இஸ்லாமாபாத், நவ.18- பாகிஸ்தானின் ஹரிப்பூர் மாவட்டத்தில் பாமலா ஸ்துபா என்ற பகுதியில் 1,700 ஆண்டுகளுக்கு முந்தைய உலகின் மிகப் பழமை வாய்ந்த புத்தரின் சிலையை அகழ்வாய்வாளர்கள் கண்டுபிடித்து உள்ளனர். 

துயில் நிலையில் இருக்கும் இந்த புத்தர் சிலையுடன், புத்த சமயம் சார்ந்த 500க்கும் அதிகமான புராதனப் பொருள்களையும்ஆய்வாளர்கள் தோண்டி  இங்கிருந்து எடுத்துள்ளனர்.

பாகிஸ்தானின் கைபர்- பாத்தூன்கவா பகுதியிலுள்ள ஹரிப்பூர் மாவட்டத்தில் தொடர்ந்து அகழ்வாய்வுகளை நிபுணர்கள் நடத்தி வருகிறார்கள். சுமார் 48 அடி நீளம் கொண்ட இந்தச் சிலை 3ஆம் நூற்றாண்டைச் சேர்ந்ததாக இருக்கக்கூடும். எனவே, இதுதான் உலகின் பழமையான புத்தராக இருக்கலாம் என நிபுணர்கள் தெரிவித்தனர்.

ஹரிப்பூர் தான் பாகிஸ்தானிய புத்த சமயத்தின் அடிப்படைத் தளமாக இருந்திருக்கக்கூடும் என்று அருங்காட்சியகத்தின் இயக்குனர் அப்துல் சமாட் தெரிவித்தார். கிட்டத்தட்ட மௌரிய சாம்ராஜ்யத்தின் சக்கரவர்த்தியான அசோகர் காலத்தியத்தோடு இது தொடர்புடையதாக இருக்கலாம் என்றார் அவர்.

இந்தப் பகுதியை அரசாங்கம் பாதுகாக்க வேண்டும் என்றும் சமய வரலாற்றின் மிக முக்கிய கூறாக இப்பகுதி விளங்குவதாகவும் அவர் குறிப்பிட்டார். 

அதேவேளையில் இந்தப் பகுதி பாதுகாக்கப்பட்டு, சமயச் சுற்றுலாவுக்கான ஒரு தளமாக மாற்றப்படவேண்டும். இதனால் உலகளவில் புத்த சமயத்தினர் பாகிஸ்தானுக்கு சுற்றுலா மேற்கொள்ள வழி பிறக்கும் என்று முக்கிய அரசியல் கட்சியின் தலைவரான இம்ரான் கான் வலியுறுத்தினார்.

கடந்த காலங்களில் இதுபோன்ற அகழ்வாய்வுகளின் வழி கண்டுபிடிக்கப்பட்ட சில புத்தத் தளங்கள், பாகிஸ்தானின் சமயத் தீவிரவாதிகளால் சேதப்படுத்த சம்பவங்கள் நடந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

 

 

கோலாலம்பூர்,அக்.9- சுமார் எட்டு லட்சம் ரிங்கிட் செலவில் உருவாகியுள்ள பூச்சோங் ஶ்ரீ ஶ்ரீனிவாச பெருமாள் ஆலயத்தில் புரட்டாசியை தொடர்ச்சியாக சிறப்புப் பூஜைகள் நடந்து வருகின்றன.

பூச்சோங் வட்டாரத்திலேயே பிரமாண்டமாக அமைந்துள்ள ஒரே விஷ்ணு ஆலயம் இவ்வாலயம்தான். புரட்டாசி மாதம் என்பது தெய்வீக மாதம். இம்மாதத்தில் வரும் திருவோண நட்சத்திரம் பெருமாளுக்கு அவதார திருநாளாகும். ஒவ்வொரு நாளும் காலை 7.00 மணி முதல் 9.00 மணி வரை சந்தான கிருஷ்ண பூஜை நடைபெறுகிறது.

புரட்டாசி நான்கு சனிக்கிழமைகளில் இரவு ஸ்வாமி வாகனங்களில் விசேஷ அலங்காரத்துடன் புறப்படும், இராஜ உபசார பூஜைகளும் விமரிசையாக நடைபெறும்.

ஶ்ரீ ஶ்ரீனிவாச பெருமாள் தீராத வினைகளைத் தீர்க்கும் பெருமாளாக பக்தர்கள் வேண்டிய வரங்களை அருளி வரம் தரும் பெருமாளாக அருள் புரிகின்றார்.

அவருக்குப் பிரியமான இந்த மாதத்தில் அவரை தரிசித்தும், உபயங்கள், அன்னதானம் எடுத்தும் எம்பெருமாள் ஶ்ரீ ஶ்ரீநிவாச பெருமாளை வணங்கினால் நல்லதே நடக்கும். மேல் விவரங்களுக்குப் பக்தர்கள் 016-6379180 அல்லது 016-9166321 என்ற எண்களுக்குத் தொடர்பு கொள்ளலாம். 

மேஷம் : நண்பர்கள் நல்ல தகவலைக் கொண்டு வந்து சேர்க்கும் நாள். வசதி, வாய்ப்புகளைப் பெருக்கிக் கொள்ள விரும்புவீர்கள். எந்தக் காரியத்தையும் துரிதமாகச் செய்து முடிப்பீர்கள். புதியவர்களின் அறிமுகம் கிடைக்கும்.

ரிஷபம்: தாராளமாகச் செலவிட்டு மகிழும் நாள். தொழில்,உத்யோகத்தில் புதிய மாற்றங்களைச் செய்வது பற்றிச் சிந்திப்பீர்கள். சொன்ன சொல்லைக் காப்பாற்ற முயற்சிப்பீர்கள். வீடு மாற்றச் சிந்தனை மேலோங்கும்.

மிதுனம்: அதிர்ஷ்ட வாய்ப்புகள் அலை மோதும் நாள். அன்பு நண்பர் களின் ஆதரவு பெருகும். உத்யோகத்தில் உங்கள் நிர்வாகத் திறமையைக் கண்டு ஆச்சர்யப்படுவர்.வருமானம்  இருமடங்காகும்.

கடகம்: பொதுவாழ்வில் புகழ்கூடும் நாள். புது முயற்சிகளில் அதிக ஆர்வம் காட்டுவீர்கள். தொழிலை விரிவுபடுத்தும் எண்ணம் மேலோங்கும். பொறுப்புகளும், பதவிகளும் வந்து சேர்வதற்கான அறிகுறிகள் தோன்றும்.

சிம்மம்: நல்லவர்களைச் சந்தித்து நலம் காணும் நாள். நண்பர்கள் நம்பிக்கைக்குரிய விதம் நடந்து கொள்வர்.பழைய பிரச்சனைகளைத் தீர்க்க முழுமூச்சுடன் செயல்படுவீர்கள். தந்தை வழி ஒத்துழைப்பு உண்டு.

கன்னி: ஆலய வழிபாட்டால் அமைதி காண வேண்டிய நாள். உடல் நலம் சீராக ஒரு சிறு தொகையைச் செலவிடுவீர்கள். கூட்டாளிகளால் சில தொல்லைகள் ஏற்படும். வரவைக்காட்டிலும் செலவு கூடும்.

துலாம்: போன்மூலம் பொன்னான தகவல் வந்து சேரும் நாள். தொழில் வளர்ச்சி கூடும். உள்ளன்போடு பழகியவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். வாகனம் வாங்கும் முயற்சியில் ஆர்வம் காட்டுவீர்கள்.

விருச்சகம்: எண்ணங்கள் எளிதில் நிறைவேறும் நாள். இனிய விழாக்களுக்க அழைப்புகள் வந்து சேரும். பழைய பாக்கிகள் வசூலாகும். குடும்பத்தில் உள்ளவர்கள் உங்கள் விருப்பப்படியே நடந்து கொள்வர்.

தனுசு: எதிர்பார்ப்புகள் நிறைவேறும் நாள். பிற இனத்தாரால் பெருமை வந்து சேரும் சாதுர்யமாக செயல்பட்டு பொருள்வரவைப் பெருக்கிக் கொள்வீர்கள். வராத உறவினர்கள் திடீரென வரலாம்.

மகரம்: இடம் வாங்கும் முயற்சியில் இனிய பலன் கிடைக்கும் நாள். புதிய வாய்ப்புகள் எதிர்பாராத விதத்தில் வந்து சேரும்.   விலைஉயர்ந்த பொருட்களை வாங்கி ஆனந்தம் பெறுவீர்கள்.

கும்பம்: நல்ல சம்பவங்கள் நடைபெறும் நாள். வளர்ச்சிக்கு வித்திட்டவர்களை சந்தித்து மகிழ்வீர்கள். தைரியமும், தன்னம்பிக்கையும் அதிகரிக்கும்.  இளைய சகோதரத்தால் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும்.

 

மீனம்: புகழ் கூடும் நாள். பொருளாதார முன்னேற்றம் கருதி முக்கிய முடிவெடுப்பீர்கள்.  கலைத்துறை சம்பந்தப்பட்டவர்களால் காரிய அனுகூலம் கிடைக்கும். வீடு வாங்க விற்க எடுத்த முயற்சி வெற்றி தரும்.

 கோலாலம்பூர், செப்.23- புரட்டாசி மாதம் முழுவதும் விரதமிருந்து பெருமானை வழிபட சகல சௌபாக்கியங்களும் கிடைக்கும். புரட்டாசி மாதத்தில்தான் சனி பகவான் பிறந்தார். எனவே, புரட்டாசி சனிக்கிழமை விரதம் இருப்பது பெருமாளுக்கு மகிழ்ச்சியைத் தரும். சனியின் பார்வையும் பலவீனமடையும்.

புரட்டாசி மாதம் முழுவதும் விரதம் இருப்பது சிறப்பான ஒன்றாகும். கிரக தோஷமுள்ளவர்கள் புரட்டாசி சனிக்கிழமைகளில் ஆஞ்சநேயர் கோயிலுக்குச் சென்று வழிப்பட்டால் கருணை மிகுந்த ஆஞ்சநேயசாமி, சனியின் பிடியிலிருந்து காப்பாற்றுவார்.

ஆஞ்சநேயரை வணங்கும் பக்தர்களை சனிபகவான் தொந்தரவு செய்வதில்லை. புரட்டாசி சனிக்கிழமைகளில் யாருக்கும் கடன் கொடுக்கவும் கடன் வாங்கவும் கூடாது. ஆனால் தர்மம் நிறையச் செய்யலாம்.

காகத்திற்கு அன்று வாழை இலையில் எள்ளும் வெல்லமும் கலந்த அன்னம் வைத்தால் சனியின் தாக்கம் நீங்கும். புரட்டாசி சனிக்கிழமையன்று சிவாலயங்களுக்குச் சென்று சனிபகவானை வழிபட்டு வணங்கினால், சனி தோஷம் நீங்கும். புனிதமிக்க புரட்டாசி மாதத்தில் வரும் விரதங்கள் புண்ணிய பலன் தரும். 

More Articles ...