நடிகர் ஹிருத்திக் ரோஷனுக்கு திருமணம்? முன்னாள் மனைவியை மணக்கிறார்?

India
Typography

மும்பை, ஜன.17- உலகின் மிக அழகான நடிகராக தேர்வு செய்யப்பட்டுள்ள ஹிருத்திக் ரோஷன் தனது முன்னாள் மனைவி சூசன் கான்னை மீண்டும் திருமணம் செய்யக்கூடும் என்று தகவல் வெளியாகியுள்ளது. 

பாலிவுட்டின் மிகத் தேர்ந்த நடிகரான ஹிருத்திக் ரோஷனும், சூசன் கானும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். அவர்களுக்கு ரிஹான், ரிதான் என்று இரண்டு மகன்கள் உள்ளனர். திருமணமாகி 14 ஆண்டுகள் கழித்து அவ்விருவரும் விவாகரத்து செய்துக் கொண்டனர். 

விவாகரத்திற்கு பிறகும் ஹிருத்திக் மற்றும் சூசன் அடிக்கடி ஜோடியாகவே வெளியே செல்கிறார்கள். தங்களின் பிள்ளைகளின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு அவ்விருவரும் அடிக்கடி சந்தித்து பேசுவதாக சூசன் தெரிவித்துள்ளார்.

சூசனும், ஹிருத்திக்கும் தங்களுக்கு இடையிலான பிரச்சனைகளை தீர்த்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் விரைவில் மீண்டும் திருமணம் செய்து கொள்வார்கள் என்று அவ்விருவருக்கும் நெருக்கமான ஒருவர் தெரிவித்துள்ளார். 

அவ்விருவரும், தங்களின் மகன்களுடன் தியேட்டர், ஹோட்டல் மற்றும் விடுமுறையை கழிக்க வெளிநாடுகளுக்கு ஒன்றாகச் சென்று வருகின்றனர்.  

தங்களின் பிள்ளைகளை அவ்விருவரும் ஒன்றாக வளர்ப்பது என்று முடிவு செய்துள்ளனர். அதன் அடிப்படையிலேயே அவ்விருவரும் அடிக்கடி சந்தித்து வருகின்றனர். அவர்களுக்கு இடையே மீண்டும் காதல் மலரவில்லை. அவர்கள் மீண்டும் சேர வாய்ப்பே இல்லை என்று ஹிருத்திக்கின் குடும்பத்தைச் சேர்ந்த ஒருவர் தெரிவித்துள்ளார்.

 

 

 

 

 

 

 

 

 

BLOG COMMENTS POWERED BY DISQUS