தொழிலாளியை உயிரோடு எரித்து வீடியோ எடுத்த கொலையாளி! 

India
Typography

 ஜெய்ப்பூர், டிச.7- காதல் விவகாரத்தில் இளைஞர் வெட்டப்பட்டு உயிரோடு எரித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் ராஜஸ்தானில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அக்கொலைச் சம்பவத்தை வீடியோவாக கொலையாளிகள் பதிவு செய்துள்ள நிலையில், அது சமூக வலைத்தளங்களில் பரவலாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. 

மேற்கு வங்க மாநிலம் மால்டா மாவட்டத்தை சேர்ந்த முகமது அப்ரசுல் (வயது 48) என்ற கூலித் கட்டுமானத் தொழிலாளியை சம்புலால் ரேகர் என்ற ஆடவன் கொலை செய்ததாக காவல்துறை புகார் கொடுக்கப்பட்டுள்ளது. 

சம்புலால் ரேகர், தனது நண்பன் ஒருவனோடு சேர்ந்து அப்ரசுலை கோடாரியால் வெட்டிக் கொலை செய்துள்ளான். கட்டுமான வேலை ஒன்று இருப்பதாக கூறி, அப்ரசுலை ஒரு இடத்திற்கு வரவழைத்து, அங்கு தன் நண்பனுடன் சேர்ந்து, சம்புலால் அப்சுரலை கொலை செய்துள்ளான். 

அப்சுரலை தாக்குவது தொடங்கி, அவரை கோடாரியால் வெட்டி, உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த அவரை உயிரோடு எரியூட்டும் அனைத்து காட்சிகளையும் அந்த கொடூரனின் நண்பன் வீடியோவில் பதிவு செய்துள்ளான். தன்னை விட்டு விடுமாறு, அப்ரசுல் கெஞ்சும் காட்சிகளும் அதில் இடம் பெற்றுள்ளன.    

கொலையாளியின் சகோதரியுடன், அப்ரசுல் கள்ளத் தொடர்பு வைத்திருந்ததாகவும், அதற்கு பழிவாங்க நடவடிக்கையாக இந்தக் கொலைச் சம்பவம் நிகழ்த்தப் பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த வீடியோவில் ஒரு பெண் இருப்பதும் பதிவாகியுள்ளது. 

அந்தக் கொடூரக் காட்சிகள் அடங்கிய வீடியோ ஆதாரங்கள் கொண்டு, போலீசார் சம்பவம் நிகழ்ந்த இடத்திற்கு விரைந்து, பாதி எரிந்த நிலையில் கிடந்த அப்ரசுலின் உடலை கைப்பற்றியுள்ளனர். தலைமறைவாகியுள்ள கொலையாளியை போலீசார் தேடி வருகின்றனர். 

 

 

 

 

 

 

 

 

 

 

 

BLOG COMMENTS POWERED BY DISQUS