விமானத்தில் பிறந்த குழந்தை:  வாழ்நாள் முழுவதும் வானில் பறக்கலாம்!

India
Typography

மும்மை, ஜூன்.19- சவுதிஅரேபியாவில் இருந்து கொச்சி நோக்கி சென்று கொண்டிருந்த விமானத்தில், பயணித்த பெண்ணுக்கு நடுவானில் குழந்தை பிறந்துள்ளது. இதனால் விமானம் அவசரமாக மும்பையில் தரையிறக்கப் பட்டது. 

சவுதி அரேபியாவில் இருந்து ஜெட் ஏர்வேஸ் 9w569 என்ற விமானம் கொச்சி நோக்கி பயணித்துக்கொண்டு இருந்தது. அப்போது மும்பைக்கு மேலே பறந்துகொண்டிருக்கும்போது நிறைமாத கர்ப்பிணியான பெண்ணுக்கு பிரசவவலி எடுத்தது. 

அப்போது விமானம் 35,000 அடி உயரத்தில் பறந்துகொண்டிருந்தது. விமானத்தில் பயணம் செய்த செவிலியர் ஒருவரின் உதவியுடன்,அப் பெண்ணுக்கு ஒரு அழகான குழந்தை  பிறந்தது. 

அதனை அடுத்து விமானம் அவசரமாக மும்பை விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டு தாயும்,குழந்தையும் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இருவரையும் பரிசோதித்த மருத்துவர்கள் இருவரும் நலமாக உள்ளதாக தெரிவித்தனர் .

இந்த மகிழ்ச்சியை வெளிபடுத்தும் விதமாக ஜெட் ஏர்வேஸ் நிறுவனம், விமானத்தில் பிறந்த அந்த குழந்தைக்கு, வாழ்நாள் முழுவதும் தனது நிறுவன விமானங்களில் பயணம் செய்வதற்கான இலவச அனுமதியை  வழங்கி சிறப்பித்து உள்ளது. 

இதற்கு குழந்தையின் பெற்றோர்கள் மகிழ்ச்சியையுடன் நன்றியையும் தெரிவித்துக்கொள்வதாக கூறினர். இருவரும் மருத்துவனையில் அனுமதிகப்பட்ட நிலையில், விமானம் மீண்டும் கொச்சி நோக்கி புறப்பட்டு சென்றது.    

BLOG COMMENTS POWERED BY DISQUS