மஞ்சோங் மாவட்டத்திலுள்ள செங்காட் கூரிங், சொகமனா தோட்ட ஶ்ரீமகா மாரியம்மன் ஆலயத்தின் 24ஆம் ஆண்டு தீமிதி திருவிழா எதிர்வரும் ஜூலை 1ஆம் தேதி சனிக்கிழமையன்று வெகு சிறப்பாக நடைபெறவிருக்கிறது.

அன்றைய தினம் காலை 6.30 மணிக்கு மேல் கும்ப பூஜை, சங்கு பூஜை, மூல மந்திர ஜெப ஹோமத்துடன் தொடங்கும் விழாவில் 9 மணிக்கு பால் அபிஷேகம் அடுத்து சங்காபிஷேகம் இடம்பெறும்.

காலை 9.30 மணியளவில் பூக்குழி திறக்கப்படும். நண்பகல் 12 மணிக்கு சிறப்பு பூஜையும் 1 மணிக்கு மேல் மகேஸ்வர பூஜையைத் தொடர்ந்து அன்னதானமும் இடம்பெறவிருக்கிறது.

மறுநாள் 2ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை ஶ்ரீசீத்தா – ராமர் திருக்கல்யாணத்துடன் மாலை 6 மணிக்கு மேல் இரதம் ஊர்வலம் புறப்பட்டு, பின்னர் இரவு இரதம் ஆலயம் வந்தடையும்.

மறுநாள் 3ஆம் தேதி திங்கட்கிழமை சக்தி கரகம் வீதி உலாவுதலுடன் மஞ்சள் நீர் விளையாட்டு, பின்னர் 7.30 மணியளவில் முனீஸ்வரருக்கு பால் பூஜையும் நடைபெறும்.

அண்மையில் வெகுசிறப்புடன் கும்பாபிஷேகம் கண்ட சொகமனா தோட்ட ஶ்ரீமகா மாரியம்மன் ஆலயத்தின் திருப்பணிக்கு கோலாலம்பூர், ஜொகூர்பாரு உள்பட மலேசியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் சிங்கப்பூரில் இருந்தும் நிதியுதவி உள்ளிட்ட பல்வேறு உதவிகளை வழங்கிய சொகமனா தோட்ட இளைஞர்கள் இந்தத் தீமிதித் திருவிழாவில் திரளாக கலந்து கொண்டு சிறப்பிக்கும்படி ஆலயப் பொறுப்பாளர்கள் வேண்டுகோள் விடுத்தனர்.

வைகாசி விசாகம் என்பது முருகக் கடவுள் அவதாரம் செய்த நாளாகும். வைகாசி மாதத்தில் வரும் விசாக நட்சத்திரத்தில் வரும் சிறப்பு நாளாக கொண்டாடப்படிகிறது.

விசாகம் ஆறு நட்சத்திரங்களும் ஒன்று கூடிய நட்சத்திரமாகும். இதனால் முருகனும் ஆறு முகங்களோடு திகழ்பவர் என்பது ஐதீகம். இந்நாள் சோதி நாள் எனவும் அழைக்கப்படுவதுண்டு.

உயிர்களுக்கு நேரும் இன்னலை நீக்கும் பொருட்டு சிவன் ஆறுமுகங்களாய்த் தோன்றி ஈசனின் திருவிளையாடலால் குழந்தையாக அவதரித்தார் முருகன். 

இந்நாளில். மக்கள், பிராணிகள், தாவரங்கள் எல்லாம் ஓருயிராகி இணைக்கப்பட்டிருக்கும். உண்மையை விளக்குதலே இந்நாளின் கருத்தாகும். இதனால் சைவர்கள் இந்நாளில் விரதமிருந்து ஆலயங்களில் சிறப்பாகக் கொண்டாடுவர்.

இன்னாளில் பக்தர்கள் திருப்புகழ். கந்தசஷ்டி கவசம், முருகனுக்குரிய ஆறெழுத்து மந்திரங்களான "ஓம் சரவணபவ, நம ஓம் முருகா" என்ற மந்திரத்தை உச்சரிப்பது நல்லது. முருகன் கோவிலுக்கு சென்று விளக்கேற்றி வழிபடுவது நல்லது.

 

கோவிலை வலம்வரும் போது நமது ஜென்ம பாவங்கள் நீக்கி நன்மை கிடைக்கும். ஒவ்வொரு கோவிலுக்கும் இத்தனை முறை வந்தால் நன்மை என்று உண்டு என்றும் அதன்படி நாம் வலம் வந்து தரிசனம் செய்தால் நாம் நினைத்தது நிறைவேறும் என்றும் ஐதீகம் உண்டு.

## முருகப் பெருமான் கோவிலில் ஆறு முறை வலம் வந்தால் எதிரிகளை வெல்லக்கூடிய ஆற்றலும் கூர்ந்த மதியும் திறமையும் கிடைக்கும். 

## அம்பிகை பராசக்தியை வெள்ளி முதல் செவ்வாய் வரை தொடர்ச்சியாக ஐந்து நாள்கள் வலம் வந்து வழிபட்டால் நினைத்த காரியம் நிச்சயம் நிறைவேறும். மன அமைதி கிட்டும்.

## சிவ பெருமானை ஐந்து முறை வலம் வந்து வணங்கினால் மீண்டும் பிறவா நிலை வளம் கிடைக்கும்.

## திருமால் கோவிலில் மகாவிஷ்ணுவை மூன்று முறை வலம் வந்து வணங்க வேண்டும். இதனால் ஆட்சி அதிகாரம் செல்வாக்கு அஷ்டலட்சுமி கடாட்சம் கிடைக்கும். 

## நவக்கிரக கோவில்களில் விக்கிரகங்களை ஒன்பது முறை வலம் வந்து வணங்க வேண்டும். இதனால் ஜாதகத்தில் உள்ள குறைபாடுகள் நீங்கி வாழ்க்கை பயனுள்ளதாக மாறும். 

இதைத் தவிர்த்து பதினொரு முறை, பதிமூன்று முறை, நூற்றியொரு முறை, நூற்றியெட்டு முறை வலம் வருதல் மற்றும் பிரதட்சணம் போன்றயெல்லாம் அவரவர் வேண்டுதலை பொறுத்தது.   

கோலாலம்பூர், மார்ச் 11- ஆண்டுதோறும் மாசி மாதம், மகம் நட்சத்திரத்தில் வருவது மாசிமகம்.  பன்னிரெண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை குரு சிம்ம ராசியில் இருக்க, சூரியன் கும்பராசியில் இருக்க மாசி மாதத்தில் பௌர்ணமி தினம் அன்று மக நட்சத்திரம் கூடி இருப்பதான சேர்க்கை நடைபெறும். இந்தச் சேர்க்கை பன்னிரெண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறையே வரும். அன்றைய தினமே மகாமகம் என்று கொண்டாப்படுகிறது. ஆண்டு தோறும் வருவது மாசிமகம்.

மாசிமக தினத்தன்று ஈரேழு பதினான்கு லோகத்தில் வசிப்பவர்களும் இத்திருக்குளத்தில் நீராட வருவதாகவும், கங்கை, யமுனை, சரஸ்வதி, நர்மதை, சிந்து, காவிரி, கோதாவரி, சரயூ, பொருநை ஆகிய நதிகளும் கன்னிகளாக இங்கு வந்து இத்திருக்குளத்தில் நீராடித் தங்கள் பாவங்களைப் போக்கிக் கொள்கின்றனர் என்றும் ஐதீகம். இந்த மகாமகக் குளம் சுமார் 20 ஏக்கர் பரப்புடையது. இந்நாளில் இங்கு வந்து தீர்த்தமாட இயலாதவர்கள், வீட்டில் நீராடும்பொழுது, புண்ணிய நதிகளும், ஏழு கடலும் இந்த நீரில் கலக்கட்டும் என்று பிரார்த்தனை செய்ய வேண்டும். இந்த நன்னாளில் கோவிலுக்குச் சென்று இறைவனை வழிபடுதல் பல நன்மைகளைத் தரும். இச்சிறப்பினை புராணக் கதைகள் எடுத்து இயம்புகின்றன.

கும்பகோணத்தில் எழுந்தருளியுள்ள ஆதிகும்பேஸ்வரர் கோவிலில் மகாமகம் பன்னிரெண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை திருவிழாவாகவே கொண்டாடப்படுகிறது. மாசிமகத்தன்று யமுனை, சரஸ்வதி, கோதாவரி, நர்மதா, சிந்து, காவேரி உள்ளிட்ட பன்னிரெண்டு புண்ணிய நதிகள் மக்கள் கழுவிய பாவச்சுமைகளை நீக்கவும் தங்களின் புனிதத் தன்மையை மீட்டெடுக்கவும் ஆதிகும்பேஸ்வரர் கோவில் திருக்குளத்திற்கு மாசிமகத்தன்று வருவதாக ஐதீகம்.

கும்பம் நின்ற இடம்

பிரளயம் ஏற்பட்டு உலகமே அழியும் காலமும் வந்தது. இந்த நேரத்தில் உயிர்களைக் காக்குமாறு சிவபெருமானிடம் தேவர்கள் முறையிட்டனர். பல புண்ணியத் தலங்களில் இருந்து மண், அமுதம், ஜீவ வித்துக்கள் ஆகியவற்றை ஒரு கும்பத்தில் பாதுகாப்பாக சேகரிக்கச் செய்தார் சிவபெருமான். அக்கும்பத்தில் அதாவது மண் குடத்தில் நான்கு பக்கமும் நான்கு வேதங்களை வைத்து, வில்வத்தால் அர்ச்சித்து உயரமான மேருமலையின் உச்சியில் வைக்கும்படி கூறினார்.

பிரளயம் சூழ்ந்தது. அனைத்து உயிர்களும் அடித்துச் செல்லப்பட்டன. அமுதம் மற்றும் ஜீவ வித்துக்கள் வைக்கப்பட்ட கும்பம், பிரளயத்தில் அடித்து வரப்பட்டு ஒரு இடத்தில் தட்டுப்பட்டு நின்றது. பிரளயம் வடிந்ததும் வேடன் உருவெடுத்து வந்த சிவபெருமான், அம்பெய்து குடத்தை உடைத்து மீண்டும் உயிர்கள் தழைக்கச் செய்தார்.

பிரளயத்தில் அடித்து வரப்பட்ட கும்பம் நின்ற இடமே கும்பகோணம் என்று அழைக்கப்படுகிறது. உயிர்களைக் காத்த சிவபெருமானுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் ஆண்டுதோறும் மாசிமக விழாவாகக் கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் கும்பகோணம் ஆதிகும்பேஸ்வரர் கோயிலில் சிறப்பு வழிபாடுகள் நடத்தப்படுகின்றன.

வருண பகவானுக்கு பிரமஹத்தி தோஷம் ஏற்பட்டதால், பிரம்ஹத்தி என்ற பூதம் வருணனைக் கடலுக்குள் ஒளித்து வைத்துவிட்டது. வருணன் சிவனை வேண்ட, மாசி மகத்தன்று அத்துன்பத்தில் இருந்து வருணனை விடுவித்தார் அவர். அன்றைய தினத்தில் புண்ணிய தீர்த்தமாடுவோரின் பாவங்கள் நீங்கும் என்றும் கூடுதலாக வரமளித்தார் சிவன்.

வருண பகவானுக்கு பிரமஹத்தி தோஷம் ஏற்பட்டதால், பிரம்ஹத்தி என்ற பூதம் வருணனைக் கடலுக்குள் ஒளித்து வைத்துவிட்டது. வருணன் சிவனை வேண்ட, மாசி மகத்தன்று அத்துன்பத்தில் இருந்து வருணனை விடுவித்தார் அவர். அன்றைய தினத்தில் புண்ணிய தீர்த்தமாடுவோரின் பாவங்கள் நீங்கும் என்றும் கூடுதலாக வரமளித்தார் சிவன்.

அம்பிகை தாட்சாயிணியாக அவதரித்த தினம் மாசிமகம் என்று கந்தபுராணம் கூறுகின்றது. கயிலையில் பார்வதியும் சிவனும் அளவளாவிக் கொண்டிருந்தபோது, பரமசிவன் பேரும், குணமும், உருவமும், இல்லாத தேவாதி தேவர்கள் எல்லாம் சக்தியால் அருவுருவமாகவே தெய்வ ஆட்சி செய்கிறோம் என்று கூறினார். அப்போது பார்வதிக்குத் தன்னால் தான் எல்லாம் நடைபெறுகிறது என்ற எண்ணம் மேலோங்கியது. சிவபெருமானோ தான் இல்லாவிட்டால் எதுவும் இயங்காது என்று கூறித் தனித்திருக்க, உலகம் இயங்காது ஜடமாகியது. நான் அசைந்தால் அசையும் அகிலமெல்லாமே என்ற ஈசனின் இத்திருவிளையாடலைக் கண்ட பார்வதிதேவி சிவனின் சக்தியை அறிகிறார்,

இந்த நேரத்தில் சிவனுக்கு, தான் தட்ச பிரஜாபதிக்கு கொடுத்த வரம் நிறைவேறும் தருணம் இது என்பதை உமைக்குச் சொல்லி, யமுனை நதியில் வலம்புரிச் சங்குவடிவில் தவம் இருக்க வேண்டுகிறார். அவ்வாறே தேவியும் செய்கிறார்.

இந்நிலையில் மாசி மகத்தன்று தட்ச பிரஜாபதி தன் மனைவி வேதவல்லியுடன் யமுனை நதியில் நீராடினான். அங்கு தாமரை மலரில் இருந்த வலம்புரிச் சங்கினைத் தொட்ட உடனேயே அது பெண்ணுருவாக மாறியது. இது சிவனின் வரம் என்பதை அறிந்து, தட்சன் அத்தெய்வப் பெண்ணுக்கு தாட்சாயிணி என்று பெயர் சூட்டினான். தாட்சாணியாக, பார்வதி அவதரித்த தினம் மாசிமகம்.

பெருமாள் வராக அவதாரம் எடுத்து, பாதாளத்தில் இருந்து பூமியை வெளிக்கொணர்ந்த நாளும் மாசி மகம்தான். அதனால் வைணவத் தலங்களிலும் தீர்த்தவாரி நடைபெறும்.

மாசிமக தினத்தன்று கும்பகோணத்தில் உள்ள மகாமகக் குளத்தில் நீராட நாட்டின் பல பாகங்களிலிருந்தும் மக்கள் கும்பகோணத்திற்கு வருவார்கள். காசியில் பிறந்தோர் பாவம் கும்பகோணத்தில் போகும், கும்பகோணத்தில் பிறந்தோர் பாவம் மகாமகக் குளத்தில் நீராடினால் போகும் என்று புராணங்கள் கூறுகின்றன.

மாசிமக தினத்தன்று ஈரேழு பதினான்கு லோகத்தில் வசிப்பவர்களும் இத்திருக்குளத்தில் நீராட வருவதாகவும், கங்கை, யமுனை, சரஸ்வதி, நர்மதை, சிந்து, காவிரி, கோதாவரி, சரயூ, பொருநை ஆகிய நதிகளும் கன்னிகளாக இங்கு வந்து இத்திருக்குளத்தில் நீராடித் தங்கள் பாவங்களைப் போக்கிக் கொள்கின்றனர் என்றும் ஐதீகம். இந்த மகாமகக் குளம் சுமார் 20 ஏக்கர் பரப்புடையது. இந்நாளில் இங்கு வந்து தீர்த்தமாட இயலாதவர்கள், வீட்டில் நீராடும்பொழுது, புண்ணிய நதிகளும், ஏழு கடலும் இந்த நீரில் கலக்கட்டும் என்று பிரார்த்தனை செய்ய வேண்டும். இந்த நன்னாளில் கோவிலுக்குச் சென்று இறைவனை வழிபடுதல் பல நன்மைகளைத் தரும். இச்சிறப்பினை புராணக் கதைகள் எடுத்து இயம்புகின்றன.

 

  

More Articles ...