நம் வீடுகளில்  உள்ள குழந்தைகளுக்கு அடிக்கடி சளி, காய்ச்சல்,  இருமல், வயிற்றுப் போக்கு  போன்ற பிரச்சனைகள் ஏற்படுவதைத் தவிர்க்கவே முடியாது.   அடிக்கடி கிளினிக்குகளிலும் மருத்துவமனைகளிலும் கொடுக்கப்படும் மருந்துகளை அடுத்த முறையும் பயன்படுத்தலாமே என மீதமுள்ள மருந்துகளை நமது தாய்மார்கள் பத்திரப்படுத்துவது வழக்கம். ஆனால், இப்படியே மருந்து பெட்டிகளில் குவியும் மருந்துகளை என்றாவது ஒருநாள் அவசரத்துக்குத் தேடும் போது, எந்த மருந்து எப்போது வாங்கியது என்றே தெரியாமல் தலை சுற்றும். இத்தகைய பிரச்சனைகளைத் தீர்க்க கீழ்க்கண்ட வழிமுறைகளைப் பின்பற்றலாம். 

குழந்தைகளுக்குப் பயன்படுத்தும் மருந்துகளில் மேற்புறப் பெட்டியில் அதனை உபயோகிக்கத் துவங்கிய நாளை குறித்து வைத்துக் கொள்ளவும்.

மரு‌ந்து, மா‌த்‌திரைக‌ள் குழ‌ந்தைக‌ளி‌ன் கைக‌ளி‌ல் படாம‌ல் இரு‌‌க்கு‌ம்படி வை‌க்கவு‌ம்.

க‌ண்க‌ள் படு‌ம் இட‌த்‌தி‌ல் ‌தினமு‌ம் போடு‌ம் மரு‌ந்து, மா‌த்‌திரைகளை வையு‌ங்க‌ள். மற‌ந்து ‌வி‌ட்டாலு‌ம் பா‌ர்‌க்கு‌ம்போது ஞாபக‌த்‌தி‌ற்கு வரு‌ம்.

ஒ‌வ்வொரு‌வரு‌க்குமான மரு‌ந்துகளை‌த் த‌னி‌த்த‌னியாக ப‌த்‌‌திர‌ப்படு‌த்து‌ங்க‌ள். சூ‌ரிய அ‌ல்லது ‌மி‌ன்‌விள‌க்கு வெ‌ளி‌‌ச்ச‌ம், கா‌ற்று படாத இட‌த்‌தி‌ல் மரு‌ந்துகளை வை‌ப்பது ‌ந‌ல்லது.

தூ‌க்‌கி‌ப் போடு‌ம் மரு‌ந்துகளையு‌ம் பாதுகா‌ப்பாக அ‌ப்புற‌ப்படு‌த்து‌ங்க‌ள்.

நம் நாட்டைத் தற்போது  கடுமையான வெயில் வாட்டி எடுப்பதை  நாளிதழ்களில் படித்திருப்பீர்கள். அதிகப்படியான வெயில் சருமத்திற்கு மட்டுமல்ல உடல்நலத்திற்கும் கேடு விளைவிக்கக் கூடியது. 

எனினும், மலேசியாவில்  நிலவி வரும் இக்கடும் வெயில், இன்னும் மூன்று மாதங்களுக்கு நீடிக்கும் எனக் கூறப்படுகிறது. 

கடும் வெயில் என்றாலே பெண்கள் சருமம் வீணாகி விடுமே என்றுதான் பெரிதும் பயப்படுவார்கள்.  ஆனாலும், கவலை வேண்டாம். வீட்டில் உள்ள பொருட்களைக் கொண்டே    கடும் வெயிலிலிருந்து சருமத்தை பாதுகாக்கலாம். 

வெயில் காலத்தில் நமது முதல்  எதிரி வியர்வை. வியர்வையால் ஏற்படும் துர்நாற்றம், வியர்க்குரு, பூஞ்சை   தொற்று போன்றவை   பிறரோடு பழகும் போது, பெரும் தர்மசங்கடத்தை நமக்கு ஏற்படுத்திவிடும். இவ்வாறான உடல் துர்நாற்றத்தைப் போக்க,  சவர்க்காரத்திற்குப் பதில்  கடலை மாவு, பயத்தம் மாவு, கஸ்தூரி மஞ்சள், வாசனை பொடி, காய்ந்த எலுமிச்சை பழ தோல் அனைத்தையும் சேர்ந்து பொடி செய்து தினமும் உடலில் தேய்த்து குளிக்கலாம். 

கடலை மாவு, பன்னீர்

எண்ணை பசை,  சாதாரண சருமம் உள்ளவர்கள், கடலை மாவு, கஸ்தூரி மஞ்சள், பயத்தம் பருப்பு தலா ஒரு டீஸ்பூன் எடுத்துக் கொண்டு பன்னீரில் குழைத்து முகம் மற்றும் கழுத்தில் தடவி பதினைந்து நிமிடம் கழித்து குளிர்ந்த தண்ணீரில் கழுவலாம்.

நீர்ச்சத்து அவசியம் 

கற்றாலை ஜெல் சிறந்த மருந்தாகும். வீட்டின் கொல்லைப்புறத்தில் கற்றாலை இருந்தால் அதை பறித்து அதில் உள்ள கூழ் பகுதியை சருமத்தில் பூசி ஊறவைத்து குளிக்கலாம். அதேபோல் வெள்ளரிக்காய் உடலின் நீர் சத்தினை தக்கவைக்கும். சருமத்திற்கு குளிர்ச்சி தரும். வெயில் காலத்தில் உடலில் உள்ள நீர்சத்து குறையும். அதனால் குறைந்த பட்சம் தினமும் 8 டம்ளர் தண்ணீர் குடிக்க வேண்டும். பச்சை காய்கறி, கீரை மற்றும் பழ வகைகளை உணவில் அதிகம் சேர்த்துக் கொள்ள வேண்டும். இளநீர், மோர், எலுமிச்சை சாறு, ஆரஞ்சு பழ சாறு குடிப்பது அவசியம். இதில் விட்டமின் சி சத்து அதிகம் உள்ளதால், உடலில் உள்ள நீர்சத்து குறையாமல் பார்த்துக் கொள்ள உதவும். 

பால் கிளென்சர்

வெயிலில் சென்று வீட்டுக்கு வந்ததும் முகத்தை குளிர்ந்த நீரால் கழுவி கிளென்சர் கொண்டு சுத்தம் செய்ய வேண்டும். இது சரும ஓட்டையில் உள்ள அழுக்கை நீக்கி சருமத்தை சுத்தமாக்கும். சோப்புக்கு பதில் பேஸ்வாஷ் பயன்படுத்தலாம். பால் சிறந்த கிளின்சராக செயல்படுகிறது. குளிர்ந்த பாலை கொஞ்சம் பஞ்சில் மூழ்கி எடுத்து அதை முகத்தில் துடைக்கலாம். அழுக்கு நீங்கி முகம் புத்துணர்ச்சியாகும். தயிருடன் மஞ்சளை சேர்ந்து குழைத்து சருமத்தில் தடவினால் வெயிலினால் ஏற்பட்ட கருமையை தவிர்க்கலாம். 

கிருமி தாக்குதல்

வியர்வையால் பங்கல் இன்பக்ஷன் ஏற்படும். மார்பக அடிப்பகுதி அக்குள் போன்ற பகுதியில் வியர்வை தங்கி அதனால் சரும பிரச்னை ஏற்படும். அதை தவிர்க்க வெளியே செல்லும் போது ஆன்டி பங்கல் பவுடர் பயன்படுத்தலாம். மஞ்சள் சிறந்த கிருமி நாசினியாக செயல்படுகிறது. எனவே குளிக்கும் போது உடலில் மஞ்சள் பூசி குளிக்கலாம். சரும நோய் ஏற்படாது. முடிந்த வரை வெளியே சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். அதிக காரம் இல்லாத உணவுகளை எடுத்துக் கொள்ளவேண்டும் என்பது மருத்துவர்களின் அறிவுரையாகும். 

நாம் ஒவ்வொருவரும் பிறந்த்து முதல்  பிறந்தது முதல் 30 வயது வரை எலும்புத் திசுக்கள் ஆரோக்கிய நிலையில் இருக்கும். அடுத்த 10 ஆண்டுகள், அதாவது நமது 40-வது வயது வரை இந்நிலை நீடிக்கிறது. மாதவிலக்கு நின்ற பெண்களுக்கு எலும்புத் திசுக்கள் சுருங்கும் வாய்ப்பு மிகுதியாக உள்ளது.

 இந்நிலை நீடிக்கும்போது எலும்பு முறிவு ஏற்படும் அபாயம் அதிகரிக்கிறது. எலும்பரிப்பு நோய் எந்த அறிகுறியையும் வெளிப்படுத்திக்கொண்டு வெளியாவதில்லை. எலும்புகள் எலும்பரிப்பால் பலகீன மடைந்திருக்கும் போது பலமாக இருமினால்கூட அல்லது வேகமாக நடந்து செல்லும்போது தடுக்கினால் கூட எலும்பு முறிவு ஏற்படுகிறது. பெண்களுக்கு சாதாரணமாக அதிக அளவில் தற்சமயம் ஏற்படும் மார்பகப் புற்றுநோய், இதய நோய் மற்றும் மூளை நரம்புகளில் ஏற்படும் கோளாறுகளைவிட ‘எலும்பரிப்பு நோய்’ தான் அதிக அளவில் ஏற்படுகிறது என்பது அதிர்ச்சியளிக்கும் ஒரு புள்ளி விவரம்.


இரண்டில் ஒரு பெண் தன் வாழ்நாளில் எலும்பரிப்பு நோயால் ஏற்படும் எலும்பு முறிவால் அவதிப்படுகிறாள். ஆண்களைவிட பெண்கள் இந் நோயால் அதிகம் பாதிப்படையக் காரணம் பெண் களுக்கு எலும்புத் தசைகள் ஆண்களைவிடக் குறைவு. மேலும் மாதவிலக்கு நின்ற பெண்களுக்கு எலும்புகள் பாதிப்படைவதும், பலகீனம் அடைந் திருப்பதும் முக்கிய காரணம்.

35 
வயது வரையில் எலும்புகளின் வளர்ச்சியும், மொத்த எடையும் பெண்களுக்கு ஒரே சீராக உள்ளது. அதன்பின் ஒரு எதிர்மறை சுண்ணாம்புச் சத்து சமநிலை அடைகிறது. அதுதான் எலும் பரிப்பு துவக்க நிலை. 35 வயதுக்குப் பின் ஒரு பெண்ணுக்கு ஒவ்வொரு வருடமும் 0.3 சதவீதம் என்ற அளவில் எலும்பின் எடையில் இழப்பு ஏற்படுகிறது. மாதவிலக்கு நின்ற பின் பெண் களுக்கு எலும்பு எடை குறைவு 0.5 சதவீதம் என அதிகரிக்கிறது. இந்த வேகத்தில் ஒரு பெண் தன் 60 வயதிற்குள் 30 முதல் 35 சதவீத அளவுக்கு எலும்பின் எடை குறையும் அபாயத்தை எட்டுகிறாள். இந்நிலையில் எலும்பு முறிவுகள் வெகு சுலபமாக ஏற்படுகிறது.

எலும்புகள் கல் போன்று உறுதி கொண் டவை என நாம் நினைக்கிறோம். இது ஒரு தவறான கருத்து. பல்வேறு ரசாயன ஊக்கிகளின் தாக்குதலுக்கு இணக்கமாகி சுண்ணாம்புச் சத்து உயிரியத்தால் மென்மைப்பட்டு வலுக்குறைந்து முறியும் நிலைக்கு உள்ளாகி விடுகிறது.

மாதவிலக்கு நின்ற பெண்களுக்கு ‘ஈஸ்ட்ரோஜன்’ அளவு குறைவதும் எலும்பரிப்புக்கு ஒரு முக்கிய காரணம்.
சுண்ணாம்புச் சத்து சமநிலையில் எலும்ப ரிப்பு நோயையும் அதன் தொல்லைகளையும் தவிர்க்க இயலும். அதிலும் பெண்களின் குழந்தைப் பருவம் முதல் முழு வளர்ச்சிப் பருவம் வரையிலும்.

மேலும் ஒரு பெண் கருவுற்ற காலங்களில் மட்டுமின்றி குழந்தைகட்குத் தாய்ப்பால் கொடுக்கும் காலத்திலும் சுண்ணாம்புச் சத்து அவசியம் தேவை.

நோயைத் தடுக்கும் முறைகள் :

நடைப்பயிற்சி ஒரு சிறந்த பலனை அளிக்கும். மாதவிலக்கு நின்ற பெண்களுக்கு ‘ஈஸ்ட் ரோஜன்’ அளவு குறைவதும் எலும்பரிப்புக்கு ஒரு முக்கிய காரணம்.

சுண்ணாம்புச் சத்து சமநிலையில் இருந்தால் எலும்பரிப்பு நோயையும் அதன் தொல்லைகளையும் தவிர்க்க இயலும்.

மேலும் ஒரு பெண் கருவுற்ற காலங்களில் மட்டுமின்றி குழந்தைக்குத் தாய்ப்பால் கொடுக்கும் காலத்திலும் சுண்ணாம்புச்சத்து அவசியம் தேவை.

ஆல்கஹால், சிகரெட் பிடிப்பதை அறவே நிறுத்தவேண்டும். உணவில் கால்சியம், வைட்ட மின் D சரியான அளவில் இருக்க வேண்டும். போதிய உடற்பயிற்சி பெண்களுக்கு அவசியம் தேவை. மாதவிலக்கு சரியில்லாத பெண்களுக்கும், நீண்ட நாள் தடைப்பட்ட மாதவிலக்கு உள்ள பெண்களும் கோளாறுகளை சரிசெய்து கொள்ளவேண்டும். ஈஸ்ட்ரோஜன் குறையும் பண்களுக்கு எலும் பரிப்பு நோய் ஏற்படுவது போல Testosterone அளவு குறைந்தால் ஆண்களுக்கும் இந்நோய் ஏற்படுகிறது.

மாதவிலக்கு நின்ற பெண்களும், குடும்பத்தில் எலும்பரிப்பு நோய் உள்ளவர்களும் தகுந்த சிகிச்சை முறைகளை மேற்கொண்டால் இந்நோய் தீவிரமடையாமல் தடுக்கலாம்.

கருத்தரிப்பு உண்டாகி இரண்டாவது மாதத்தின் துவக்கத்திலேயே மசக்கை உண்டாகும். அதாவது காலையில் பல் துலக்கும்போதோ அல்லது காலை உணவை சாப்பிட்டதுமோ வாந்தி, குமட்டல் ஏற்படும். இரண்டாவது மாதத்தில் ஏற்படும் இந்த குமட்டல், வாந்தி சில வாரங்கள் அல்லது அரிதாக மூன்று மாதங்களுக்கு மேலும் கூட நீடிப்பது உண்டு.

மிகவும் பிடித்த உணவு பிடிக்காமல் போவது, புளிப்பான உணவுப் பொருட்களை விரும்புவது, பிடிக்காத உணவுப் பொருட்களின் மீதான ஆசைகளும் மசக்கையின் அறிகுறிகள். நாம் சாப்பிடும் சாப்பாட்டைப் பார்த்தாலே வாந்தி வருவது போன்ற உணர்வு, சமைக்கும் போது வரும் வாசனையை நுகர்ந்தாலே வாந்தி வருவது, சாதம் கொதிக்கும்போது வரும் வாசனை பிடிக்காமல் போவது‌ம் மச‌க்கைதா‌ன். 

 பசிக்கும் ஆனால் சாப்பிட உட்கார்ந்தால் வாந்தி எடுப்பதா அல்லது சாப்பிடுவதா என்ற குழப்ப நிலையை உருவாக்கும். உடலுக்கு நல்லதல்ல என்று ஒதுக்கும் பொருட்களின் மீது அதிக விருப்பமும் இந்த சமயங்களில் ஏற்படுவது உண்டு.

 ஒரு சிலருக்கு இந்த மசக்கை மூன்றாம் மாத துவக்கம் வரையில் மட்டுமே இருக்கும். ஆனால் ஒரு சிலருக்கு 5 மாதம் வரையிலும் கூட இருக்கும். அப்படிப்பட்டவர்கள் வெறும் வயிற்றில் வாந்தி எடுப்பதை தவிர்க்க வேண்டும்.

 அதாவது காலையில் பல் துலக்கும்போது வாந்தி எடுப்பது, வாந்தி வருகிறது என்று எண்ணி எண்ணி சாப்பிடாமலேயே இருப்பது போன்றவை அல்சரை உண்டாக்கிவிடும். எனவே எப்போதெல்லாம் முடிகிறதோ அப்போதெல்லாம் சிறிது சிறிதாக உணவை எடுத்துக் கொள்ள வேண்டும். திரவ உணவாகவோ, பழம், காய்கறிகள் போன்றவற்றை கொஞ்சம் கொஞ்சமாக உண்ணலாம்.

 பலருக்கும் இரவு நேரங்களில் அதிகமாக பசிக்கும். அந்த சமயத்தில் சாப்பிடுவதற்கு என சில பொருட்களை எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். சமைத்த உணவுப் பொருட்கள் அல்ல.. பிஸ்கட், பழம், பால் போன்றவற்றை.

 வாந்தி வரும் என்ற உணர்வை விட, உ‌ங்களு‌க்கு‌ம், உ‌ங்களு‌க்கு‌ள் இரு‌க்கு‌ம் கரு‌வி‌ற்கு‌ம் சே‌ர்‌த்து சாப்பிட வேண்டும் என்ற எ‌ண்ண‌த்தை அதிகமாக நினை‌‌வி‌ல் கொள்ளுங்கள்.

More Articles ...

Page 2 of 3