நடிகை பாவனா கடத்தல்: சிறையில் நடிகர் திலீப்புக்கு உடல்நிலை பாதிப்பு

India
Typography

 

திருவனந்தபுரம், ஆக.8- பிரபல நடிகை பாவனா கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள நடிகர் திலீப்புக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பிரபல மலையாள நடிகை கடந்த பிப்ரவரி 17-ஆம் தேதி கடத்தப்பட்டு, ஆறு நபர்களால் ஒரு காரில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். இந்த வழக்கு தொடர்பாக நடிகர் திலீப், கைது செய்யப்பட்டு தற்போது நீதிமன்ற காவலில் உள்ளார். அவரது ஜாமீன் மனுவை கேரள உயர்நீதிமன்றம் நிராகரித்தது.

பிரபல மலையாள நடிகை கடத்தல் வழக்கில் அலுவா சிறையில் அடைக்கப்பட்டுள்ள நடிகர் திலீப்பிற்கு உடல் நலம் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக அவரது உடல்நிலையைப் பரிசோதிக்க வந்த மருத்துவர்கள், காதுகளின் உட்பகுதியில் உள்ள திரவத்தில் நிலையற்றதன்மை பாதிக்கப்பட்டுள்ளதால், அவரால் நிற்ககூட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளனர்.

இதன் காரணமாக, அவருக்கு போதிய மருத்துவ வசதி அளித்தும், அவரது உடல்நிலையில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை. மேலும், சிறையில் வெறும் தரையில் பல நாட்கள் தூங்கியதாலும் அவருக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

இதன் காரணமாக, அவரை மருத்துவமனையில் சேர்த்துச் சிகிச்சை அளிக்க சிறை கண்காணிப்பாளர் ஆலோசித்தாலும், பாதுகாப்புக் கருதி அந்த முடிவு கைவிடப்பட்டது.

இந்நிலையில், அவரது நீதிமன்ற காவல் நாளையுடன் முடிவடையும் நிலையில், அவரது சார்பில் வழக்கறிஞர் ராமன் பிள்ளை ஜாமீன் கேட்டு மீண்டும் மனுத் தாக்கல் செய்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

BLOG COMMENTS POWERED BY DISQUS