ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவை பாராட்டினார் பில் கேட்ஸ்

India
Typography

 

ஹைதராபாத், நவ.18- இந்தியாவுக்கு வருகை மேற்கொண்டிருக்கும் உலகப் பிரசித்திபெற்ற மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் இணை நிறுவனரும் உலகப் பெரும் கோடீஸ்வரருமான பில் கேட்ஸ் மற்றும் அவருடைய மனைவி மெலிண்டா பில் கேட்ஸ் ஆகியோர் ஆந்திரா முதல்வர் சந்திரபாபு நாயுடுவைச் சந்தித்தனர்.

இங்கு நடைபெறும் விவசாய தொழில்நுட்ப உச்சநிலை மாநாட்டிற்காக பில் கேட்ஸ் இந்தியாவுக்கு வருகை புரிந்துள்ளார். விவசாயத் துறையில் நவீன தொழில்நுட்பத்தை உட்புகுத்தி, பயன்படுத்தி வரும் ஆந்திரா அரசாங்கத்தை பில் கேட்ஸ் பெரிதும் பாராட்டினார். 

இந்தியா பொருளாதாரத்தை மேம்படுத்துவதில் விவசாயத்தின் முக்கியத்துவம் குறித்து பில் கேட்ஸ் பல்வேறு மதிப்பீடுகளைச் செய்து வருகிறார். 

இந்திய மத்திய அரசாங்கம் மற்றும் ஆந்திர அரசாங்கம் ஆகியவற்றுக்கு சுகாதாரம், விவசாயம் மற்றும் தொழில்நுட்பத் துறைகளில் எந்த அளவுக்கு உதவ முடியும் என்பது குறித்து பரிசீலிப்பதே பில் கேட்ஸின் இந்திய வருகைக்கான நோக்கமாகும்.

இங்குள்ள மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதில் சிறிய மற்றும் பெரிய அமைப்புக்களுடன் இணைந்து உதவும் செயலில் ஈடுபட, பில் கேட்ஸ் மற்றும் மெலிண்டா பில் கேட்ஸ் ஆகியோரின் அறநிறுவனங்கள் திட்டமிட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

ஆந்திராவின் விவசாய தொழில்நுட்ப உச்சநிலை மாநாட்டில் கலந்து கொண்டு பேசிய பில் கேட்ஸ், மாநில அரசாங்கம் விவசாயத் துறையில் நவீன தொழில் நுட்பங்களை பயன்படுத்தி வருவது குறித்து முதல்வர் சந்திரபாபு நாயுடுவைப் பெரிதும் பாராட்டினார்.  

 

 

 

 

 

BLOG COMMENTS POWERED BY DISQUS