்கும். எப்படி?

உணவிலிருந்து உடலுக்கு கிடைக்கும் அயோடின் அளவில் 80 சதவிகிதத்தை தைராய்டு ஹார்மோன் உற்பத்திக்கு எடுத்துக்  கொள்கிறது. க்ளூகோசினுலேட்ஸ் (Glucosinulates) என்று சொல்லக்கூடிய சல்பர் மற்றும் நைட்ரஜன் கொண்டசேர்மங்கள்,  இவ்வகைக் காய்கறிகளில் அதிகம் உள்ளது. இந்த சேர்மங்களினால் ஏற்படும் ரசாயன எதிர்வினையானது உணவிலிருந்து உடல்,  அயோடின் உள்வாங்குவதைத் தடுக்கிறது. அயோடின் குறைவதால் தைராய்டு சுரப்பு குறைந்து ஹைப்போதைராய்டிசம்  ஏற்படுகிறது. 

தைராய்டு பிரச்னை உள்ளவர்கள் முதல் நாள் இரவு இவ்வகைக் காய்கறிகளை எடுத்துக்கொள்ளும்போது, மறுநாள் காலையில்  கை, கால்கள் சற்று பருத்தாற்போல இருக்கும். சிலருக்கு கைவிரலில் உள்ள மோதிரத்தைக் கழற்ற முடியாமல் கூட போகும்.  அவர்கள் என்ன காரணம் என்று தெரியாமல் இருப்பார்கள். 


அதற்கு ரசாயன எதிர்வினையே காரணம்.தைராய்டு சிகிச்சைக்காக குறைந்த அளவு மாத்திரை எடுத்துக் கொள்பவர்கள், சமைத்த  கோஸை 100 கிராம் அளவு வரை தாராளமாக சாப்பிடலாம். அதுவும் இவ்வகைக் காய்களை பச்சையாக சாலட்டாகவோ,  ஜூஸாகவோ உணவில் சேர்த்துக் கொள்ளக்கூடாது. வேக வைத்து உண்பதே சிறந்தது. அதிக அளவு மாத்திரை எடுத்துக்  கொள்பவர்களானால் தைராய்டு சிகிச்சை முடியும் வரை கோஸ், காலிஃப்ளவர், ப்ரக்கோலி போன்ற காய்கறிகளை தவிர்ப்பதே  நல்லது.

பின்லாந்து, மார்ச் 9- அதிகமான கொழுப்பு நிறைந்த உணவும், முட்டைகளும் சாப்பிடு வதால் மாரடைப்பு ஏற்படுவதற்கான வாய்ப்பு இல்லை என புதிய ஆய்வில் தெரியவந்துள்ளது.

திடீரென ஏற்படும் மாரடைப் புக்கும், கொழுப்பு சத்து நிறைந்த உணவுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்றும் அந்த ஆய்வு முடிவு தெரிவிக்கிறது.

கிழக்கு பின்லாந்து பல்கலைக் கழகத்தில் உள்ள இதய நோய் பாதிப்புக்கான காரணங்கள் குறித்த ஆய்வு 1984 முதல் 1989ஆம் ஆண்டு வரை நடத்தப்பட்டது. இதய நோய் பாதிப்பு இல்லாத மிகுந்த ஆரோக் கியமான 42 முதல் 60 வயது நிரம்பிய 1,032 ஆண்களின் தினசரி உணவு பழக்க வழக்கத்தை வைத்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

அவர்கள் அனைவருக்கும் தினசரி கொழுப்பு சத்து நிறைந்த உணவுகளும், ஒரு முட்டையும் வழங்கப்பட்டது. 21 ஆண்டு காலங்களாக நடத்தப்பட்ட ஆய்வில் கொழுப்பு சத்து நிறைந்த உணவை சாப்பிடுவதால், நாளொன்று ஒரு முட் டையை சாப்பிடுவதாலோ மார டைப்பு ஏற்படுவதில்லை என்பது நிறுபணமானது.

230 ஆண்களுக்கு கொழுப்பு சத்தை பாதிக்கும் (APOE4 ஃபீனோடைப்) வளரும் சிதை மாற்றங்களால் மட்டுமே மாரடைப்பு ஏற்பட்டதை அறிந்து கொள்ள முடிந்தது. மேலும் கொழுப்பு உணவுக்கும், வளரும் சிதை மாற்றங்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்றும் ஆய்வில் தெரியவந்துள்ளது.