கல்யாணப் பரிசை பிரித்த போது வெடித்தது! மணமகன் பலி! மணமகள் கவலைக்கிடம்!

India
Typography

புவனேஸ்வர், பிப்.24- திருமணம் முடிந்த ஐந்தாம் நாள் வீட்டில் குடும்பத்தினருடன் பரிசுப் பொருள்களை மணமக்கள் பிரித்த போது  ஒரு பரிசு பொட்டலம் பயங்கரச் சத்தத்துடன் வெடித்துச் சிதறியது. மணகன் அந்த இடத்திலேயே மாண்டார். மணமகள் உயிருக்குப் போராடிக் கொண்டிருக்கிறார். இவர்களின் பாட்டியும் பலியானார்.

இந்தத் திடுக்கிடும் சம்பவம் ஒடிசா மாநிலத்தில், போலாங்கிர் மாவட்டத்தில் பர்லா என்ற இடத்தில் நடந்தது. ஐந்து நாள்களுக்கு முன்னர் தான் இந்தத் தம்பதியரின் திருமணம் சிறப்பாக நடந்தது. 

புதுமணத் தம்பதியர் குடும்பத்துடன் பரிசுப் பொருள்களைப் பிரித்து பார்த்துக் கொண்டிருந்த போது  நடந்த வெடிப்புச் சம்பவம் குறித்து  விசாரணை நடத்தி வருவதாகப் போலீசார் கூறினர். தடவியல் நிபுணர்களின் உதவியுடன் சம்பவம் நடந்த வீட்டில் ஆய்வு நடத்தப்பட்டுள்ளது என்று போலீசார் தெரிவித்தனர்.

அந்தப் பரிசுப் பொருளைக் கொடுத்தது யார்? என்று கண்டறிய தாங்கள் தீவிர முயற்சி யில் ஈடுபட்டுள்ளதாக அவர்கள் கூறினர். இந்த வெடிப்பினால், மணமகனின் உடல் கடுமையாகச் சேதமடைந்தது. மணமகளின் நிலை மிகக் கவலைக்கிடமாக இருப்பதாகவும் இவர்களின் பாட்டி மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட பின்னர் உயிரிழந்ததாகவும் பொலீஸ் அதிகாரி சேசாதேவா பாரிகா தெரிவித்தார்.

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

BLOG COMMENTS POWERED BY DISQUS