நடுரோட்டில் பாடகி சுட்டுக்கொலை! தங்கையின் கணவன் பிடிபட்டான்!

India
Typography

 

புதுடில்லி, அக்.20- பிரபல பாடகியும் நடனமணியுமான ஹர்ஷிதா தஹியா என்பவர் மர்மக் நபர்களால் நடுரோட்டில் பரிதாபகரமாக சுட்டுக் கொல்லப்பட்டார். 

பல இடங்களில் கச்சேரிகள், நிகழ்ச்சிகள் நடத்தி வரும் இவருக்கு பஞ்சாபில் இப்படியொரு துயரம் அரங்கேற்றியுள்ளது. அவரை மர்ம நபர்கள் 8 முறை சுட்டுக் கொன்றுள்ளனர்.

பஞ்சாப் மாநிலம் பானிபட் பகுதியில் கச்சேரியை முடித்து காரில் டில்லி திரும்பியுள்ளார். அப்போது அவ்வழியே வந்த இரு மர்ம நபர்கள் அவரது காரை மடக்கி பிடித்து உள்ளே இருந்த அவரின் தோழி நிஷாவையும், டிரைவர் சஞ்சீவையும் மிரட்டி வெளியேற்றியுள்ளனர்.

காருக்கு உள்ளிருந்த ஹர்ஷிதாவை துப்பாக்கியால் 8 முறை தலை,கழுத்து பகுதியில் சுட்டுக் கொன்றுள்ளனர். இதனால் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்தக் கோக்ச் சம்பவம் பலரையும் பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கி இருக்கிறது.

பாடகி ஹர்ஷிதா தஹியாவின் கொலையில் அவரது தங்கையின் கணவர் தினேஷ் மாத்தூர் என்பவர் சம்பந்தப்பட்டுள்ளார் என்று போலீசார் கண்டுபிடித்துள்ளனர். ஹர்ஷிதாவின் அம்மாவையும் கடந்த 2014-ம் ஆண்டு கொன்றது இந்த ஆசாமி தானம்.

2013-ஆம் ஆண்டில் தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாக ஹர்ஷிதா ஏற்கெனவே தினேஷ் மாத்தூர் மீது குற்றம் சாட்டியுள்ளார். ஹர்ஷிதாவின் அம்மாவை கொலை செய்த வழக்கில் சாட்சியாக ஹர்ஷிதா இருப்பதால் அவரை தினேஷ் கொலை செய்ததாகக் கூறப்படுகிறது.

பாடகி ஹர்ஷிதாவின் தங்கை லதா, தனது அக்காவை கொன்றது தனது கணவர் தான் எனக் கூறியிருக்கிறார். எங்கள் அம்மாவின் கொலை வழக்கில் ஹர்ஷிதா சாட்சியாக இருந்ததால் அவளையும் தீர்த்துக் கட்டிவிட்டார் எனக் கூறியிருக்கிறார் லதா.

 

 

BLOG COMMENTS POWERED BY DISQUS