இந்திய நிபுணர் ரகுராம் ராஜனுக்கு பொருளாதாரத்திற்கான நோபல் பரிசா?

India
Typography

 

புதுடில்லி அக்.9- இந்தியாவின் முன்னாள் மத்திய வங்கி ஆளுனர்  ரகுராம் ராஜனுக்கு பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு கிடைக்கக்கூடும் என்று செய்திகள் வெளியாகியுள்ளன. 

இந்த ஆண்டுக்கான நோபல் பரிசுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றது. இந்நிலையில் பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு பெற வாய்ப்புள்ள வர்கள் பட்டியலில் முன்னாள் மத்திய வங்கி ஆளுனர் ரகுராம் ராஜனின் பெயரும் இடம்பெற்றுள்ளது என்று செய்திகள் கூறுகின்றன.

கிளேரிவேட் நிறுவனம் தயாரித்துள்ள அந்தப் பட்டியலில் ரகுராம் ராஜன் உள்பட 6 பேரின் பெயர்கள் உள்ளன. பட்டியலில் இடம்பிடித்ததால் ரகுராம் ராஜனுக்கு கண்டிப்பாக நோபல் பரிசு கிடைக்கும் என்று கூறமுடியாது. 

ரகுராம் ராஜனின் பதவிக்காலம் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 4ஆம் தேதியும் முடிந்தது. அவர் பொருளாதாரம் குறித்து பல புத்தகங்கள் எழுதியுள்ளார். 

2008-ஆம் ஆண்டு அமெரிக்க பொருளாதாரம் பெரும் சரிவை சந்திக்கும் என்று ரகுராம் ராஜன் கணித்தார். அவர் கணித்தது போன்றே நடந்துவிட்டது. பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு இன்று அல்லது நாளை அறிவிக்கப்படுகிறது.

அனைத்துலக நிதியமான ஐ.எம்.எஃப். அமைப்பின் தலைமைப் பொருளாதார நிபுணராக இவர் நியமிக்கப்பட்டுள்ளார். இப்பொறுப்புக்கு  மேற்கத்திய நாடுகளை சேராத நிபுணர் ஒருவர் முதன் முறையாக நியமிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கத்து. 

 

 

 

 

 

 

 

 

 

 

BLOG COMMENTS POWERED BY DISQUS