பேய் மழை; வெள்ளத்தில் மிதக்கும் மும்பை! விமான நிலையம் மூடல்!

India
Typography

மும்பை, செப்.20- மும்பையில் பெய்துவரும் பேய் மழைக் காரணமாக அந்நகரிலுள்ள அனைத்துலக விமான நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டு விமானங்கள் சென்னை உள்ளிட்ட பிற நகரங்களுக்கு திருப்பிவிடப்பட்டன. 

மும்பையில் கடந்த சில நாட்களாக கடும் மழைக் கொட்டி வருகிறது. இதனால், மும்பை நகரமே வெள்ளத்தில் தத்தளித்து வருகிறது. மோசமான வானிலை மற்றும் ஓடுபாதை சரியில்லாத காரணத்தால் விமான சேவை பாதிக்கப்பட்டுள்ளது. 

மழை காரணமாக நேற்று மும்பையில் உள்ள பள்ளிக் கல்லூரிகள் செயல்படாத நிலையில், இன்றும் பள்ளிக் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இரவு முழுக்க பெய்த கனத்த மழையால் பல பகுதிகளை வெள்ளம் சூழ்ந்துள்ளது. 

அந்நகரிலுள்ள சத்ரபதி சிவாஜி, அனைத்துலக விமான நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டு விமானங்கள் சென்னை, கோவா, பெங்களூரு, டில்லி, ஹைதராபாத் விமான நிலையங்களுக்கு திருப்பி விடப்பட்டன. அபல ரயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. 

 

BLOG COMMENTS POWERED BY DISQUS