வைகாசி விசாகம்: நெருப்பில் அவதரித்த அழகன் முருகன்!

ஆன்மீகம்
Typography

வைகாசி விசாகம் என்பது முருகக் கடவுள் அவதாரம் செய்த நாளாகும். வைகாசி மாதத்தில் வரும் விசாக நட்சத்திரத்தில் வரும் சிறப்பு நாளாக கொண்டாடப்படிகிறது.

விசாகம் ஆறு நட்சத்திரங்களும் ஒன்று கூடிய நட்சத்திரமாகும். இதனால் முருகனும் ஆறு முகங்களோடு திகழ்பவர் என்பது ஐதீகம். இந்நாள் சோதி நாள் எனவும் அழைக்கப்படுவதுண்டு.

உயிர்களுக்கு நேரும் இன்னலை நீக்கும் பொருட்டு சிவன் ஆறுமுகங்களாய்த் தோன்றி ஈசனின் திருவிளையாடலால் குழந்தையாக அவதரித்தார் முருகன். 

இந்நாளில். மக்கள், பிராணிகள், தாவரங்கள் எல்லாம் ஓருயிராகி இணைக்கப்பட்டிருக்கும். உண்மையை விளக்குதலே இந்நாளின் கருத்தாகும். இதனால் சைவர்கள் இந்நாளில் விரதமிருந்து ஆலயங்களில் சிறப்பாகக் கொண்டாடுவர்.

இன்னாளில் பக்தர்கள் திருப்புகழ். கந்தசஷ்டி கவசம், முருகனுக்குரிய ஆறெழுத்து மந்திரங்களான "ஓம் சரவணபவ, நம ஓம் முருகா" என்ற மந்திரத்தை உச்சரிப்பது நல்லது. முருகன் கோவிலுக்கு சென்று விளக்கேற்றி வழிபடுவது நல்லது.

 

BLOG COMMENTS POWERED BY DISQUS