பில்லி சூனியம் செய்வினையில் பாலிவுட்  நடிகர், நடிகைகள்! அதிர்ச்சி தகவல்

India
Typography

மும்பை, பிப்.14- பட வாய்ப்புகளைப் பெற, அடுத்தவர்கள் வாய்ப்பை தட்டிப் பறிக்க பாலிவுட் பிரபலங்கள் பில்லி, சூனியம், செய்வினைகளில் ஈடுபடும் பகிர் தகவல் வெளியாகி இருக்கிறது.

பட வாய்ப்புகளை பெற திரையுலகப் பிரபலங்கள் இடையே கடும் போட்டி நிலவுகிறது. ஆனால் பாலிவுட்காரர்கள் பட வாய்ப்புகளைப் பெற, அடுத்தவர்களின் வாய்ப்பைக் கெடுக்க பில்லி, சூனியம், செய்வினை என்கிற அளவுக்குப் போகிறார்கள் என்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

நடிகர் ரன்பிர் கபூர், நடிகை கத்ரீனா கைஃப் வாழ்க்கையிலும் விளையாடியுள்ளனர். தீபிகா படுகோனேவை காதலித்துக் கொண்டிருந்த ரன்பிர் கத்ரீனா மீது காதல் கொண்டார். இதையடுத்து தீபிகாவை பிரிந்து கத்ரீனாவுடன் சேர்ந்து வீடு எடுத்தார்.

புது வீட்டில் ஏதோ சரியில்லை என்பதை உணர்ந்த ரன்பீர், கத்ரீனா மந்திரவாதியை அழைத்து சில பூஜைகள் செய்துள்ளனர். பொறாமை பிடித்த நண்பர் ஒருவர் தான் அவர்களின் வீடு மற்றும் அவர்களுக்கு எதிராக ஏதோ ஏவல் வைத்ததாகவும், அதனால் தான் அவர்களுக்கு பிரச்சனையாக உள்ளது என்றும் அந்த மந்திரவாதி தெரிவித்துள்ளார்.

திரையுலகப் பிரபலங்கள் சக கலைஞர்களுக்குச் செய்வினை செய்வது , ஏவல் பில்லி சூனியம் செய்வது என்ற இரகசிய வேலைகளில் ஈடுபட்டு எதிரிகளை அழிக்க முயற்சி செய்கிறார்கள். 

பாலிவுட் பிரபலங்கள் இப்படி பில்லி சூனியம் செய்வினையை நம்புவதால் மும்பையில் வசிக்கும் மந்திரவாதிகளுக்கு படுஜோராக தொழில் நடக்கிறதாம்.

ஒரு நடிகை மந்திரவாதியை அணுகி 'வூடூ'  பொம்மையில் எத்தனை ஊசி குத்தினால் எதிரிக்கு நன்றாக வலிக்கும் என்று கேட்டுள்ளார். அந்த நடிகையின் பெயரை தெரிவித்த மந்திரவாதி மறுத்துவிட்டார்.

அண்மையில்  திருமணமான முன்னாள் பாலிவுட் நடிகையின் படுக்கையறைக்கு சென்ற இயக்குனர் ஒருவர் அதிர்ச்சி அடைந்துள்ளார். அவர் நடிக்க வந்ததில் இருந்து பில்லி சூனியத்தை தான் நம்பி இருந்திருக்கிறார் என்பது அவரின் அறையில் இருந்த பொருட்கள் மூலம் தெரிய வந்துள்ளது.

அந்த நடிகையின் படுக்கையறையில் இறகுகள், எலும்புகள், கண்ணாடிப் பொருட்கள் இருந்துள்ளன. அறை வெளிச்சமே இல்லாமல் இருட்டாக இருந்துள்ளது. அந்த நடிகை தனது காதலரான நடிகருக்கு எதிராக கூட பில்லி சூனியத்தை நாடியுள்ளார்.

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

BLOG COMMENTS POWERED BY DISQUS