பாதாள சுரங்கங்களில் பாக். அணுவாயுதம்: இந்தியாவை குறிவைக்கிறது!

India
Typography

 

இஸ்லாமாபாத், அக்.12- பாகிஸ்தான் ராணுவம் அணுவாயுதங்களை பதுக்கி வைத்துள்ள பாதாளச் சுரங்கங்கள் குறித்த தகவல்கள் வெளியாகி உள்ளன. அண்மையில் ஐ.நா சபையில் பேசிய பாகிஸ்தான் இராணுவ அதிகாரி, பாகிஸ்தானில் 30க்கும் மேற்பட்ட சிறிய வகையிலான ஏவுகணைகளை பத்திரமாக பதுக்கி வைத்துள்ளோம் என்ற தகவலை  தெரிவித்திருந்தார். 

இதற்கு உலக அளவில் கடுமையான எதிர்ப்பு கிளம்பியது. பாகிஸ்தான் பதுக்கியுள்ள அணு ஆயுதங்களை தீவிரவாதிகள் எடுத்துச் செல்ல வாய்ப்புகள் அதிகம் உள்ளது என்ற குற்றச்சாட்டுகள் எழுந்தன. இந்த நிலையில், பாகிஸ்தான் அணுவாயுதங்களை மறைத்து வைக்க பயன்படுத்திய சுரங்கங்கள் குறித்த தகவல்கள் வெளியாகி பெரும் சர்ச்சையை உண்டாக்கி இருக்கிறது. 

மேலும், இந்தச் சுரங்கங்களை பாகிஸ்தான் இந்தியாவின் தலைநகர் டில்லியிருந்து 750 கி.மீ தொலைவிலும், பஞ்சாப்பிலிருந்து 350 கி.மீ தொலைவிலும், அமிர்தசரசிலிருந்து 550 கி.மீ தொலைவிலும் இந்தியாவை குறிவைத்து தாக்கும் அளவில் பூமிக்கடியில் அமைத்துள்ளது. இந்த சுரங்கங்கள் 10 மீட்டர் உயரமும் 10 மீட்டர் அகலமும் கொண்டு 5 கி.மீ வரையிலும் தோண்டப்பட்டுள்ளது. 

இந்த சுரங்கத்தில் மேல் பகுதியில் இந்திய எல்லைகளை இணைக்கும் சாலைகள் இருக்கின்றன. இந்த சுரங்கத்திற்குள் 12 முதல் 14 அணு ஆயுதங்களை பதுக்கி வைத்திருக்க வாய்ப்புகள் அதிகம்  என உளவுத்துறை கூறியுள்ளது. மேலும் இந்த சுரங்கத்தை சுற்றி பாதுகாப்பாக முள்வேலிகள் அமைக்கப்படுள்ளது குறிப்பிடத்தக்கது

BLOG COMMENTS POWERED BY DISQUS