திருமலை, 29 ஜூன்-  திருமலையில் உள்ள திருப்பதி ஏழுமலையான் கோவிலில் , ஏழுமலையான்-பத்மாவது தாயார் உருவம் பொறித்த டாலர்கள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

தங்கம் விலை எகிறிக்கொண்டே போவதால, பக்தர்கள்  தங்களால் வாங்க முடியவில்லை என கோரிக்கை விடுத்ததைத் தொடர்ந்து, தேவஸ்தானம் 2 கிராம் தங்கத்தில்  டாலர்களை  விற்பனை செய்ய முடிவு செய்துள்ளது.  எனவே இனி 2,5,10 கிராம்களில் ஏழுமலையான்- பத்மாவது டாலர்களும் 5,10 கிராம்களில் வெள்ளி டாலர், 5 கிராம் செம்பு டாலர்களும் விற்கப்படவுள்ளன.  

 2 கிராம் தங்க டாலர் விற்பனை இன்னும் ஒருவாரத்தில் தொடங்கப்பட உள்ளதாகவும், இதற்காக  கூடுதலாக இரண்டு தங்க டாலர் விற்பனை மையங்கள் திறக்கப்படவுள்ளதாகவும் தேவஸ்தானம் தெரிவித்துள்ளது. 

தாய்மார்கள் தங்களின் பெண் குழந்தைகளை   தினமும் விளக்கேற்றும் படி பழக்கப்படுத்துவது அவசியம். இதனால் அவர்களை தெய்வ நம்பிக்கையுள்ளவர்களாக வளர்ப்பதோடு, அவர்களின் முகத்தில் ஒரு தேஜசையும் உருவாக்க முடியும்.  நம்பினால்   சோதித்துப் பாருங்கள்.  உங்கள் வீட்டுப் பெண்ணை ஒரு குறிப்பிட்ட தினத்திலிருந்து விளக்கேற்றும் படி சொல்லுங்கள். அன்று  உங்கள் பெண் பிள்ளையிடம்   அவளது முகப் பொலிவை முகம் பார்க்கும் கண்ணாடியில் பார்க்கச் சொல்லுங்கள். நீங்களும் பாருங்கள். அந்த தேதியைக் குறித்து வையுங்கள். 

சரியாக 30 நாட்கள் கழித்து, மீண்டும் உங்கள் பெண்ணை கண்ணாடியில் முகத்தைப் பார்க்கச் சொல்லுங்கள். 45-வது நாள் வரை இதே போல் செய்து பாருங்கள். நிச்சயமாக ஒரு மாற்றத்தை உங்கள் பெண்ணின் முகத்தில் பார்க்கச் சொல்லுங்கள்.  நிச்சயமாக உங்கள் பெண்ணின் முகத்தில் நீங்கள் மாற்றத்தைப் பார்க்க முடியும். அந்த மாற்றத்தை உங்கள் வீட்டு பெண்ணும் உணர முடியும்.  அதேபோல் பெற்றோரின் ஆதரவும் அரவணைப்பும் வியப்பூட்டும் வகையில் கூடும். 

 

-நாளை தொடரும்... 

சிவன் கோவிலுக்கு சென்றிருப்பீர்கள், அங்கு வாசலில் நந்தி சிலை இருக்கும். இந்த நந்தி சிலை ஏன் வைக்கப்பட்டிருக்கிறது. இதன் வரலாறு என்ன என்பது பற்றி தெரிய ஆசைப்பட்டிருப்பீர்கள். அல்லவா? உங்கள் ஆவலை பூர்த்தி செய்வதுதானே என் விருப்பம். பூலோகத்தில் சிவாதர் என்ற சிவபக்தர் வாழ்ந்தார். அவரது மனைவி சித்திரவதி. இவர்களுக்கு குழந்தை இல்லை. 

இதனால் சிவாதர் சிவனை நினைத்து தவம் செய்தார். தவத்தால் மனம் குளிந்த சிவன் அவரது எண்ணம் நிறைவேற ஆசிர்வதித்தார்.   காலங்கள் கழிந்தது. ஒரு நாள் சிவதார் நிலத்தை உழும்போது தங்கபேழை ஒன்றை கண்டார். அதில் தங்க விகரகம் போன்ற காளைக்கன்று வடிவிலான குழந்தை ஒன்று இருந்தது. 

அந்த குழந்தைக்கு நந்தி என்று பெயர் வைக்குமாறு சிவதார் காதில் சிவபெருமான ஓதினார். நந்தி சிறு வயதிலேயே சாஸ்திரம், வேதங்களை கற்று 7 வயதிலேயே ஞான பண்டிதராக விளங்கினார். இவர் மீது பற்று கொண்ட நந்தி தேவர் என அழைக்குமாறு சிவன் அசீரியாக ஒலித்தார். நந்தி தேவருக்கு சுயஞ்சை என்ற பெண்ணை திருமணம் செய்து வைத்தனர்.நந்திதேவரின் கால்கள், சமம், விசாரம், சந்தோஷம், சாதுசங்கமம் எனும் நான்கு விதமாக குணத்தை வெளிப்படுத்துகிறது. 

சிவன் இவன் மீது தீவிர பற்று கொண்டதால், அவருக்கு நிகரான பலம் பெற்றவராகவே நந்திதேவர் கருதப்படுகிறார். தூய்மையான வெண்மை நிறம் கொண்டவர் நந்திதேவர். இவர் அகம்படியர் (சைவம்) என்ற இனத்தை சேர்ந்தவர். அகம்படியர் என்ற சொல்லுக்கு காவல் என்ற பொருளும் உண்டு. அதனால் தான் சிவன் கோவிலில் நுழைவாயிலில் நந்தி தேவர் காவல் தெய்வமாக நிற்கிறார். 

இவரிடம் உத்தரவு பெற்று தான் சிவனை தரிசிக்க வேண்டும் என்பது ஐதீகம். பிரதோஷ நாட்களில் துர்தேவதைகளின் நடமாட்டம் அதிகம் இருக்கும். இதனால் தீமைகள் அதிகம் நடக்கும். இதற்காகத்தான் நந்தியின் கொம்பில் நின்று சிவபெருமான்  நடனமாடுகிறார். புரிந்துவிட்டதா? இனி யாராவது நீங்கள் செல்லும் வழியில் நின்றால், நந்தி மாதிரி குறுக்கே நிற்காதே என்று கூறாதீர்கள். அவர்கள் உங்களை காப்பவர் என்று சொல்லாமல் சொல்வதாகத்தான் பொருள்படும்.

இன்று ‘அக்‌ஷய திரிதியை’. ‘அக்‌ஷய திரிதியை’ என்றால் என்ன? நம்மில் பலருக்குத் தெரிந்ததெல்லாம் அக்‌ஷயதிரிதியை அன்று கடைக்குப் போய் நகை வாங்குவதுதான். ‘அக்‌ஷய திரிதியை’ அன்று நகை வாங்கினால் நம் வீட்டில் செல்வம் பொங்கும் என்றொரு நம்பிக்கை. இது சரியானதா?

முதலில் ‘அக்‌ஷய திரிதியை’ என்றால் என்னவென்று பார்ப்போமே. ‘அக்‌ஷய’ என்றால் எடுக்க எடுக்கக் குறையாதது என்றொரு பொருளுண்டு. அக்‌ஷய பாத்திரம் தமிழிலக்கியங்களிலும் உண்டு. மணிமேகலைக்கு பசிப்பிணி போக்கும் ‘அட்ஷய பாத்திரம்’ கிடைத்தது. அன்று முதல் மக்களின் பசியைப் போக்குவதையே தன் கடமையாகக் கொண்டு வாழ்ந்த மணிமேகலை, அவள் மறைவிற்கு பின் தெய்வமாகப் போற்றப்பட்டாள்.

‘திரிதியை’ என்பது அமாவாசை அல்லது பௌர்ணமியிலிருந்து மூன்று நாள் கழித்து வரும் நாள். ‘அக்‌ஷய’ என்பது சித்திரை மாதம் அமாவாசை முடிந்த வளர்பிறையின் மூன்றாம் நாள்.

வளர்பிறைக்கே ஒரு சிறப்புண்டு. இருளாய் இருந்த வானத்தில் நிலா ஒவ்வொறு நாளும் வளர்ந்து முழு நிலவாய் மாறுவதே ஒரு அழகுதான்.

இதை வைத்துப் பார்க்கையில் அக்ஷய திரிதியை அன்று செய்யும் காரியங்கள் வளர்பிறை போல வளரும்; அட்சய பாத்திரம் போல குறைவின்றி இருக்கும் என்று பொருளாகிறது. ஆனால் இது தங்கம் வாங்கத் தோற்றுவிக்கப்பட்டதல்ல என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

சித்திரை மாதம் அமாவாசையை அடுத்துவரும் மூன்றாம் பிறை நாளான த்ரிதியை தினத்தில்தான்,கிருதயுகத்தை பிரமன் படைத்ததாகச் சொல்லுகிறது பவிஷ்ய புராணம். ஒரு யுகம் முடிந்து மறுயுகம் தொடங்கும் நாளை ‘யுகாதி’ என்பர். அந்த வகையில் அக்ஷ்ய த்ரிதியை தினமும் காதிதான். ‘மாலோடு’ ‘திரு’ சேர்ந்து, மஹாவிஷ்ணு ‘திருமால்’ ஆன தினம் என்பதால், திரிதியை திதி, பொதுவாகவே லக்ஷ்மி கடாட்சம் நிறைந்தது.

எனவேதான் அன்று பொன்னும் பொருளும் வாங்கி சேர்த்தால் எந்தவிதக் குறையுமின்றி அந்த ஆண்டு முழுவதும் இல்லத்தில் செல்வம் கொழிக்கும் என்பது ஐதீகம். அட்சய த்ரிதியையன்று அதிகாலையிலேயே எழுந்து நீராடிவிட்டு, பூஜை அறையில் கோலமிடுங்கள். மகாலக்ஷ்மி, மஹாவிஷ்ணு இருவரும் சேர்ந்தபடம் இருப்பின், விளக்கேற்றி பக்தியோடு பூஜை செய்து, தூப, தீபம் காட்டி, காய்ச்சிய பால், பழம் நிவேதனம் செய்து திருமாலை வழிபடுங்கள்.

அக்ஷய திருதி மே 9ம் தேதி வருவதை முன்னிட்டு   மக்கள் தங்க நகை வாங்குவதில் இன்று அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.

வைகாசி மாதம், சுக்லபட்சம் திருதியை திதியில் விரதத்தை கடைபிடித்து எண்ணெய் தேய்த்து நீராடுதலை தவிர்த்தல் என்பது விதி. ஆனால் இந்த தினத்தில் எண்ணெய் தேய்த்து குளித்து விஷ்ணுவை நினைத்து வழிபட வேண்டுமென்பது ஐதீகமாக உள்ளது. அட்ஷய திருதியை தினத்தன்றுதான் இறைவன் விஷ்ணு அக்‌ஷய  பாத்திரத்தை திரவுபதிக்கு கொடுத்தார் என்பதால், இந்த நாளில் தங்கம் வாங்கினால் அது மேலும் மேலும் பெருகும் என்பது சமீபகாலமாக சம்பிரதாயமாகி விட்டது.

More Articles ...