ஓங்கி அடிச்சா ஒன்றரை டன் வெய்ட் ‘சிங்கம்’ இனி, கார்ட்டூனிலும்  கலக்கப் போகிறது!

India
Typography

மும்பை, பிப்.22- தமிழ்த் திரையுலகில் வெளிவந்த போலீஸ் படங்களிலேயே மூன்று பாகங்களாக  வந்த ஒரே படமான சூர்யா நடித்த  ‘சிங்கம்’தான்.  ரசிகர்கள் மத்தியில் ஓங்கி அடித்த ‘சிங்கம்’இனி கார்ட்டூனிலும் ! ‘லிட்டில் சிங்கமாக'  அனிமேஷன் தொடரில் வெளிவரவிருக்கிறது.

 சிங்கம்,  சிங்கம் 2, சிங்கம் 3 எனத் தொடர்ந்து வெளிவந்த இந்த மூன்று பாகங்களையும் இயக்கியவர் ஹரி. இந்த மூன்று பாகங்களில் இரண்டு பாகங்கள் ரோகித் ஷெட்டி இயக்க ஹிந்தியிலும் மறுவடிவம் கண்டன. 

ரோகித் ஷெட்டியின் நிறுவனம் அனிமேஷன் தொடர் ஒன்றை உருவாக்கியுள்ளது. கோடை விடுமுறையில் ஏப்ரல் மாதம் முதல் இந்தத்  தொடர் குழந்தைகளுக்காக டிஸ்கவரி கிட்ஸ் சேனலில் ஒளிபரப்பாக உள்ளது. 

‘சிங்கம்’ படத்தின் புகழ் ஏற்கெனவே சிறுவர்களை சென்றடைந்த ஒன்று. இப்போது அனிமேஷன் வடிவிலும் மீண்டும்  அவர்களைக் கவர உள்ளது.

 முன்னோட்டம் வெளியானதைத் தொடர்ந்து 'லிட்டில் சிங்கம்' சீரியலைப் பார்க்க இப்போதே குழந்தைகள் ஆர்வமாகி வருகிறார்களாம்.

 

 

BLOG COMMENTS POWERED BY DISQUS