23 வயது பெண்ணுடன் 52 வயது நடிகருக்கு காதலா? தாறுமாறாக வாரியெடுக்கும் வலைத்தள வாசிகள்!

India
Typography

மும்பை, பிப்.19- பிரபல நடிகர்கள் காதலில் விழுவது ஒன்றும் புதிதல்ல, அதுவும் சமூக வளைத் தளங்கள் விரிவடைந்த காலக் கட்டத்தில் இருந்து ஏதாவது செய்தி வந்து விட்டால் போதும் அது தீயாய் பரவி விடும்.

அந்த வகையில் 52 வயதாகும் பிரபல வில்லன் நடிகர் மிலிந்த் சோமன், 23 வயதான அங்கிதா கோவார்  என்ற இளம்பெண்ணை காதலித்து வருவது பற்றி கடும் விமர்சங்கள்  எழுந்தன. 

இதனை அவரது ரசிகர்களும் ஆதரிக்கவில்லை, பொதுமக்களும் ஆதரிக்கவில்லை. இருப்பினும் அவர்கள் வெளியில் ஒன்றாக செல்வதை  நிறுத்தவில்லை.

இந்நிலையில் அவர்கள் இருவரும் அடுத்த வருடம் திருமணம் செய்து கொள்ளவிருப்பதாக தெரிவித்துள்ளனர். மிலிந்த் சோமன் அண்மையில் அங்கிதாவின் குடும்பத்தை சந்தித்து பேசியுள்ளார். அவர்களும் சம்மதம் தெரிவித்து விட்டனர்.

இந்நிலையில் இவர்களின் காதல் கதை சமூக வலைதளங்களில் தாறுமாறாக விமர்சனத்திற்கு உள்ளாகி வருகிறது. குறிப்பாக, இவ்வளவு வயது வித்தியாசத்தில் காதலி தேவையா? என மிலிந்த் சமனை வாரியெடுக்கிறார்கள் வலைத்தளவாசிகள்.

அதேவேளையில், இவர்களின் காதலுக்கு ஆதரவும் கிடைத்து வருகிறது. காதல் மனம் சம்பந்தப்பட்டது. உடல், வயது சம்பந்தப்பட்டது அல்ல.  மேலும் இது அவர்களின் சொந்த விவகாரம்.  இதில் ஏன் மூக்கை நுழைக்க வேண்டும் என்று சிலர் பதிலடி கொடுத்து வருகிறார்கள்.

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

BLOG COMMENTS POWERED BY DISQUS