உலகிலேயே தலைசிறந்த கடற்படை சோழர்களுடையதே! -மோடி கருத்து

India
Typography

 

சென்னை, நவ.26- உல்கிலேயே தலைசிறந்த கடற்படையாக திகழ்ந்தது சோழர்களின் கடற்படைதான் என்று இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி வர்ணித்தார்.

.இந்தியாவின் கடற்படை தினம் டிசம்பர் 4-ஆம் தேதி கொண்டாடப் படுவதை ஒட்டி.  இந்திய கடற்படையின் வலிமை பற்றி 'மான் கி பாத்' நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசிய போது அவர் கூறியதாவது;

 நம்முடைய தேசத்தின்  கடற்படை வலிமைக்கு முன்னுதாரணமாக திகழ்ந்தது சோழர்கள்தான். உலகின் மிகச் சிறந்ததாக அந்தப் படை விளங்கியது.

அந்தக் கடற்படை அதன் உச்சகட்ட வெற்றிகளைப் பெற்றது. சோழர் கடற்படைதான் உலகிலேயே பெண்களின் போர்த் திறமையை முதன் முதலில் வெளிப்படுத்தியது. 

கடற்படைகளில் பெண்களைப் பிற்காலத்தில்தான் சேர்த்துக் கொண்டார்கள். ஆனால் அந்தக் காலத்திலேயே சோழர் கடற்படையில்; பெண்கள் பெரும் எண்ணிக்கையில் இடம் பெற்றிருந்தனர். 

சுமார் 900 ஆண்டுகளுக்கு முன்பே சோழர் கடற்படையில் பெண்கள் மிக முக்கியப் பொறுப்புகளை வகித்தனர்.  நாம் கடற்படை வலிமையைப் பற்றி பேசுகிறபோது சத்திரபதி சிவாஜியின் கடற்படையை புறக்கணித்துவிட முடியாது.   டிசம்பர் 4 ஆம் தேதி கடற்படை தினத்தை கொண்டாட இருக்கிறோம். கடற்படையோடு இணைந்துள்ள அனைவருக்கும் வாழ்த்துகள்.  இவ்வாறு பிரதமர் மோடி கூறினார்.

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

BLOG COMMENTS POWERED BY DISQUS