கார்த்திகை தீபத்திருநாள் மிகவும் தொன்மை வாய்ந்த திருநாள். இத்திருநாள் தமிழர்களால் பல்லாயிரம் ஆண்டுகளாக கொண்டாடப்படுகிறது.

கி.மு.2500 ஆண்டுகளுக்கு முன்னரே தமிழ் இலக்கியங்களிலும் மற்றும் சங்க கால இலக்கியங்களிலும் கார்த்திகை தீபத்தைப் பற்றிய குறிப்புகள் உள்ளன.

திருக்கார்த்திகை தோன்றுவதற்கு இரண்டு விதமான காரணங்கள் கூறப்படுகின்றது. அதில் ஒன்று ஒருமுறை உமாதேவி சிவனின் கண்களை விளையாட்டாக கைகளால் மறைத்தாள். அப்போது பிரபஞ்சமே இருள்மயமானது. உயிர்கள் அனைத்தும் துயரில் ஆழ்ந்தன. இச்செயலால், தேவிக்கு பாவம் உண்டானது. விமோசனம் தேடி காஞ்சிபுரம் சென்று சிவனை நோக்கி தவத்தில் ஆழ்ந்தாள். இறைவனும் தேவிக்கு காட்சியளித்து திருக்கார்த்திகை நாளில் திருவண்ணாமலை வரும்படி அருள்புரிந்தார்.

தேவி அண்ணாமலையிலுள்ள பவழக்குன்று மலையில் இருந்த கவுதம மகரிஷி உதவியுடன் பர்ணசாலை அமைத்து தவம் செய்தாள். பவுர்ணமி சந்திரன் கார்த்திகையில் சஞ்சரிக்கும் வேளை வந்தது. இறைவன் தேவிக்கு காட்சியளித்து, இடப்பாகத்தில் ஏற்று அருள்புரிந்தார்.

இந்தநாளை திருவண்ணாமலையில் மிகவும் சிறப்பாகக் கொண்டாடப்படுவதால், இதை திருவண்ணாமலைத் தீபம் என்றும் அழைப்பார்கள். சிவபெருமான் ஒளி மயமாகக் காட்சியளித்ததை நினைவு கூரும் வகையில், தீபத்தினத்தன்று திருவண்ணாமலையின் உச்சியில் மகாதீபம் ஏற்றப்படும். இந்த தீபம், ஐந்தரை அடி உயரமும், ஐந்தடி நீளமும் உள்ள ஒரு இரும்பு கொப்பரையில், 2000 கிலோ நெய்யை விட்டு, முப்பது மீட்டர் காடாத் துணியைச் சுருட்டி அதைத் திரியாகப் போட்டு அதன் மேல் இரண்டு கிலோ கற்பூரத்தை வைத்து ஏற்றப்படும்.இந்த மகாதீபம் மலையைச்சுற்றி 35 கிலோமீட்டர் தூரம்வரை தெரியும்.

சிவமும் சக்தியும் ஒன்றே என்பதை உணர்த்துவதற்காக அர்த்தநாரீஸ்வரராக வடிவம் எடுத்ததும், சிவராத்திரி விழா உருவானதுமான பெருமையை உடைய தலம் திருவண்ணாமலை.சிவன் கார்த்திகை மாத கிருத்திகை நட்சத்திரத்தில், திருமால், பிரம்மன் இருவருக்கும் அக்னி வடிவமாக காட்சி தந்தார்.இந்நாளிலேயே தீபத்திருநாள் கொண்டாடப்படுகிறது.

மலையில் தீபம் ஏற்றப்பட்டதும் மக்கள், ``அண்ணாமலையானுக்கு அரோகரா'' என விண்அதிர முழக்கமிடுவார்கள். ``இந்த உடம்பு நான் என்னும் எண்ணத்தை அழித்து, மனதை ஆன்மாவில் அழித்து, உன்முகத்தால் அத்வைத ஜோதியைக் காண்பது தான் தரிசனம் ஆகும்'' என ரமண மகரிஷிகள் குறிப்பிடுகிறார்.தீப தரிசனம் பிறவிப் பிணியை அறுக்க வல்லது என்பது ஐதீகம்.

இத்தீபத்திருநாள், திருவண்ணாமலையில் மிகவும் சிறப்பாகக் கொண்டாடப்படுவதால், இதை திருவண்ணாமலைத் தீபம் என்றும் அழைப்பார்கள்.

 

 

 

சிவபெருமான் ஒளி மயமாகக் காட்சியளித்ததை நினைவு கூரும் வகையில், தீபத்தினத்தன்று திருவண்ணாமலையின் உச்சியில் மகாதீபம் ஏற்றப்படும்.

 

இத்திருநாள், முருகக்கடவுள் அவதரித்த தினமாகவும் கொண்டாடப்படுகிறது.

 

பெரும்பாலானோர் காலை முதல் விரதமிருந்து, மாலை பூஜை முடிந்தபின்னர், அகல் விளக்கேற்றி வரிசையாக வாசல் தொடங்கி வீடு முழுவதும் வைப்பார்கள்.

 

இது தான் தீபா திருவிழாவின் முக்கிய நிகழ்வாகும்.

தீபம் ஏற்றுவதற்கு காரணம் என்ன? அதற்கான அறிவியல் பின்னணி என்ன? இந்தக் கலாச்சாரத்தைப் பொறுத்தவரை, எதை செய்தாலும் அதை மனித நல்வாழ்விற்கு வழிவகுக்கும் வகையில், விஞ்ஞான ரீதியாகவே செய்தார்கள். மனிதனின் நல்வாழ்வு, அவனின் உள்நிலை வளர்ச்சிக்கு உதவுவதோடு, அவன் முக்தியை நாடி செல்வதற்கும் வழி செய்கிறது. இவ்வகையில், விளக்கு ஏற்றுவது முக்கியத்துவம் பெறுகிறது.

ஏனெனில், நாம் பார்த்து உணர்வதற்கு, ஒளி மிக அத்தியாவசியம். நம்மைச் சுற்றி இருக்கும் உலகத்தை நாம் புரிந்துகொள்வதில் நம் பார்வை பெரும் பங்கை வகிக்கிறது. வெளிச்சம் இல்லாவிட்டால், நம்மை சுற்றி இருக்கும் எதையும் நம்மால் உணர முடியாது. இதன் அடிப்படையில் நமக்கு ஒளி முக்கியம். ஆனால் இந்நாளின் முக்கியத்துவம் வெறும் வெளிச்சம், அல்லது விளக்கு ஏற்றுவதைப் பற்றி மட்டும் அல்ல. இந்த மாதத்தின் ஒவ்வொரு நாளும் நீங்கள் குறைந்தது இதையாவது செய்யவேண்டும்.

உங்களுக்கென்று ஒன்று, உங்களுக்கு நெருக்கமானவருக்கு ஒன்று, உங்களுக்கு சிறிதும் பிடிக்காதவருக்கு ஒன்று, என்று குறைந்தது மூன்று விளக்கேனும் நீங்கள் தினமும் ஏற்ற வேண்டும்! ஒரு வருடத்தின் இந்த பாகத்தை, தக்ஷிணாயனம் (அ) சாதனா பாதை என்று அழைப்பர். இதில் இந்த கார்த்திகை மாதத்தில் தான் நாம் ‘கைவல்ய பாதைக்குள்’ மெதுமெதுவாக அடி எடுத்து வைக்கும் நேரம். யோக சாதனா செய்யும் வகையில், தக்ஷிணாயனம் என்பது தீவிரமாக யோக சாதனாவில் ஈடுபட்டு, நம்மை சுத்திகரித்துக் கொள்வதற்கான நேரம். உத்தராயணமோ ஞானோதயம் பெறுவதற்கான நேரம். சாதனா பாதையில் உழுவை செய்து, விதை விதைத்து, பயிர் செய்தாயிற்று. இப்போது நீங்கள் செய்த ‘சாதனா’விற்கான பலன்களை அறுவடை செய்யும் நேரம். இந்த நேரத்தில் தான் உங்கள் சாதனாவின் பலன்களை உங்களுக்கு பயன்படும் விதத்தில் நீங்கள் பெற்றுக் கொள்ள முடியும். இதை பல கதைகளில் கேட்டிருப்பீர்கள்.

பிதாமகர் பீஷ்மர், சாதனா பாதையில் இறக்க விரும்பாமல், அம்புப் படுக்கையில் காத்திருந்து, ‘உத்தராயண’த்தில் உயிர் நீத்தது நாம் அனைவரும் அறிந்த கதைதான். அவர் உத்தராயணத்தில் (அ) கைவல்ய பாதையில் இறக்க விரும்பியதற்கான காரணம், அந்த நேரத்தில் தான் வாழ்க்கையின் பலன்களை அறுவடை செய்யமுடியும். நம் உள்நிலையில் அறுவடை செய்ய வேண்டியவற்றை கைவல்ய பாதையில் மிக எளிதாக அறுவடை செய்துவிடலாம். இந்த கார்த்திகை மாதம், சாதனா பாதையில் இருந்து கைவல்ய பாதைக்கு மெதுவாக மாறும் நேரம். இந்நேரத்தில் விளக்குகள், அதில் இருந்து வெளிவரும் ஒளி, ஞானோதயம், விழிப்புணர்வு, முக்திக்கான அடையாளக் குறியீடுகள்.

இதைக் குறிப்பதற்குத் தான் வீட்டிலே பல விளக்குகள் ஏற்றி வைக்கிறோம். இது ஏதோ ஒரே ஒரு விளக்கை ஏற்றுவதைப் பற்றி அல்ல. நம் கலாச்சாரத்தில் பொதுவாக கார்த்திகை மாதத்தில், எப்போதும் ஏற்றுவதை விட இரண்டு மடங்கு அதிகமாக தீபம் ஏற்றுவார்கள். ஒன்று, வருடத்தின் இந்த நேரத்தில் பகல் நேரம் குறைவாக இருப்பதால், நம் தினசரி வேலைகளை செய்ய நமக்கு இன்னும் கொஞ்சம் அதிகமாக வெளிச்சம் தேவைப்படும் என்பதால். மற்றொன்று நம் வாழ்வில் ஒளியை பெருக்கிக் கொள்ளும் நேரம் இது.

 

சென்னை,  நவம்பர் 16-  கார்த்திகை மாதம் ஐயப்பன் மற்றும் முருக பக்தர்களுக்கான மாதம் என்று கூறலாம்.  சபரிமலைக்கு யாத்திரை செல்பவர்களும், முருக பக்தர்களும், இம்மாதம் மாலை அணிந்து விரதம் தொடங்குவது வழக்கம். அந்த வகையில், இன்று  கார்த்திகை மாதம் பிறந்ததைத் தொடர்ந்து,  ஊரெங்கும் உள்ள கோயில்களில் காலையிலேயே ஐயப்ப சரண கோஷமும்,  முருகனுக்கான அரோகரா கோஷமும் முழங்கியது. ஆலயங்களில் கூட்டம் அலைமோதியது. 

கார்த்திகை தொடங்கி தைமாதம் வரை கேரளாவில் அமைந்துள்ள சபரிமலை ஐயப்ப சுவாமி ஆலயத்தில் மண்டல மற்றும் மகரவிளக்கு பூஜைகள் விமரிசையாக நடைபெறுவது வழக்கம். 

இதனை முன்னிட்டு, இன்று கார்த்திகை மாதம் தொடங்கியதையடுத்து,  தமிழகம் முழுவதும் உள்ள ஐயப்ப பக்தர்கள் விரதத்தைத் தொடங்கினர். குருசாமி என அழைக்கப்படுபவர் ஒவ்வொரு பக்தருக்கும் மாலை அணிவித்தார்.  

இதனால், தமிழ்நாடு முழுவதும், அதிகாலையிலேயே சரண கோஷங்கள் ஒலித்தன.  48 நாட்கள் ஐயப்பன் மற்றும் முருகன் பக்தர்களும் விரதம் இருப்பதால், இக்காலக்கட்டத்தில் காய்கறி மற்றும் பூக்களின் விற்பனையும் விலையும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

சென்னை,  நவம்பர் 4 - கந்த சஷ்டி விரதம் தொடங்கியதையடுத்து, திருச்செந்தூர் ஶ்ரீ சுப்ரமணிய சுவாமி திருக்கோயிலில் கந்த சஷ்டி விழா களைக்கட்டியுள்ளது.  

கந்த சஷ்டி விழாவை முன்னிட்டு, கடந்த அக்டோபர் 30-ஆம் தேதி முதலே பக்தர்கள் திருச்செந்தூருக்கு வரத் தொடங்கிவிட்டனர். தமிழகம் மட்டுமல்லாமல், இந்தியா முழுவதுமிலிருந்தும்,  மலேசியா, சிங்கப்பூர் போன்ற நாடுகளிலிருந்தும் பக்தர்கள்  திருச்செந்தூர் வந்தடைந்தனர்.  

அனைவரும், கடலிலும்,  நாழிக் கிணறிலும் நீராடி, யாகசாலை பூஜையில் பங்கேற்று விரதத்தைத் தொடங்கினர். நாளை 4.30 மணியளவில், சூரசம்ஹார நிகழ்ச்சி நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது. 

ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோயிலிலேயே தங்கி விரதத்தைத் தொடங்கினர். 

இந்நிலையில்  கந்த சஷ்டி விரதத்தின் முக்கிய நிகழ்வான சூரசம்ஹார விழா நாளை, நவம்பர் 5-ஆம் தேதி நடைபெறுகிறது. 

இதனையடுத்து மறுநாள் நவம்பர் 6-ஆம் தேதி, திருக்கல்யாண வைபவம் நடைபெறும். 

More Articles ...