திருவனந்தபுரம், ஜூலை.15- நடிகை பாவனா கடத்தப்பட்ட வழக்கில், நடிகர் திலீப் மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுகிறார். அவரது ஜாமீன் மனு மீது இன்று விசாரணை நடக்கிறது. அவருக்கு ஜாமின் கிடைக்குமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.
பிரபல நடிகை பாவனா, கடந்த பிப்ரவரி மாதம் கடத்தப்பட்டு பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்டார். இந்த வழக்கில் மலையாள நடிகர் திலீப்புக்கு தொடர்பிருப்பது தெரியவந்ததை அடுத்து அவர் அண்மையில் கைது செய்யப்பட்டார். அது மக்கள் மத்தியிலும் திரைப்படத் துறைனர் மத்தியிலும் மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்ப்படுத்தியது.
இந்நிலையில் கைதான உடனேயே, திலீப்பின் வழக்கறிஞர்கள் ஜாமீனுக்கு மனுத்தாக்கல் செய்தார். ஆனால் போலீசார், திலீப்பிடம் விசாரிக்க வேண்டியுள்ளதால் அவரைக் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரினர். இதையடுத்து திலீப்புக்கு ஜாமீன் வழங்க மறுத்த நீதிபதிகள், போலீசுக்கு 2 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி வழங்கினர்.
அவரிடம் முழுமையான விசாரணை முடிவுற்ற நிலையில், இன்று மாலை 5 மணிக்கு மீண்டும் அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுகின்றார். மேலும் ஜாமீன் கேட்டு திலீப் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணையும் இன்று நடைபெற வுள்ளது.
இதனால், திலீப்புக்கு ஜாமீன் வழங்க வாய்ப்புள்ளதாக அவரது வழக்கறிஞர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ள போதிலும் அவருக்கு ஜாமீன் கிடைக்குமா? அல்லது மீண்டும் சிறைக்கே அனுப்பப்படுவாரா? என்பது இன்று தெரியவரும்.
இன்று விசாரணை: நடிகர் திலீப்புக்கு ஜாமீன் கிடைக்குமா?
Tools
Typography
- Font Size
- Default
- Reading Mode