பாஜக சார்பில் ராம்நாத் கோவிந்த் அதிபர் பதவிக்கு போட்டி!

India
Typography

புதுடில்லி,ஜூன்19 – பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி சார்பாக பீகார் மாநில ஆளுநராக உள்ள ராம்நாத் கோவிந்தை அதிபர் வேட்பாளராக பா.ஜ.க. அறிவித்தது.    

இந்நிலையில், அதிபர் வேட்பாளர் தொடர்பாக பா.ஜ.க. ஆட்சி மன்ற குழு கூட்டம் இன்று புதுடெல்லியில் நடைபெற்றது. கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய பா.ஜ.க. தலைவர் அமித்ஷா, பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி சார்பாக பீகார் மாநில ஆளுநராக உள்ள ராம்நாத் கோவிந்தை வேட்பாளராக அறிவித்தார்.   

இவர் உ.பி.,யில் இருந்து ராஜ்யசபா உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டவர். வழக்கறிஞரான இவர், 2015 ஆகஸ்ட் 8ஆம் தேதி பீகார் கவர்னராக நியமிக்கப்பட்டார். கான்பூரில் பிறந்த இவர், பா.ஜ.க. தலித் பிரிவின் தேசிய தலைவராக இருந்தவர். தற்போது இவருக்கு வயது 71. இவர், ஜூன், 23ஆம் தேதி வேட்பு மனு தாக்கல் செய்கிறார். 

மாநில கட்சித் தலைவர்களையும் தொடர்பு கொண்டு பேசினார்கள். இந்த ஆலோசனைகள் அனைத்தும் நேற்றுடன் முடிந்தது.  மேலும், துணை அதிபர் பெயர் இன்னும் முடிவு செய்யப்படவில்லை என்று அமித்ஷா கூறினார்.

BLOG COMMENTS POWERED BY DISQUS