'உன்னைக் காதலிக்கிறேன்' என நயன்தாரா அனுப்பிய செய்தியால் அகப்பட்ட திருடன்!

India
Typography

பாட்னா, டிசம்.24- பீகாரில் ஒரு திருடனைப் பிடிப்பதற்காக நடிகை நயன்தாரா புகைப்படத்துடன் 'உங்களை நான் காதலிக்கிறேன்' என்று கைத்தொலை பேசியில் செய்தி அனுப்பி ஆசாமியை மயக்கி 'லபக்'கென்று அமுக்கிய பெண் போலீஸ் அதிகாரி ஒருவருக்கு சமூக வலைத்தளங்களில்ஏகப்பட்ட பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் உள்ளன.

பீகாரில் மாநில அமைச்சராக இருந்து வரும் சங்காய் குமாரின் விலையுயர்ந்த கைத்தொலைபேசி திருடப்பட்டதைத் தொடர்ந்து அது குறித்து அவர் போலீசில் புகார் செய்திருந்தார். இதன் அடிப்படையில் இதனை விசாரிக்கும் பொறுப்பு மதுபாலா என்ற போலீஸ் அதிகாரியிடம் ஒப்படைக்கப்பட்டி ருந்தது.

பின்னர், அவர் அந்தக் கைத்தொலைபேசிக்கு வரும் அழைப்புகளை இரகசியமாகக் கண்காணிக்கத் தொடங்கினார். அப்போது அந்தக் கைத்தொலைபேசி முகம்மட் ஹஸ்னான் என்பவரிடம் இருப்பது தெரிய வந்தது.

அவனைக் கைது செய்ய மறைமுகமாக போலீசார் பல முறை முயன்றனர் என்றாலும் கில்லாடித்தனமாக அவன் தப்பித்து வந்தான். எப்படியாவது அவனைக் கைது செய்ய வேண்டும் என்று முடிவு செய்த பெண் போலீஸ் அதிகாரியான மதுபாலா , பின்னர் எதேச்சையாக போன் செய்வது போல பாசாங்கு காட்டி, அந்த நபருக்கு போன் செய்யத் தொடங்கினார்.

சில நாள்கள் தொடர்ந்த இந்தப் பேச்சுக்குப் பின்னர் அவனிடம் இனிப்பாக பேசி, அவனை விரும்புவதாகவும் நேரில் சந்திக்க ஆசைப்படுவதாகவும் கூறினார். தொடக்கத்தில் சந்திக்க மறுத்த அந்தத் திருடன் பின்னர் ஒப்புக்கொண்டான்.

அந்த பெண்ணைப் பார்க்க ஆசைப்பட்ட  அவன், போட்டோவை அனுப்பி வைக்குமாறு கேட்டான். இதனை அடுத்து மதுபாலா, நடிகை நயன்தாராவின் படத்தை அனுப்பி வைத்து 'உன்னை ரொம்பவும் காதலிக்கிறேன்' என்ற செய்தியையும் நயன்தாரவின் புரோ ஃபைலை அனுப்பி வைத்தார்.

படத்தில் இருப்பது நடிகை என்று அறியாத அந்தத் திருடன், பின்னர் ஒரு குறிப்பிட்ட இடத்திற்கு அவரைச் சந்திப்பதற்காக வந்தான். அந்த நேரத்தில் மாறு வேடத்தில் இருந்த மதுபாலா அந்தத் திருடனைக் கைது செய்து போனை மீட்டார். ஆனால், விசாரணையின் போது இவனொரு குண்டர் இயக்கத்தைச் சேர்ந்தவன் எனத் தெரிய வந்துள்ளது.

 

BLOG COMMENTS POWERED BY DISQUS